இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.80-க்கும், டீசல், ரூ92.39-க்கும், கேஸ் ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை குடிநீர் ஏரிகளின் நீர்இருப்பு நிலவரம்: 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2,415 மில்லியன் கனஅடியாக உள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 90 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 308 மில்லியன் கனஅடியாக உள்ளது.
இந்தியா – தென்ஆப்பிரிக்க முதல் டி20 போட்டி: தென்ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று டர்பனில் நடைபெறுகிறது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Nov 08, 2024 20:34 ISTதி.மு.க கூட்டணியை யாரும் உடைக்கவோ, கலைக்கவோ முடியாது - ப. சிதம்பரம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்: “தி.மு.க கூட்டணியை யாரும் உடைக்கவோ, கலைக்கவோ முடியாது; ஸ்டாலின் தலைமையில் வலிமையாக உள்ள கூட்டணி அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறும்” என்று கூறினார்.
-
Nov 08, 2024 20:16 ISTகடலூர் மஞ்சக்கொல்லை விவகாரம்: வி.சி.க நிர்வாகிகள் நீக்கம்
கடலூர் மாவட்டம், மஞ்சக்கொல்லை விவகாரத்தில் தொகுதி செயலாளர் செல்லப்பன், மகளிர் விடுதலை இயக்க மாநில நிர்வாகி செல்வி முருகன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வி.சி.க-வின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக செல்லப்பன், செல்வி முருகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Nov 08, 2024 20:02 ISTமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் மரணம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் மாரடைப்பால் காலமானார். முன்னாள் எம்.எல்.ஏ-வும், தி.மு.க செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் தனது மகன் திருமண விழாவுக்காக திருப்பதி சென்று இருந்தார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு கோவையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
-
Nov 08, 2024 19:55 IST‘ஆவின் பால் விலையை உயர்த்த எந்த திட்டமும் இல்லை’ - அமைச்சர் ராஜ கண்ணப்பன்
பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்: “ஆவின் பால் விலையை உயர்த்த எந்த திட்டமும் இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆரோக்யா பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில், ஆவின் பால் உயர்த்த எந்த திட்டமும் இல்லை என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
-
Nov 08, 2024 19:22 ISTஅமரன் படத்தை தடை செய்ய கோரி எஸ்.டி.பி.ஐ போராட்டம்; போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு
அமரன் படத்தை தடை செய்ய கோரி கோவையில் திரையரங்கை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமரன் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்ததாக தெரிவித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், திரையரங்கம் முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் குவித்துள்ளனர். போராட்டத்தின்போது, போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
-
Nov 08, 2024 19:00 ISTசீமானுக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து
நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளையொட்டி பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
Nov 08, 2024 18:32 ISTஆந்திராவில் முதல்முறையாக நீர்வழி விமான சேவை
ஆந்திராவில் முதல்முறையாக நீர்வழி விமான சேவை தொடங்கப்படவுள்ளது. பிரகாசம் அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை இயக்கப்பட உள்ளது. இச்சேவையை சோதனை முறையில் நாளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமோகன் நாயுடு இணைந்து தொடங்கிவைக்கிறார்.
-
Nov 08, 2024 18:25 ISTமுதல்முறையாக தூர்வாரப்படும் மேட்டூர் அணை
90 ஆண்டுகளில் மேட்டூர் அணை முதல் முறையாக தூர்வாரப்பட உள்ளது. சோதனை அடிப்படையில் மேட்டூர் அணையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தூர்வார தமிழ்நாடு நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதியை பெற ஆலோசகர்களை நியமனம் செய்ய நீர்வளத்துறை டெண்டர் அறிவித்துள்ளது. மத்திய அரசின் நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை மையம், தமிழக நீர்வளத்துறை இணைந்து, சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்துள்ளது. சாத்திய கூறு அறிக்கையின்படி மேட்டூர் அணையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. 1934-ல் கட்டப்பட்ட மேட்டூர் அணை ஏறத்தாழ 90 ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ளது
-
Nov 08, 2024 18:05 IST`கங்குவா' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் `கங்குவா' திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது
-
Nov 08, 2024 18:04 ISTஇ பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்; ஐகோர்ட் உத்தரவு
உதகை, கொடைக்கானலுக்கு இ பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Nov 08, 2024 17:48 ISTமாநாட்டிற்கு நிலம் வழங்கியவர்களுக்கு விஜய் விருந்து
விக்கிரவாண்டியில் நடந்த த.வெ.க மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு நடிகர் விஜய் விருந்து வழங்குகிறார். சென்னை பனையூரில் உள்ள த.வெ.க அலுவலகத்தில் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் மற்றும் மாநாட்டு திடலுக்காக 230 ஏக்கர் நிலம் வரை விவசாயிகள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வழங்கியிருந்தனர். சுமார் 25 பேரை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அழைத்து விஜய் கவுரவிக்கிறார். நிலம் தந்தவர்களுக்கு தனது கைகளால் உணவு பரிமாறுகிறார் விஜய்
-
Nov 08, 2024 17:34 ISTஇனி டாஸ்மாக்கில் வாங்கும் மதுவுக்கு பில்; நிர்வாகம் அறிவிப்பு
இனி டாஸ்மாக்கில் வாங்கும் மதுவுக்கு பில் வழங்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணத்தை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மாவட்ட மேலாளர் தலைமையில் நாளை மற்றும் நாளை மறுநாள் தாலுகா வாரியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் 2 வாரங்களில், வாங்கும் மது பாட்டில்களுக்கு பில் கொடுப்பது நடைமுறைக்கு வருகிறது. டாஸ்மாக் கடைகளை கணினி மூலம் ஒருங்கிணைக்க தனி 'சாப்ட்வேர்' உருவாக்கி டிஜிட்டல் மயமாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடையில் எவ்வளவு மது இருப்பு மற்றும் விற்பனை குறித்த விவரங்களை கணினி மூலம் அறிய முடியும்
-
Nov 08, 2024 17:14 IST24 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Nov 08, 2024 16:54 ISTகங்குவா படத்திற்கு தடையில்லை - உயர்நீதிமன்றம் உத்தரவு
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு முழு தொகையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்திய நிலையில் நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Nov 08, 2024 16:27 ISTமேட்டூர் அணையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை தூர்வார நீர்வளத்துறை திட்டம்
1934 ஆம் ஆண்டு கட்டப்பட்டு சுமார் 90 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த மேட்டூர் அணையின் ஒரு பகுதியை மட்டும் தூர்வார நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
-
Nov 08, 2024 16:25 IST77 ஆண்டுகள் பழமையான திருமண கேக் - ரூ. 2.40 லட்சத்திற்கு ஏலம்
1947 ஆம் ஆண்டு இளவரசை பிலிப்ஸ் - பிரிட்டன் அரசி எலிசபெத்தின் திருமண கேக்கின் ஒரு பகுதி பதப்படுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது 2.40 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளதாக கூறப்படுகிறது.
-
Nov 08, 2024 16:22 ISTசிறைக்காவலர்கள் விவகாரம் - உள்துறைக்கு உத்தரவு
சிறைத்துறை அதிகாரிகள், சிறைக்காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதாக எழுந்த புகாரையடுத்து விசாரணை நடத்த உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Nov 08, 2024 15:45 ISTவிடைபெற்றார் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட்..
உச்சநீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியான டி.ஒய் சந்திரசூட்டின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், மீதமுள்ள வழக்குகளை முடித்து வைத்து விடைபெற்றார்.
-
Nov 08, 2024 15:30 ISTநாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் நாளை மறுநாள் பள்ளி,கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 08, 2024 15:27 IST8 ஆண்டை நிறைவு செய்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை
இந்தியாவில் பிரதமர் மோடியால் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இன்றோடு 8 ஆண்டுகளை நிறைவு செய்தது.
-
Nov 08, 2024 15:24 IST"ஆவின் பால் விலை உயர்த்தப்படாது" - அமைச்சர் ராஜகண்ணப்பன்
வெளி சந்தையில் விற்கும் பால் விலையை விட ஆவின் பால் விலை குறைவு தான், ஆவின் பால் விலை உயர்த்துவது குறித்து எந்த திட்டமும் இல்லை என்று ஈரோட்டில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். அமுல் பால் ஆவினுக்கு போட்டியாக கருதவில்லை, ஆவின் கடைகளில் மற்ற பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
-
Nov 08, 2024 15:03 ISTஎந்திரக் கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!
சென்னையில் இருந்து 172 பேருடன் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் எந்திரக் கோளாறு காரணமாக விமான நிலைய ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது
கோளாறு கண்டறியப்பட்டவுடனேயே விமானி அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு. விமானம் 7 மணி நேரம் தாமதமாக இன்று மாலை 5 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்படுள்ளது.
-
Nov 08, 2024 14:55 ISTதி.மு.க வழக்கு - இ.பி.எஸ் பதிலளிக்க உத்தரவு
ஜாபர்சாதிக் உடன் திமுகவை தொடர்புப்படுத்தி பேசுவதாக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் ஈபிஎஸ் பதிலளிக்க டிச.3 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
ஜாபர்சாதிக் உடன் திமுகவை தொடர்புப்படுத்தி பேச தடை விதிக்கவும் தி.மு.க தரப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
-
Nov 08, 2024 14:14 ISTவிடைபெற்றார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவிக்காலத்தில் கடைசி பணிநாளான இன்று, மீதமிருந்த வழக்கு விசாரணைகளை முடித்துவிட்டு விடைபெற்றார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.
-
Nov 08, 2024 13:57 ISTகாலிஸ்தான் அமைப்பினரைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் - 11 பேர் கைது
கனடா நாட்டில் இந்து கோயில்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதவி ஆணையர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தில் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 11 பேர் மட்டுமே ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அர்ஜுன் சம்பத்தின் கார் ஓட்டுநரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதானதால், அவரது கார், சாலையில் கேட்பாரற்று நின்றது. பின்னர், காரை எடுத்துச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
-
Nov 08, 2024 13:56 ISTஅம்பேக்தர் கொள்கை வழிகாட்டி - ராமதாஸ்
“தமிழ்நாட்டில் இன்றுள்ள அரசியல் கட்சிகளில் அண்ணல் அம்பேக்தரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட முதல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான்
தமிழ்நாட்டில் சாதிக் கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் கடலூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கரின் சிலைகளை உடைக்க பாட்டாளி மக்கள் கட்சி திட்டமிட்டிருப்பதாக காவல்துறையினர் வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்” என்று பா.ம.க நிறுவனர் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
Nov 08, 2024 13:44 ISTதிருப்பதி லட்டு விவகாரம் - சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசு, தேவஸ்தானம் மற்றும் சிபிஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை கண்டிப்புடன் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
30 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் திருப்பதிக்கு எப்படி தனி மாநில அந்தஸ்து வழங்க முடியும்?. இது போன்ற மனுக்களை எப்படி விசாரிக்க முடியும்? - நீதிபதி கவாய் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
-
Nov 08, 2024 13:38 ISTகடற்பசு பாதுகாப்பு மையம் - மாதிரிப் படங்கள் வெளியீடு!
தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ. 15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு. இதற்கான மாதிரிப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மையத்தில் முழுவதுமாக பொதுமக்களை அனுமதிக்கும் பகுதி, பகுதி அளவு பொதுமக்களை அனுமதிக்கும் போது, பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத பகுதி என்று மூன்று பகுதியாக இந்த மையம் அமைக்கப்படும்.
கடல் பசு வடிவிலான மையம், அருங்காட்சியகம், 4டி அரங்கம், பூங்கா, திறந்தவெளி அரங்கம், உணவகம், வாகன நிறுத்துமிடம், செல்ஃபி பாயிண்ட், குடிநீர் வசதி, மிகப்பெரிய அளவிலான முகப்பு ஆகியவைகள் இடம்பெற உள்ளன. 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்விரிகுடா கடற்பசு பாதுகாப்பகமாக (Dugong Conservation Reserve) ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
#Photos | தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ₹15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு. மாதிரிப் படங்கள் வெளியீடு!
— Sun News (@sunnewstamil) November 8, 2024
இந்த மையத்தில் முழுவதுமாக பொதுமக்களை அனுமதிக்கும் பகுதி, பகுதி அளவு பொதுமக்களை அனுமதிக்கும் போது, பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத… pic.twitter.com/plVNyndMV6 -
Nov 08, 2024 13:10 ISTஆளுநருடன் கிருஷ்ணசாமி சந்திப்பு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார். அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தார். சென்னையில் நேற்று கிருஷ்ணசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்ற நிலையில், இன்று ஆளுநருடன் சந்தித்து பேசியுள்ளார்.
-
Nov 08, 2024 13:09 IST'சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது': அலிகார் பல்கலை., வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
அலிகார் பல்கலைக்கழகம், நாடாளுமன்ற சட்டத்தால் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் என்பதற்காக சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை நிறுவனம் தான் என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது. நிறுவனம் சிறுபான்மையினரின் நலனுக்காக செயல்படுகிறதா என்பதுதான் முக்கியம் என்றும் இவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பதை எந்த அடிப்படையில் முடிவு செய்யலாம் என்பதற்கான விளக்கங்களை தெளிவு படுத்தி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
-
Nov 08, 2024 12:08 ISTகனடா நாட்டில் இந்து கோயில்கள் மீது தாக்குதல்: சென்னையில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
கனடா நாட்டில் இந்து கோயில்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. உதவி ஆணையர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தில் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 11 பேர் மட்டுமே ஈடுபட்டனர். அர்ஜுன் சம்பத்தின் கார் ஓட்டுநரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதானதால், அவரது கார், சாலையில் கேட்பாரற்று நின்றது. பின்னர், காரை எடுத்துச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்
-
Nov 08, 2024 12:07 ISTகருணாநிதி பெயரிலான திட்டங்களுக்கு கோடி கணக்கில் நிதி செலவு: இ.பி.எஸ் குற்றச்சாட்டு
"போதிய நிதி இல்லாததால் மக்கள் நல திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. மக்கள் நல திட்டங்களுக்கான மூலதன செலவுகளை மேற்கொள்ளவில்லை. கருணாநிதி பெயரிலான திட்டங்களுக்கு கோடி கணக்கில் நிதி செலவு செய்கிறது என்று தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்
-
Nov 08, 2024 12:04 ISTகாவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட தம்பதிக்கு ஜாமின்
சென்னையில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் மற்றும் தனலட்சுமிக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்திரமோகன் மட்டும் தினசரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
-
Nov 08, 2024 12:03 ISTசீமானுக்கு த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Nov 08, 2024 11:38 ISTஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் மீண்டும் மோதல்: பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் 370ஆவது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்த கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-ஆவது நாளாக அமளி ஏற்பட்டதால், கைகலப்பில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
-
Nov 08, 2024 11:15 ISTதமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா.செல்வராசனுக்கு செம்மொழித் தமிழ் விருது
2024ம் ஆண்டிற்கான, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை சென்னை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா.செல்வராசனுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விருதுடன் ₹10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் சிலையும் வழங்கினார்.
-
Nov 08, 2024 11:12 ISTஉறுப்பினர் சேர்க்கை விவகாரம்: அதிருப்தியில் பாஜக தலைமை
எதிர்பார்த்த அளவு உறுப்பினர் சேர்க்கை நடக்காத நிலையில், வரும் 11ம் தேதி சென்னை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க தேசிய தலைமை அறிவுறுத்திய நிலையில், 10 லட்சம் பேர் வரை மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுளள்து. உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் தேசிய தலைமை, மாநில தலைமை மீது அதிருப்தியில் உள்ளதால், உயர்மட்டக் குழு கூட்டம் நடக்க இருப்பதாக தகவல்
-
Nov 08, 2024 10:57 ISTசிவகங்கை: 39 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
சிவகங்கையில் கடந்த 11 மாதத்தில் 39 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்புத்துார், தேவகோட்டை உட்பட 5 சப் டிவிஷன்கள் உள்ளன. இதில் அதிக குற்றங்கள் நடைபெறும் இடங்களாக சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை சப் டிவிஷன் உள்ளன.இந்த ஆண்டில் இதுவரை 39 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டுள்ளது. இதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக 27 பேர், பாலியல் வழக்கு தொடர்பாக 3 பேர், கஞ்சா வழக்கு தொடர்பாக 1, மது விற்பனை தொடர்பாக 5, திருட்டு தொடர்பாக 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது.
