Advertisment

News Highlights: செங்கல்பட்டை தொடர்ந்து திருப்பத்தூர்; ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் பலி

Tamilnadu news today: கேரளாவிற்கு 1000 டன் ஆக்சிஜன் மற்றும் 75 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுமதிக்கப்பட வேண்டும் என பிரதமருக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
News Highlights: செங்கல்பட்டை தொடர்ந்து திருப்பத்தூர்; ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் பலி

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்

கேரளாவிற்கு 1000 டன் ஆக்சிஜன் மற்றும் 75 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுமதிக்கப்பட வேண்டும் என பிரதமருக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.மேலும் கேரளாவுக்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு ஆக்ஸிஜன் ஆலையிலிருந்து 500 டன் ஒதுக்கீடு செய்வதையும் மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறை - 4 நோயாளிகள் பலி

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 4 நோயாளிகள் உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறை- 11 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 10 மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் இங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 11 கொரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மின் இணைப்பு வழங்கியதும் ஆக்சிஜன் உற்பத்தி - ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் தேவையான அனைத்து முன் இயக்க சோதனைகளும் செய்யப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது. மின் இணைப்பு கொடுக்கப்பட்டதும் உடனடியாக ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகளை தொடங்க தயாராக இருக்கிறோம் என தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு - ரமேஷ் பொக்ரியால்

கொரோனா பரவல் காரணமாக மே மாதம் நடைபெற இருந்த ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வு குறித்து தேர்வு தேதிக்கு பதினைந்து நாட்கள் முன்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"



  • 21:29 (IST) 05 May 2021
    வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு நிதி அறிவிப்பு

    தனியார் மருத்துவமனைகளில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதி வழங்குவதாக அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



  • 21:24 (IST) 05 May 2021
    தமிழக அரசுக்கு ஒபிஎஸ் வலியுறுத்தல்

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 13 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.



  • 20:32 (IST) 05 May 2021
    கர்நாடகத்தில் 50 ஆயிரத்தை கடந்த தினசரி பாதிப்பு

    கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில், பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து 50,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 346 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் 23,106 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • 20:31 (IST) 05 May 2021
    வரும் 7-ந் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை - மு.க.ஸ்டாலின்

    வரும் 7-ந் தேதி காலை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின், அதன்பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.



  • 20:27 (IST) 05 May 2021
    தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதி தீவிரமடைந்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 20:25 (IST) 05 May 2021
    பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் ரத்து - தேர்தல் ஆணையம்

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருந்த சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



  • 20:12 (IST) 05 May 2021
    தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்புக்கு இன்று ஒரே நாளில், 167 பேர் பலியாகியுள்ளனர்.

    சென்னையில் ஒரேநாளில் 6,291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு நாளில் 58 பேர் பலியாகியுள்ளனர்.



  • 19:20 (IST) 05 May 2021
    தமிழக அரசுக்கு கமல்ஹசன் வலியுறுத்தல்

    தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள அரசு கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நெறிப்படுத்த வேண்டும் ஒரே மாதிரியான கட்டணமே அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹசன் வலியுறுத்தியுள்ளார்.



  • 19:19 (IST) 05 May 2021
    வரும் 7ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

    தமிழக சட்டசபை தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 17 இடஙகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், கே.எஸ்.அழகிரி தலைமையில் வரும் 7ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:18 (IST) 05 May 2021
    தமிழக அரசுக்கு சரத்குமார் அறிவுறுத்தல்

    சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் தேவையை பூர்த்தி செய்த பின்னரே ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவுறுத்தியுள்ளார்.



  • 18:39 (IST) 05 May 2021
    டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் டாஸ்மாக் கடைகள்காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.



  • 18:21 (IST) 05 May 2021
    ஸ்டெர்லைட் ஆலைக்கு நாள் ஒன்றுக்கு 24 மெகாவாட் மின்சாரம் வழங்க முடிவு

    ஸ்டெர்லைட் ஆலைக்கு நாள் ஒன்றுக்கு 24 மெகாவாட் மின்சாரம் மற்றும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க கண்காணிப்புக் குழு முடிவு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு சற்று நேரத்தில் மின் விநியோகம் வழங்கப்பட உள்ளது.



  • 17:57 (IST) 05 May 2021
    மக்களை காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் - ஸ்டாலின்

    உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.



  • 17:19 (IST) 05 May 2021
    புதுச்சேரி முதல்வராக நாளை மறுநாள் பதவி ஏற்கிறார் என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி

    புதுச்சேரி முதல்வராக நாளை மறுநாள் பதவி ஏற்கிறார் என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி. மத்திய அரசு பரிந்துரைத்தால் துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ரங்கசாமி தெரிவித்தார்.



  • 17:12 (IST) 05 May 2021
    கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாது - முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன்

    கொரோனா 3வது அலையை தவிர்க்க முடியாது, அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.



  • 17:10 (IST) 05 May 2021
    இந்தியாவில் தினமும் கொரோனா பரவல் 2.4% அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர்

    இந்தியாவில் தினமும் கொரோனா பரவல் 2.4% அதிகரித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.



  • 16:53 (IST) 05 May 2021
    இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் - பாஜகவினருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை

    பழைய வீடியோக்களைப் பரப்பி மேற்கு வங்கத்தில் வன்முறை நடந்ததுபோல, பாஜகவினர் சித்தரிப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்ற இடங்களில் வன்முறை நடக்கவில்லை; இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • 16:49 (IST) 05 May 2021
    ரெம்டெசிவிர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி

    ரெம்டெசிவிர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 16:32 (IST) 05 May 2021
    கொரோனா தடுப்புப்பணிகள் மற்றும் பதவியேற்பு விழா தொடர்பாக மாலை 5.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    கொரோனா தடுப்புப்பணிகள் மற்றும் பதவியேற்பு விழா தொடர்பாக மாலை 5.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். மு.க.ஸ்டாலின் உடன் தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.



  • 16:31 (IST) 05 May 2021
    75 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை கேரளாவிற்கு வழங்க வேண்டும் - பினராயி விஜயன்

    75 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை கேரளாவிற்கு வழங்க வேண்டும் எனவும் குறைந்தது 1,000 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் வெண்டிலேட்டர்களை கேரளாவிற்கு வழங்க வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.



  • 16:00 (IST) 05 May 2021
    நாளை முதல் 20ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகம் வர வேண்டாம்

    நாளை முதல் 20ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகம் வர வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களின் நலன் கருதி தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.



  • 15:52 (IST) 05 May 2021
    நாளை முதல் 20ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு மின்சார ரயில்களில் அனுமதி இல்லை

    நாளை முதல் 20ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு மின்சார ரயில்களில் அனுமதி இல்லை எனவும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்களுக்கு அனுமதி எனவும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 15:42 (IST) 05 May 2021
    தமிழகத்துக்கு 1,35,000 ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டுள்ளது மத்திய அரசு தகவல்

    மாநிலங்களுக்கு பாரபட்சமின்றி தேவைக்கேற்ப ரெம்டெசிவிர் மருந்தை வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்துக்கு இதுவரை 1,35,000 ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.



  • 15:30 (IST) 05 May 2021
    ஆக்சிஜன் இருப்பு, ரெம்டெசிவிர் மருந்து குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

    கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை, ஆக்சிஜன் இருப்பு, ரெம்டெசிவிர் மருந்து கள்ளச் சந்தையில் விற்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என சுகாதாரத் துறை செயலாளரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 15:27 (IST) 05 May 2021
    ஸ்டெர்லைடில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது துவங்கப்படும்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

    ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது துவங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் இந்த நேரத்தில் உயர் நீதிமன்றம் தற்போது கேள்வி எழுப்பியுள்ளது.



  • 14:58 (IST) 05 May 2021
    அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வரவும் - அரசு உத்தரவு

    கொரோனா பரவலை தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர உத்தரவிட்டு புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குரூப்-ஏ பிரிவில் உள்ள அரசு அதிகாரிகள் மட்டும் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டும். மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர உத்தரவு. இந்த உத்தரவுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு



  • 14:57 (IST) 05 May 2021
    அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வரவும் - அரசு உத்தரவு

    கொரோனா பரவலை தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர உத்தரவிட்டு புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது



  • 14:17 (IST) 05 May 2021
    தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், 7ம் தேதி காலை 9 மணிக்கு பதவியேற்கிறார்

    மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவும் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது



  • 13:45 (IST) 05 May 2021
    வாழ்த்தின் நிறம் சிவப்பு - வைரமுத்து பினராய் விஜயனுக்கு வாழ்த்துகள்

    இயற்கை செயற்கை என்ற இருவிழி இடர்களை இருகைகளால் எதிர்கொண்டீர் ஒரு கை கொள்கை மறு கை உங்கள் ஆளுகை... பச்சைத் தொட்டிலில் கேரளம்; சிவப்புக் கனவுகள் காணட்டும்

    வாழ்த்தின் நிறம் சிவப்பு@vijayanpinarayi @CMOKerala @cpimspeak keralaelections2021 pic.twitter.com/NlwnOoOEDE

    — வைரமுத்து (@Vairamuthu) May 5, 2021


  • 12:59 (IST) 05 May 2021
    ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில் கண்காணிப்பு குழு ஆய்வு

    தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில் சோதனை செய்தனர். உதவி ஆட்சியர் சிம் ரஞ்சித் சிங், மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



  • 12:58 (IST) 05 May 2021
    முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யக் கோரி வழக்கு

    இரவு நேரத்தில் பேருந்துகள் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தது. இதனை தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 12:19 (IST) 05 May 2021
    மதுக் கடைகளை மூடக் கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மதுக் கடைகளை மூட உத்தரவிட கோரிய வழக்கில் மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    எதிர்ப்பு சக்தியை குறைக்க கூடிய மதுபான விற்பனையை அனுமதிப்பது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜூன் 4 ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.



  • 11:23 (IST) 05 May 2021
    மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு ரத்து

    மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கான தனி இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ரத்து செய்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் 16% தனி இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மராத்தா சமூகத்தினருக்கான தனி இடஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது எனவும், 50% மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்ற முந்தைய தீர்ப்பை மாற்றியமைக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • 10:55 (IST) 05 May 2021
    முதல்வராக மம்தா பதவியேற்பு

    மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார்.



  • 10:53 (IST) 05 May 2021
    முதல்வராக மம்தா பதவியேற்பு

    மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார்.



  • 10:52 (IST) 05 May 2021
    முதல்வராக மம்தா பதவியேற்பு

    மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார்.



  • 10:51 (IST) 05 May 2021
    கொரோனாவால் பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளது

    இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். மேலும், கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.



  • 10:47 (IST) 05 May 2021
    இந்தியாவில் ஒரே நாளில் 3.82 லட்சம் பேருக்கு கொரோனா

    இந்தியாவில் ஒரேநாளில் 3,82,315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 3,780 பேர் கொரானாவால் உயிரிழந்துள்ளனர்.



  • 10:34 (IST) 05 May 2021
    ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்

    திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். 133 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். ஆட்சி அமைக்க வருமாறு மு.க.ஸ்டாலினுக்கு விரைவில் ஆளுநர் அழைப்பு விடுப்பார்.



  • 10:33 (IST) 05 May 2021
    ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்

    திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். 133 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார்.



  • 10:31 (IST) 05 May 2021
    ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்

    திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். 133 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். ஆட்சி அமைக்க வருமாறு மு.க.ஸ்டாலினுக்கு விரைவில் ஆளுநர் அழைப்பு விடுப்பார்.



  • 10:18 (IST) 05 May 2021
    டிராபிக் ராமசாமி மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

    சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பொதுநலத்துக்காக வழக்குகள் தொடுப்பதையே தனது பொதுவாழ்க்கையாக்கிக் கொண்ட பெரிய மனிதர் டிராபிக் ராமசாமி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக்கொள்வதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.



  • 10:15 (IST) 05 May 2021
    பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் அதிகரிப்பு

    சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து ரூ.92.70-க்கும், டீசல் 19 காசுகள் அதிகரித்து ரூ.86.09-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



  • 10:14 (IST) 05 May 2021
    இந்தியாவில் ஒரே நாளில் 3.82 லட்சம் பேருக்கு கொரோனா

    இந்தியாவில் ஒரேநாளில் 3,82,315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 3,780 பேர் கொரானாவால் உயிரிழந்துள்ளனர்.



Tamil News Live Update Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment