Advertisment

Tamil News Today : தமிழ்நாட்டில் 5,000க்கு கீழே குறைந்தது கொரோனா; 98 பேர் பலி

டெல்டா பிளஸ் வைரஸ்க்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil News Today : தமிழ்நாட்டில் 5,000க்கு கீழே குறைந்தது கொரோனா; 98 பேர் பலி

Tamil News Today: தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அமல்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று குறைந்துள்ள வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி உள்பட 23 மாவட்டங்களில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கோயில்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை பாதுகாக்க 29,000 குளிர்பதன கிடங்குகள்

கொரோனா தடுப்பூசிகளை மைனஸ் 15 முதல் 20 டிகிரி உறைநிலையில் வைத்து பாதுகாக்கும் அளவுக்கு நாடு முழுவதும் 29,000 குளிர்பதன கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இனி நேர்முகத் தேர்வு இல்லை

ஆந்திர மாநிலத்தில் குரூப் 1 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வில் இனி நேர்முகத் தேர்வு நடத்தப்படாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தேர்வு நடைமுறையின் மீதான வெளிப்படைத் தன்மையை பேணுவதற்கும், நம்பிக்கையை உறுதி செய்யும் வகையிலும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு

டெல்டா பிளஸ் பாதிப்புகளுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 19:32 (IST) 28 Jun 2021
    தமிழ்நாட்டில் இன்று 4,804 பேருக்கு கொரோனா; 98 பேர் பலி

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4,804 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 98 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 6,553 பேர் குணமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 17:53 (IST) 28 Jun 2021
    சென்னை வந்தன 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்

    மத்திய அரசின் இலவச தொகுப்பில் இருந்து 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. தமிழகத்திற்கு இதுவரை 1,46,48,550 தடுப்பூசிகள் வந்துள்ளன


  • 17:35 (IST) 28 Jun 2021
    துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ராஹி சர்னோபத் தங்கப்பதக்கம்

    உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ராஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.


  • 17:27 (IST) 28 Jun 2021
    நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை எதிர்த்து வழக்கு

    நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை எதிர்த்து பாஜகவின் கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.


  • 17:26 (IST) 28 Jun 2021
    சத்துணவுத் திட்டத்தில் வாழைப்பழம் வழங்க ஆலோசனை

    பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தில் வாழைப்பழம் வழங்கப்படுவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் இதனால் விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


  • 17:24 (IST) 28 Jun 2021
    சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


  • 16:54 (IST) 28 Jun 2021
    கொரோனா சிகிச்சை பிரிவில் பாதுகாப்பு உடையணிந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

    காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த காப்பக சிறுவர்கள் உள்ள சிகிச்சை பிரிவில் பாதுகாப்பு உடையணிந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தியுள்ளார்.


  • 16:30 (IST) 28 Jun 2021
    5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை ஊக்குவிக்கும் வகையில் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


  • 16:19 (IST) 28 Jun 2021
    ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி டோஸ்

    தமிழ்நாட்டுக்கு ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி டோஸ் தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 1.41 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தகவல்


  • 15:56 (IST) 28 Jun 2021
    பெட்ரோல் - டீசல் விலை உயர்வு கண்டித்து தேமுதிக ஆர்பாட்ட அறிவிப்பு

    பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூலை 5 ஆம் தேதி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேமுதிக கண்டன நடத்த உள்ளதாகவும், டாஸ்மாக் கடைகளை மூடவும், விலைவாசி உயர்வை கண்டித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.


  • 15:54 (IST) 28 Jun 2021
    நாட்டில் இதுவரை 40,845 பேர் கருப்பு பூஞ்சை

    நாட்டில் இதுவரை 40,845 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34,940 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டள்ளனர்

    இதில் 18 - 45 வயது வரை உள்ள 13,083 பேருக்கும், 45 - 60 வயது வரை உள்ள 17,464 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு 60 வயதுக்கு மேல் 10,082 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


  • 15:53 (IST) 28 Jun 2021
    நாட்டில் இதுவரை 40,845 பேர் கருப்பு பூஞ்சை

    நாட்டில் இதுவரை 40,845 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34,940 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டள்ளனர்

    இதில் 18 - 45 வயது வரை உள்ள 13,083 பேருக்கும், 45 - 60 வயது வரை உள்ள 17,464 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு 60 வயதுக்கு மேல் 10,082 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


  • 15:38 (IST) 28 Jun 2021
    இந்தியா கவலைப்பட தேவையில்லை - சுனில் கவாஸ்கர்

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் நன்றாகவே வெயில் அடிக்கும். அதனால் ஆடுகளத்தில் ஈரத்தன்மை இல்லாமல் காய்ந்து இருக்கும். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஆண்டர்சனும், பிராடும் கூட விக்கெட் எடுக்க சிரமப்படுவார்கள் இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டி குறித்து இந்தியா கவலைப்பட தேவையில்லை" என்று கூறியுள்ளார்.


  • 15:33 (IST) 28 Jun 2021
    கோயில்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவு

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் காலிப்பணியிடங்களை நிரப்புமாறு அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


  • 15:32 (IST) 28 Jun 2021
    டி20 உலககோப்பை கிரிக்கெட் அமீரகத்திற்கு மாற்றம்

    இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.


  • 15:30 (IST) 28 Jun 2021
    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு கடன் உத்திரவாதம்

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காணமாக பல தொழில் துறைகள் பெரும் இழப்பை சந்தித்துள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுக்கு உத்தரவாதம் வழங்குவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    மேலும் மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்க 100 கோடி வரை கடன் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


  • 15:29 (IST) 28 Jun 2021
    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு கடன் உத்திரவாதம்

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காணமாக பல தொழில் துறைகள் பெரும் இழப்பை சந்தித்துள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுக்கு உத்தரவாதம் வழங்குவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    மேலும் மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்க 100 கோடி வரை கடன் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


  • 14:58 (IST) 28 Jun 2021
    ஜெய் ஹிந்த் முழக்கத்தை எழுப்புவோம் - எல்.முருகன்

    சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல் முருகன், பிரிவிணையை தூண்டும் வகையில் மத்திய அரசை ஒன்றி அரசு என்று அழைக்க தொடங்கியுள்ளனர் என்றும், சட்டசபையில் பாரத் மாதாகி ஜெய், ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் முழங்கங்களை தொடர்ந்து எழுப்புவோம் என்று கூறியுள்ளார்.


  • 14:55 (IST) 28 Jun 2021
    தடுப்பூசி செலுத்துவதில் மனநலம் குன்றியவர்களுக்கு முன்னுரிமை

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், மனநலம் குன்றியவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி முகாமை நடத்த வேண்டும் என் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.


  • 14:53 (IST) 28 Jun 2021
    விஜயின் மக்கள் இயக்கத்தினர் ஆட்டோ டிரைவர்களுக்கு உதவி

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுது்தலை ஏற்படுத்தி வந்த நிலையில், நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் மக்களுக்கு உதவிகள் செய்து வரும் நிலையில் வேலூரில், ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி, மளிகைப்பொருட்கள் வழங்கியுள்ளனர்.


  • 14:16 (IST) 28 Jun 2021
    எல்.முருகன் கேள்விக்கு அமைச்சரின் பதில்

    தடுப்பூசி பயன்பாடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியிருந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசி தொடர்பாக 3 முறை வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளேன் என்றும், தடுப்பூசி வகை மற்றும் கையிறுப்பு குறித்து கூறி வருகிறேன் என்றும், மத்திய அரசிடம் எடுத்துக்கூறி எல் முருகன் தடுப்பூசி பெற்றுத்தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


  • 13:50 (IST) 28 Jun 2021
    கடன் தொல்லையால் குடும்பத்தினரை கொன்ற ஜவுளிக்கடை உரிமையாளர்

    செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் பகுதியை சேர்ந்த தாமோதரன் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். ஜி.எஸ்.டி. அறிவிப்பிற்கு பிறகு ஜவுளிக்கடையில் நஷ்டம் ஏற்படவே கடன் சுமை தாங்காமல் 2017ஆம் ஆண்டு மனைவி, தாய், 2 பிள்ளைகளை கொலை செய்தார். அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக அறிவித்துள்ளது.


  • 13:36 (IST) 28 Jun 2021
    ஆவின் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் விசாரணை

    ஆவின் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பால்வளத்துறை இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார். முன்னாள் ஐ.ஏ.ஏஸ். அதிகாரிகள் இருவர் உட்பட 50க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 13:31 (IST) 28 Jun 2021
    ஓடும் காரில் தீ விபத்து - பெண் பலி

    சென்னை கோயம்பேடு அருகே ஓடும் காரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார். தீக்காயங்களுடன் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  • 13:20 (IST) 28 Jun 2021
    ஆகஸ்ட் முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்

    12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 31ம் தேதிக்குள் வெளியாகிவிடும். ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகே கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை துவங்கும் என்று அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.


  • 13:03 (IST) 28 Jun 2021
    பேரறிவாளனுக்கு பரோல் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

    ஏற்கனவே ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு மாதம் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 13:02 (IST) 28 Jun 2021
    தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்

    தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


  • 12:43 (IST) 28 Jun 2021
    தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழையாமல் இருக்க தொடர்ந்து நடவடிக்கை

    தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழையாமல் இருக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


  • 12:15 (IST) 28 Jun 2021
    புதிய டிஜிபி யார்?

    தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள UPSC தலைமையகத்தில் தொடங்கியது. தமிழக டி.ஜி.பியாக பணியாற்றி வரும் டிஜிபி திரிபாதி வருகின்ற 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்ற நிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.


  • 12:08 (IST) 28 Jun 2021
    கேரளா செய்திகள் : பணி உயர்வில் மாற்று திறனாளிகளுக்கு இடஒதுக்கீட்டிற்கான உரிமை உள்ளது

    அரசு பணி உயர்வில் மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டிற்கான உரிமை உள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நன்மை அளிக்கும் என்று கூறி கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். மேலும் கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை 3 மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 12:03 (IST) 28 Jun 2021
    நீட் தேர்வு : மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு மோடி அரசு தான் பொறுப்பு

    நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் அனிதா உள்ளிட்ட 16 தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு மோடி அரசும் எடப்பாடி பழனிசாமியின் அரசும் தான் பொறுப்பு என்று காங்கிரஸ் கமிட்டி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இவை தற்கொலைகள் அல்ல ஆட்சியாளர்களின் தவறான அரசியல் அணுகுமுறைகளால் நிகழ்ந்த படுகொலைகள் என்றும் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


  • 11:38 (IST) 28 Jun 2021
    தடுப்பூசி வீண் - வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

    மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை பயன்படுத்தியது, வீணடித்தது தொடர்பாக மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.


  • 11:35 (IST) 28 Jun 2021
    கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

    அரசு பணி உயர்வில் மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு உரிமை உள்ளது என்றும், கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை 3 மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பு நன்மை தரும் தீர்ப்பு என கூறியுள்ளது.


  • 11:00 (IST) 28 Jun 2021
    கொரோனா நிவாரண உதவி- பாகுபாடு கூடாது: ஓபிஎஸ்

    கொரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி தர வேண்டும் எனவும், நிவாரண உதவிக்கு பெற்றோரின் வேலைவாய்ப்பை ஓர் அளவுகோலாக எடுத்துக்கொள்ளக்கூடாது என ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.


  • 10:32 (IST) 28 Jun 2021
    ஏடிஎம் கொள்ளை வழக்கு- மேலும் ஒருவர் கைது

    சென்னையில் எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம் மையங்களில் பணம் கொள்யைடித்த வழகில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அரியானா மாநிலத்தில் ஏற்கனவே 2 பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது.


  • 10:31 (IST) 28 Jun 2021
    ஏடிஎம் கொள்ளை வழக்கு- மேலும் ஒருவர் கைது

    சென்னையில் எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம் மையங்களில் பணம் கொள்யைடித்த வழகில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அரியானா மாநிலத்தில் ஏற்கனவே 2 பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது.


  • 09:31 (IST) 28 Jun 2021
    கொரோனா -குறையும் இறப்பு எண்ணிக்கை

    இந்தியாவில் மேலும் 46,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை 1000க்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 979 பேர் உயிரிழந்துள்ளனர்.


  • 09:20 (IST) 28 Jun 2021
    27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம்

    தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் ஏசி வசதி இன்றி 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தளர்வளிக்கப்பட்ட மாவட்டத்திற்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் 9,333 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.


Tamilnadu Live News Udpate Tamilnadu News Latest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment