தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்
இணையவழி வகுப்புகள் புகார்: போக்ஸோ சட்டம் பாயும்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான இணைய வழி வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்தால் போக்ஸோ சட்டம் பாயும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மேலும் மாணவ மாணவிகள் தங்களது புகார்களை தெரிவிக்க தனி உதவி எண் உருவாக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஜாதி ரீதியில் திசை திருப்பாதீர்கள்: கமல் வேண்டுகோள்
புகார் தந்தும் பாலியல் தொல்லை விவகாரத்தில், போதிய கவனம் செலுத்தாத கல்வி நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குலைகிறது. ஜாதி ரீதியில் பிரச்னையை திசை திருப்ப வேண்டாம்’ என, கமல் கவலை தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு
ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தாத உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமத கட்டணத்துடன் ஜூன் 15ம் தேதி வரை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு ள்ளது.மேலும் சிறு குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத்தொகை செலுத்தவும்,தாழ்வழுத்த மின் நுகர்வோர் கூடுதல் வைப்புத்தொகை செலுத்தவும் ஜூன் 15வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் புதிய விதிகள் : மத்திய அமைச்சர் விளக்கம்
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டு விதிமுறைகள், குடிமக்களின் தன்மறைப்பு உரிமைகளுக்கு எதிரானதல்ல என்று மத்திய மின்னணு-தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
தேனி, திண்டுக்கல், நீலகிரியில் கனமழை பெய்யும்
வெப்பச்சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொறியியல் பாடத்திட்டங்களை தமிழ் உள்பட 8 மொழிகளில் பயில அனுமதி
நடப்பாண்டு முதல் பொறியியல் பாடங்களை 8 மொழிகளில் கற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ், இந்தி, மராத்தி, வங்காளம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி ஆகிய மொழிகளில் பொறியியல் கல்லூரிகள் பாடத்திட்டங்ளை வழங்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
லட்சத்தீவு விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய அரசு லட்சத்தீவை ஒரு காலணி போல் நடத்துகிறது. மக்களின் உணவுமுறையில் தலையிடுவதற்கு எந்த சட்டம் அதிகாரம் தருகிறது? குற்றங்கள் அரிதாக லட்சத்தீவில் மத்திய அரசு குண்டர் சட்டம் கொண்டு வருவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்றுஒரே நாளில் 33,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,78,621ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 474 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 22,289 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்திற்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின்- பி மருந்துகளை கூடுதலாக 1,790 குப்பி மத்திய அரசு ஒதுக்கியது இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவிற்கு 18,140 குப்பிகள், குஜராத் மாநிலத்திற்கு 17,330 குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை கண்கானிக்க கண்கானிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் கண்கானிப்பு அதிகாரியாக செயல்படுவார் என்றும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் கண்கானிப்பாளர்களாக செயல்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது
தமிழக சிறைகளில் குழந்தைகளுடன் உள்ள 7 பெண் கைதிகளை பரோலில் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
யூனியன் பிரதேசத்தில் ‘மக்கள் விரோத’ சட்டங்களை விதித்ததற்காக லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா படேல் செயல் கண்டனத்துக்குரியது என் கூறியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு வாழும் “முஸ்லிம்களை அந்நியப்படுத்த” கட்டாயமாக “மக்கள் விரோத” விதிமுறைகளை கொண்டுவருவதில் நிர்வாகி படேலின் நடவடிக்கை வேதனையை ஏற்படுத்துகிறது என்று தனது ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் பிரதமர் அலுவலகம் இந்த விஷயத்தில் தலையிட்டு அவரை நிர்வாகி பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும், “நமது நாட்டின் பலம் பன்மைத்துவம்” என்று அவர் கூறினார். மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிகாரசபை விதிமுறைகள் சமூக விரோத நடவடிக்கைகள் மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பது போன்றவற்றை சுட்டிக்காட்டி, இது லட்சத்தீவு மக்களின் “அடிப்படை உரிமைகளை” மீறுவதால் கடுமையாக கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்கு பலரும் நிதி அளித்து வரும் நிலையில், அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு உதவி மற்றும் மானியம் பெறும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் இது என்றும் அரசு ஊழியர்கள் அளித்த விருப்பத்தை ஏற்நே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி ஜூன் 2வது வாரம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு 60 வயது வரை பணி நீட்டிப்பு செய்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் வழங்குகிறோம் என்ற அரசு ஊழியர்கள் அளித்த விருப்பத்தை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த உத்தரவு அரசு உதவி மற்றும் மானியம் பெறும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் வருகை குறைவால் 4 சிறப்பு ரயில் சேவைகள் ஜூன் 16 வரை ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி – திருவனந்தபுரம் இண்டர்சிட்டி, சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
