தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்பு
இன்று தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையிலான 33 பேர் கொண்ட அமைச்சரவை உறுப்பினர்கள் தற்போது ஒருவர் பின் ஒருவராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.
தமிழகத்துக்கு ஆக்சிஜன் வழங்கலை உறுதி செய்ய உத்தரவு
தமிழகத்துக்குத் தடையில்லா ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை, கோவை நகரங்களில் டி.ஆர்.டி.ஓ மூலம் போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்கவும் அறிவுறுத்தினர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மகேந்திரன் விலகல்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர் டாக்டர் மகேந்திரன், மவுரியா, சி.கே.குமரவேல் என முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகியுள்ளனர். ` இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் கமல் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை’ என விலகல் கடிதத்தில் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மகேந்திரன் ஒரு துரோகி: கமல் ஆவேசம்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகல் குறித்து கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்துள்ளனர் என்பதை கண்கூடாக கண்டோம். களையெடுக்கப்பட வேண்டிய துரோகிகளில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன். கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பலரை தலையெடுக்க விடாமல் தடுத்ததே இவரது சாதனை என கமல் காட்டமாக கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக, விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா மூன்றவாது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்
கொரோனா மூன்றாவது அலை கடும் விளைவுகளை குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கும் நிலையில், அதை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அறிவுசார் சொத்துரிமை கட்டுப்பாடுகளை நீக்கும் இந்தியாவின் பரிந்துரை : அமெரிக்கா ஏற்பு
கொரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கும் வகையில் அவற்றுக்கான அறிவுசார் சொத்துரிமை கட்டுப்பாடுகளை தற்காலிகமாக நீக்க வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா முன்வைத்த பரிந்துரைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி. செழியன் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திறகு கூடுதலாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆக்சிஜன் ஒதுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று ஒரு நாளில், 26,465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு 197 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை, 15,171 ஆக அதிகரித்துள்ளது.
சட்டசமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்த அதிமுக, தோல்வி குறித்து ஒபிஎஸ் இபிஎஸ் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிள் தங்களது தலைவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஏறக்குறைய 25000 ஆக உள்ளது. மக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மருத்துவ கட்டமைப்பு மேம்பாடு பணிகளை பல்வேறு முன்னெச்சரிகை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 500 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு சிகிச்சை மையம் எற்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் தா.மோ.அன்பரசனுன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உடன் இருந்தார்.
மதுரையை சேர்ந்த விரோனிகா மேரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க கோரி திருச்சி எம்.பி. சிவா எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசின் பதில் என்ன ? என்று கேள்வி எழுப்பினர்.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும் சூழலில் திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க முன் வராதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சர்களும், பாஜகவுக்கு 1 துணை முதல்வர் மற்றும் 2 அமைச்சர்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் கிஷன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி” என்று முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்!காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி! pic.twitter.com/bmvRSWcss7
— M.K.Stalin (@mkstalin) May 7, 2021
முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்றார். அவருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரி முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்றார் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி. அவருக்கு அந்த யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உங்கள் தொகுதியில் முதல்வர் துறையில், 100 நாட்களில் மக்கள் குறை தீர்க்கும் பிரிவுக்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஷில்பா பிரபாகர் சதீஷை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக அரசு அமைத்த நாளில், எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் பார்வையாளர்கள் வரிசையில் பின்னால் அமர்ந்திருந்தார். இன்று அதிமுக சார்பில் நிகழ்வில் பங்கேற்ற பன்னீர் செல்வத்திற்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் பண்பட்ட நாகரீகம் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்த புதிய துறைக்கு ஒப்புதல் அளித்தார் முதல்வர் முக ஸ்டாலின்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற முக ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி
Congratulations to Thiru @mkstalin on being sworn-in as Tamil Nadu Chief Minister.— Narendra Modi (@narendramodi) May 7, 2021சி.ஐ.டி. நகரில் உள்ள கனிமொழி வீட்டுக்கு சென்ற முக ஸ்டாலின் ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார். அண்ணனை வாசலில் வந்து வரவேற்றார் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி
மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவிகள் நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்கான திட்டத்தில் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின்
கொரோனா சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனை கட்டணத்தை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசே ஏற்க ஆணை.
குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக மே மாதம் ரூ.2,000 ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 100 நாட்களில் மக்கள் குறைதீர்க்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.
மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் முதல்வராக கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். முதலில் ரூ.4,000 கொரோனா நிதி வழங்கும் உத்தரவு உட்பட மொத்தம் 3 கோப்பில் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் மாளிகையில் பதவியேற்ற முக ஸ்டாலின் அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்திய பிறகு தலைமைச் செயலகம் வந்தடைந்தார். அவருக்கு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் முதல்வராக பதவி ஏற்றிருக்கும் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் விரும்பும் ஆட்சியை அவர் வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை பாமக எப்போதும் வழங்கும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடம் மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார்.
முதலமைச்சராக பதவியேற்ற பின் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக என்.கயல்விழி செல்வராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மதிவேந்தன் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக த.மனோ தங்கராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக சி.வி.கணேசன் பொறுப்பேற்றுக்கொள்வதாக உளமாற உறுதி ஏற்பதாக பதவியேற்பு உறுதிமொழி எடுத்தார்.
தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக சிவ.வீ.மெய்யநாதன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சராக சா.மு.நாசர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக பி.கே.சேகர்பாபு பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக பி.மூர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக ஆர்.காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக வி.செந்தில் பாலாஜி பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சராக சக்கரபாணி பதவியேற்றுக்கொண்டார்.
தமிழக வனத்துறை அமைச்சராக கா.ராமச்சந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக ஊரகத் தொழிற்துறை அமைச்சராக தா.மோ.அன்பரசன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக மு.பெ.சாமிநாதன் பொறுப்பேற்றுக்கொண்டார்.