/tamil-ie/media/media_files/uploads/2019/10/Modi-sabarmati-speech.jpg)
Latest News Tamil Updates: கோவிட்-19 வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகாமாக பரவிவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் உள்ள 15 அமர்வுகளில் 6 அமர்வுகள் மட்டும் வழக்குகளை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், இந்த 6 அமர்வுகள் 12 அவசர வழக்குகளை மட்டுமே இன்று விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரொனா பாதிப்பு 110-ஐ எட்டியுள்ள நிலையில், சார்க் நாடுகள் இணைந்து எதிர்கொள்ள பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.
கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் தலைவிதியை தீர்மானிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறும் என்று மத்திய பிரதேச ஆளுநர் அலுவலகம் நேற்று இரவு அறிவித்தது. நாளை மத்திய பிரேதேச சட்டப்பேரவையில் நடைபெறும் ஆளுநர் உரைக்குப் பின் இந்த வாக்கெடுப்பு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. ஆளுநர் உரைக்கு முன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தார்.
இதுபோன்ற, மேலும் முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Latest Tamil News : தமிழகம் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம்
ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள், அனைத்துத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்
தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்றுநோயாக கொரோனாவை அறிவித்த நிலையில், நாளை ஆலோசனை
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரொனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனி வார்டுகளை அரசு முழுமையாக ஆய்வு செய்த பின்னரே நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து, திமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 29-ம் தேதி நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக பொதுக்குழு கூட்டம், மார்ச் 29-ம் தேதி 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடைபெறும். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
'கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு'
திமுக பொதுக்குழுக் கூட்டம் 29-03-2020 அன்று காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் எனது தலைமையில் நடைபெறும்.
பொருள்: கழக பொதுச்செயலாளர் தேர்வு.#DMK #MKStalin pic.twitter.com/b6MPczljNi
— DMK (@arivalayam) March 15, 2020
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் நரோவால் மாவட்டத்திலிருக்கும் குருத்வாரா தர்பார் சாஹிப் கோவிலுக்குப் புனிதப் பயணம் செல்லும் சீக்கியர்களுக்காக அமைக்கப்பட்ட கர்தார்பூர் சாஹிப் வழித்தடம் கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக ஆந்திரா மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைப்பதாக அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை மறுஆய்வு செய்தபின் உள்ளாட்சித் தேர்தல் தேதி வெளியிடப்படுகிறது.
234 Indians stranded in #Iran have arrived in India; including 131 students and 103 pilgrims.
Thank you Ambassador @dhamugaddam and @India_in_Iran team for your efforts. Thank Iranian authorities.— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 14, 2020
கொரோனா வைரசால் அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்றாக இரான் விளங்குகிறது. அந்த நாட்டில் 5000க்கும் அதிகமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இரான் நாட்டில் இருந்து மக்களை மீட்பதில் அதிக முக்கியத்துவம் கொடுத்துவருதாக சில நாட்களுக்கு முன்பு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதுவரை 2 பேட்ச்கள் மூலமாக 102 மக்கள் இரானில் இருந்து தாயகம் திரும்பியிருந்தனர்.
இந்நிலையில், 'ஈரானில் இருந்து 234 இந்தியர்கள் மீட்கப்பட்டு நாடு திரும்பியுள்ளதாகவும், இதில் 131 மாணவர்கள் மற்றும் 101 யாத்திரிகர்கள் அடங்குவார்கள்' என்றும் அமைச்சர் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர், " வரும் 31ம் தேதி வரை தெலுங்கானாவில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், மால்கள் மூடப்படும்" என்று அறிவித்தார்.
கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் தலைவிதியை தீர்மானிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறும் என்று மத்திய பிரதேச ஆளுநர் அலுவலகம் நேற்று இரவு அறிவித்தது. நாளை மத்திய பிரேதேச சட்டப்பேரவையில் நடைபெறும் ஆளுநர் உரைக்குப் பின் இந்த வாக்கெடுப்பு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. ஆளுநர் உரைக்கு முன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தார்.
தமிழகத்தில் மதவாதமும், சாதியவாதமும் சூழும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய சவாலை சந்திக்கவுள்ளார். சமூகநீதியை காப்பாற்றும் என்ற நோக்கில் தான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்; திமுக அழிந்தால் சமூகநீதியை அழித்துவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights