scorecardresearch

தேமுதிக.வுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படுமா? ‘எந்த ஒப்பந்தமும் இல்லை’ என்கிறார் ஜெயக்குமார்

இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

தேமுதிக.வுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படுமா? ‘எந்த ஒப்பந்தமும் இல்லை’ என்கிறார் ஜெயக்குமார்

Tamil news : தமிழக எம்.பி-க்கள் 6 பேரின் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, புதிய எம்.பி-க்கள் விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்நிலையில், தேமுதிக.வுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு ‘எந்த ஒப்பந்தமும் இல்லை’ என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

கத்தார் நாட்டின் தலைநகரமான தோஹாவில் இன்று அமெரிக்காவிற்கும்,தலிபான் படைகளுக்கும் இடையில்  சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்படுகிறது. இந்த சமாதான உடன்படிக்கையில் இந்திய அரசின் சார்பில் இந்திய நாட்டிற்கான கத்தார் தூதுவர் கலந்து கொள்கிறார். முன்னதாக, இந்திய அரசின் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா நேற்று காபூல் விரைந்தார்.

துபாயில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்தியா விளையாடும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த கங்குலி,” பொதுவான நாட்டில் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஒரு நாள் போட்டிகள் குறித்த பெரிய ஆட்சேபனைகள் இல்லையென்றும் என்றும் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil Nadu news today updates  :  இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் லைவ் ப்ளாகிற்கு உங்களை வரவேற்கின்றோம். அனைத்து நிகழ்வுகளும் உடனுக்குடன் உங்கள் கையில்


22:25 (IST)29 Feb 2020

ஐஎஸ்எல் – சென்னை வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி அரையிறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் கோவா அணியை 4-1 கோல் கணக்கில் சென்னை அணி வீழ்த்தியது

21:45 (IST)29 Feb 2020

மூக்குத்தி அம்மன் நயன்தாரா

ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் சென்னையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்த படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

மே மாதம் திரைக்கு வர உள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்த படக்குழு, தற்போது இரண்டாம் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் அம்மனாக தோன்றி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார் நயன்தாரா.

21:12 (IST)29 Feb 2020

ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

சென்னை மாதவரத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

– தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு

21:08 (IST)29 Feb 2020

தீ இன்றிரவுக்குள் முழுமையாக அணைக்கப்படும்

மாதவரம் ரசாயன கிடங்கில் ஏற்பட்டுள்ள தீ இன்றிரவுக்குள் முழுமையாக அணைக்கப்படும்

மருந்து தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் கிடங்கில் இருந்ததா என உறுதியாக சொல்ல முடியவில்லை

– சென்னை ஆட்சியர் 

20:40 (IST)29 Feb 2020

மின்சாரம் தடை

தீ விபத்து மூலக்கடை ரவுண்டானா – மாதவரம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் – விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் மின்சாரம் தடை

20:21 (IST)29 Feb 2020

அன்புமணி இராமதாஸ் பேட்டி

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்

முதலமைச்சர் பழனிசாமியுடனான சந்திப்புக்குப் பின் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் பேட்டி

20:04 (IST)29 Feb 2020

10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் நடைபெறும்

டெல்லியில் மார்ச் 2-ம் தேதி திட்டமிட்டபடி 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் நடைபெறும் – சிபிஎஸ்இ

* மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அனைத்து உதவிகளையும் அளிக்க காவல் துறை மற்றும் அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது – சிபிஎஸ்இ

18:56 (IST)29 Feb 2020

அரையிறுதியில் சென்னை – கோவா இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை அணியும், கோவா அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கோவா அணியை, 4வது இடத்தில் உள்ள சென்னை அணி வீழ்த்த, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. பயிற்சியாளராக OWEN COYLE பொறுப்பேற்ற பிறகு சென்னை அணி கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில், தோல்வியே தழுவாமல் விளையாடி வருகிறது குறிப்பிடத்தக்கது.

18:55 (IST)29 Feb 2020

தீயில் எரிந்து சேதம்

திருவள்ளூர்: ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், 8 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதம். புகையால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்லவும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன

18:29 (IST)29 Feb 2020

திருவள்ளூர்: ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

15 தீயணைப்பு வாகனங்கள், 20மெட்ரோ தண்ணீர் லாரிகள் உதவியுடன் சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்கும் பணி தீவிரம்

மருந்து தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் வெடித்து சிதறுவதால் தீயை அணைப்பதில் சிக்கல்

17:57 (IST)29 Feb 2020

இன்னமும் முடிவு செய்யவில்லை

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஈசான் மணி தெரிவித்துள்ளார்.

17:28 (IST)29 Feb 2020

ஒய்சாள மன்னர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு : 650 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு என தகவல்

காவேரிப்பட்டணம் ஒன்றியம், என்.தட்டக்கல் கிராமத்தில், கிரு‌‌ஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் மற்றும் வரலாற்று ஆய்வுக் குழுத்தலைவர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 650 ஆண்டுகளுக்கு முந்தைய ஒய்சாள மன்னர் கால கல்வெட்டு ஒன்றை, ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்தனர். இதுகுறித்து கூறிய அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், கல்வெட்டில், ஒய்சாள மன்னன் வீரராமநாதனின் ஆட்சி காலத்தில், 1287-ம் நில தானம் அளித்ததை கூறுவதாக குறிப்பிட்டார். மேலும், தட்டக்கல் என்று அழைக்கப்படும் இந்த ஊர், 650 ஆண்டுகளுக்கு முன் தத்தக்கல் என்று அழைக்கப்பட்டு வந்ததும், இக்கல்வெட்டில் தெரிய வருகிறது என அவர் கூறினார்.

17:14 (IST)29 Feb 2020

கணக்கில் காட்டாத ரூ.400 கோடி

ஜெயின் மிட்டல் குழுமத்தில் கணக்கில் காட்டாத ரூ.400 கோடி வருவாய் கண்டுபிடிப்பு

– வருமான வரித்துறை

கடந்த 4 நாட்களாக ஜெயின் மிட்டல் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐடி சோதனை நடத்தியது

17:10 (IST)29 Feb 2020

மாணவர்கள் கருப்பு உடை அணிந்து வரக்கூடாது

சென்னை ஐஐடியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்ற உள்ள நிலையில், மாணவர்கள் கருப்பு உடை அணிந்து வர கூடாது என ஐஐடி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் அனைவரும் அடையாள அட்டை கண்டிப்பாக அணிந்து வரவேண்டும் என்றும், கருப்பு உடை அணிந்து வரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17:09 (IST)29 Feb 2020

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை

தஞ்சையில் விஷக்கடிக்கு சிகிச்சை அளிக்க ரூ.5 கோடி மதிப்பில் ஒப்புயர்வு மையம் அமைக்கப்பட உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை, தேவையான அளவு இருப்பு உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்

17:08 (IST)29 Feb 2020

8 மாத பெண் குழந்தை மீட்பு

சென்னை : பெசன்ட் நகர் பகுதியில் நேற்று கடத்தப்பட்ட 8 மாத பெண் குழந்தை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மீட்பு – குழந்தையை கடத்திய கும்பல் கைது

கடத்தப்பட்ட குழந்தை தமிழரசன் என்பவருக்கு ரூ. 2.25 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலம்

15:49 (IST)29 Feb 2020

சீர்மிகு பல்கலைக்கழகமாக அந்தஸ்து பெறும் அண்ணா பல்கலைக்கழகம்

அடுத்த கல்வி ஆண்டு (2020-2021) முதல் அண்ணா பல்கலைக்கழகம் சீர்மிகு பல்கலைக்கழகம் என்கிற அந்தஸ்துடன் இயங்கும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இது நீடிக்கும். இந்தத் தகவலை பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களிடம் கூறினார்.

15:37 (IST)29 Feb 2020

ரஜினி- கமல் கூட்டணி குறித்து திமுக-தான் கவலைப்பட வேண்டும்- அமைச்சர் ஜெயகுமார்

அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டியில், ‘தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்குவது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம்தான் முடிவெடுக்கும். இது கட்சியின் கொள்கை முடிவு. தனி நபர் முடிவு அல்ல’ என்றார்.

‘ரஜினி – கமல் கூட்டணி குறித்து திமுக தான் கவலைப்பட வேண்டும். அதிமுகவுக்கு கவலை இல்லை’ என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

14:24 (IST)29 Feb 2020

OLX மோசடி கும்பல் ராஜஸ்தானில் கைது

சென்னை மத்திய குற்றப்பிரிவை சேர்ந்த தனிப்படை போலீசார் ,OLX  செயலி மூலம்  மோசடி செய்த கும்பலை சேர்ந்த 2 பேரை ராஜஸ்தானில்  கைது செய்துள்ளது.  OLX  செயலி மூலம் இவர்கள் 100 கோடிக்கு மேல் முறைகேடுகள் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  

14:22 (IST)29 Feb 2020

மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்த எந்த ஒப்பந்தமும் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்

ராஜ்யசபாவில் தமிழகப் பிரதிநிதிகளாக இருக்கும் 6 பேரின் பதவிக் காலம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. திமுக, தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில், கூட்டணி தர்மத்தை மதித்து தேமுதிகவுக்கு ஒரு உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ,மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர்  பதவியை தருவதாக தேமுதிகவிடம் ஒப்பந்தம் செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

12:40 (IST)29 Feb 2020

மாற்றுத்திறனாளிகளின் திறன்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படவேண்டும் : பிரதமர்

உத்தர பிரேதேச மாநிலத்தில் பிரயக்ராஜ் மாவடத்தில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி சாதனங்களை விநியோகித்தார்.

மேலும், விழாவில் பேசிய நரேந்திர மோடி, ” ஒரு புதிய இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு மாற்றுத் திறனுள்ள இளைஞர்களின் பங்களிப்பும், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பங்களிப்பும் மிக அவசியம். தொழில்துறை, சேவைத் துறை,விளையாட்டுத் துறை போன்ற எந்த துறையாக இருந்தாலும், மாற்றுத்திறனாளிகளின் திறன்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

11:28 (IST)29 Feb 2020

தேசத்துரோகச் சட்டத்தைப் பற்றிய புரிந்துணர்வு டெல்லி அரசுக்கு குறைவாகவே உள்ளது : ப.சிதம்பரம்

தேசத்துரோகச் சட்டத்தைப் பற்றிய புரிந்துணர்வு  மத்திய அரசைக் காட்டிலும் டெல்லி அரசுக்கு குறைவாகவே உள்ளது. கன்னையா குமார்  மற்றும் பிறர் மீது ஐபிசி பிரிவு 124 ஏ மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் வழக்குத் தொடர வழங்கப்பட்ட அனுமதியை நான் முற்றிலும் மறுக்கிறேன் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  தெரிவித்துள்ளார்.   

11:23 (IST)29 Feb 2020

கோழிகறி பற்றிய வதந்திகள் களைய  தெலுங்கானா அமைச்சர்கள் எடுத்த நடவடிக்கை

கோழிகறி உண்ணுதலால் கொரோனா வைரஸ் பரவுவதாக வந்த செய்தியை அடுத்து சந்தைகளில் கோழியின் விற்பனை கடுமையாக சரிந்தது. கோழிகறிக்கும், கொரோனா வைரஸ்க்கும் உள்ள தொடர்பை பலர் மறுத்து வருகின்றனர். இந்நிலையில்,  கோழிகறி பற்றிய வதந்திகளை களைய  தெலுங்கானா அமைச்சர்கள் பொது மேடையில் கோழி சாப்பிட்டுள்ளனர். 

 

11:15 (IST)29 Feb 2020

உரிமம் பெறாத 300 குடிநீர் ஆலைகளுக்கு சீல்வைப்பு:

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை புழலைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்டவிரோத நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என எச்சரித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து , தமிழகம் முழுவதும் உரிமம் பெறாத 300 குடிநீர் ஆலைகளுக்கு சீல்வைக்கப்படுள்ளது.

11:01 (IST)29 Feb 2020

மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் – படக்குழுவினர் அறிவிப்பு

மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகாது என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

10:40 (IST)29 Feb 2020

தமிழ்நாடு ஹஜ் சங்கத் தலைவர் அபூபக்கர், ரஜினிகாந்தை சந்தித்தார்

டெல்லியில் வன்முறையில் இதவரை 42 மக்கள் பலியானார்கள். இந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்த ரஜினி, “டெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி, மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். வன்முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். வன்முறையை அடக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்” என்று  கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், ரஜினிகாந்த்  தமிழ்நாட்டு இஸ்லாமிய தலைவர்களை விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்,  தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவரான அபூபக்கர் இன்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சிஏஏ சட்டம் குறித்த விவாதங்களை  அபூபக்கூர் நடிகர் ரஜினிகாந்திடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.  

10:00 (IST)29 Feb 2020

அமெரிக்கா, தாலிபான் இன்று சமாதான உடன்படிக்கை :

கத்தார் நாட்டின் தலைநகரமான தோஹாவில் இன்று அமெரிக்காவிற்கும்,தலிபான் படைகளுக்கும் இடையில்  சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்படுகிறது. இந்த சமாதான உடன்படிக்கையில் இந்திய அரசின் சார்பில் இந்திய நாட்டிற்கான கத்தார் தூதுவர் கலந்து கொள்கிறார்.  முன்னதாக, இந்திய அரசின் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா நேற்று காபூல் விரைந்தார்.

Tamil Nadu news today updates: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்தக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் நளினி புதிய மனு தாக்கல் செய்துள்ளார்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu news today live updates delhi violence sedition kanhaiya kumar india vs new zealand