மதுரை – புனலூர், சென்னை எழும்பூர் – குருவாயூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் முகங்களை உறவினர்கள் பார்க்கும் வகையில், வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உணவின்றி தவிக்கும் தெரு விலங்குகளுக்கு உணவு வழங்க நிதி ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் பணிகளில் தமிழக அரசுக்கு உதவியாக செயல்படுகிறோம் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 20 நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. புதிதாக தொற்று கண்டறியப்படுபவர்களைவிட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தாய் மொழியில் பொறியியல் படிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம்பெற்றிருந்த பாடங்கள் தாய்மொழியிலும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த, இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்
ஒடிசாவின் ரூர்கேலாவில் இருந்து ரயிலில் மதுரைக்கு 66.12 மெட்ரிக் டன் மருத்துவ தர ஆக்சிஜன் வந்தடைந்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக குமரி, நெல்லையில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அடுத்த ஒரிரு வாரங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ், மலையாளம், இந்தி. பெங்காலி உள்ளிட்ட 7 மாநில மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. சமீபத்தில் நடத்திய ஆய்வில் 42% மாணவர்கள் பொறியியல் பாடங்களை மாநில மொழிகளில் படிக்க ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆகியோரை விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரை மிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர்
வீடுவீடாக சென்று புத்தகங்களை வழங்கி வருகிறார் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த செம்பாளூர் கிராமவாசி சதீஸ்குமார். கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் இருந்து மன அழுத்தத்திற்கு மாணவர்களும் இளைஞர்களும் ஆளாகி வருகின்றனர் என்பதை உணர்ந்த அவர் வீட்டு மொட்டை மாடியில் நூலகம் ஆரம்பித்தார். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் வீடு வீடாக சென்று புத்தகங்களை வழங்கி வருகிறார் அவர்.
செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழகத்திற்கு குத்தகைக்கு விடும் பட்சத்தில் உடனடியாக தடுப்பூசி உற்பத்திக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின்.
ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தேன்.சென்னையில் #covid19 பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிற பகுதிகளிலும் கட்டுப்படுத்த அரசு தீவிரமாக செயல்படுகிறது. pic.twitter.com/YS4tM2wr1j— M.K.Stalin (@mkstalin) May 27, 2021தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் தமிழக அரசுடன் இணைந்து கொரோனா பெருந்தொற்றில் இருந்து மனித உயிர்களை காக்க ucc.uhcitp.in/ngoregistration இணையத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து தமிழக அரசுடன் சேர்ந்து பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வேலூர் மாவட்டத்தில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். நோயின் பாதிப்பு குறித்து ஆராய வல்லுநர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது .
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள் அனைத்தும் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடர் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
அமெரிக்க தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இந்தியாவிற்கு தடுப்பூசிகளை பெறுவது தொடர்பாக அமெரிக்கா சென்றுள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர். இன்று அமெரிக்க அமைச்சர்களுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் 18 மாத குழந்தைக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது,
சென்னை பாரிமுனையில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 500 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
மயிலாடுதுறை பெண்ணை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய்க்கு வேலூர் மாவட்டத்தில் 44 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,11,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 3,847 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 2,83,135 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவது அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2.64 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், இதுவரை 79.14 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 20.26 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 18.85 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.