வாகன சோதனையில் வாக்குவாதம் : இளைஞர்கள் – போலீசார் அதிரடி மோதல்

Youths Fight To Police : திண்டுக்கல் அருகே வாகன சோதனையின்போது போலீசார் இளைஞர்கள் இடையே நடந்த மோதல் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Police Youths Fight In Checkpost : சமீப காலங்கலாக இளைஞர்கள பலரும் சாலை விதிகளை மீறும் செயல் அரங்கேறி வருகிறது. அவர்கள் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்தாலும் அதே நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் பல இடங்களில் காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் இதேபோல அரங்கேறிய சம்பவம் தொடர்பான வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விருவீடு செக்போஸ்ட் உள்ளது. இந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை மடக்கியுயள்ளனர். அப்போது அவர்கள் தங்கள் வந்த மோட்டார் சைக்கிளால் காவல்துறையின் தடுப்பு மீது மோதியுள்ளனர். இதனையடுத்து போலீசார் உடனடியாக அவர்களை பிடிக்க முயன்றனர்.

அப்போது போலீசாருக்கும் அநத 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்,  இந்த முற்றவே அந்த 3 வாலிபர்களும் திடீரென அருகில் பந்தலில் இருந்த தென்னை மட்டை மற்றும் கட்டைகளால் போலீசாரை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளர். இதில் ஒரு வாலிபர் போலீசாரை எட்டி உதைத்த நிலையில், அதிர்ச்சியடைந்த மற்ற போலீசார், அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் வியாபாரி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது திண்டுக்கல் அருகே நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu news three youths fight to police in check post dindigul

Next Story
ம.நீ.ம. கட்சியில் கமல்ஹாசனுக்கு இரட்டை பதவி: ஆலோசகராக பழ கருப்பையா நியமனம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com