-
Nov 08, 2024 10:19 ISTதீட்சிதர்களோடு போராட வேண்டிய அவசியம் அறநிலையத்துறைக்கு இல்லை: சேகர் பாபு
கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி அறநிலையத்துறை செயல்படும். தீட்சிதர்களோடு போராட வேண்டிய அவசியம் அறநிலையத்துறைக்கு இல்லை. சிதம்பரம் நடராஜர் கோவில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அறநிலையத்துறை கீழ் செயல்படும். குறிப்பிட்ட இடம் குறிப்பிட்ட தீட்சிதர்கள் மட்டும் தரிசனம் செய்வதற்கு இல்லை என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்
-
Nov 08, 2024 10:16 ISTமீண்டும் ஏற்றம் கண்ட தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரணுக்கு ரூ680 உயர்ந்து, ரூ58280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ7285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் சவரணுக்கு ரூ1320 குறைந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
-
Nov 08, 2024 09:55 ISTசிவகங்கையில் கனமழை - முதன்மை கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை பெய்யும் இடங்களில் அந்தந்த தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
Nov 08, 2024 09:46 IST6,000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் கற்கள் கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அகழாய்வில் 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்கப் பயன்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜாஸ்பர், சார்ட் என்ற இக்கற்கள், முன்னோர்கள் விலங்குகளை வேட்டையாடுவதற்கான கருவிகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களாகவும் பயன்படுத்தியுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் தகவல்.
-
Nov 08, 2024 09:39 ISTஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
நீலகிரியில் பெய்த கனமழையால் ராட்சத பாறைகள் விழுந்து ரயில் பாதைகள் சேதமடைந்ததால் சில நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு இன்று ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏராளமான பயணிகள் மகிழ்ச்சியோடு பயணம் செய்தனர்.
-
Nov 08, 2024 09:37 ISTதோனி குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஜாக் மெக்கர்க் ஓபன் டாக்
தோனி முதல் பந்தில் அடித்த சிக்சரின் சத்தம், அவர் மைதானத்திற்குள் வந்தபோது இருந்த சத்தத்தை விட அதிகமாக இருந்தது. நான் கேட்டதிலேயே மிக அதிகமான சத்தம், அவர் பேட்டிங் செய்த அந்த 30 நிமிடங்களில் ரசிகர்கள் செய்த ஆராவாரம் தான். இது ஒரு தனி மனிதனுக்காக வந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று, ஆஸ்திரேலிய வீரர் ஜாக் மெக்கர்க் கூறியுள்ளார்.
-
Nov 08, 2024 09:09 ISTதமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Nov 08, 2024 09:02 ISTதிருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.08) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சி தலைவர் சாருஸ்ரீ உத்தரவு!
-
Nov 08, 2024 08:47 ISTசிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
சிவகங்கை மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்கிறதோ அந்த பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மழை பெய்யாத இடத்தில் பாதுகாப்பான முறையில் பள்ளிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Nov 08, 2024 08:45 ISTதிருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் அமைக்கும் பணிகள் தொடக்கம்
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 7 தளங்கள் கொண்டதாக இதனை அமைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜுன் 27ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
-
Nov 08, 2024 08:07 ISTநாசக்கார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகிவிட கூடாது: தொண்டர்களுக்கு திருமா கடிதம்
நம்மை ஆதரித்தோ எதிர்த்தோ, சமூகவைலதளங்களில் பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர். தி.மு.க.கூட்டணியில் உள்ளதால் அடிப்படையில் குறிவைக்கப்படுகிறோம். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 2019-ம் ஆண்டு முதல் மகத்தான வெற்றியை குவித்து வருகிறது. கூட்டணியை சிதறடிக்க முயற்சிப்பவர்கள் நம்மை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். திட்டமிட்டு நம் மீது அய்யத்தை எழுப்புவோர் தி.மு.க வி.சி.ககூட்டணிக்கு எதிரானவர்கள்.
நயவஞ்சக சக்திகளின் நாசக்கார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகிவிட கூடாது. தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில் தான் தொடர்கிறோம் தொடர்வோம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைபாட்டை வெல்ல, நம்மை வலுப்படுத்த கவனம் குவிப்போம் என்றும் கூறியுள்ளார். -
Nov 08, 2024 07:33 ISTகருணாநிதி குறித்து அவதூறு கருத்து: சீமான் மீது கரூரில் வழக்குப்பதிவு
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு கருத்துக்களை கூறியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கரூரில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.