Advertisment

News Highlights : கொரோனா தடுப்பு நடவடிக்கை; இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

ஊரடங்கு விதிகளை மீறி தேவையின்றி வெளியே சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
News Highlights : கொரோனா தடுப்பு நடவடிக்கை; இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாகிறது

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை தீவிரப்படுத்துவது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை வழங்க சட்டமன்ற கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களை கொண்ட குழு அமைப்பது, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது, பொதுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் சார்ந்த கூட்டங்கள் நடத்தக்கூடாது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

டிசம்பருக்குள் 216 கோடி தடுப்பூசி

வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாத இடைவெளியில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என நிடி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். இதனால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் எனவும் தெரிவித்தார்.

31 ஆயிரத்தை நெருங்கும் ஒரு நாள் பாதிப்பு

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2வது நாளாக 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது. ஒரே நாளில் 30,621 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 88பேர் உள்பட கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 297 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆக்சிஜன் உற்பத்தி 30 சதவீதம் மூலதன மானியம்

ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, ஆக்சிஜன் உருளை மற்றும் ஆக்சிஜன் உற்பத்தியில் முதலீடு செய்வோருக்கு 30 சதவீதம் மூலதன மானியம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 சதவீத வட்டி மானியத்துடன் உடனடி கடன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரணமாக 13 மளிகைப் பொருட்கள் தொகுப்பு

கொரோனா நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக் கடைகள் வாயிலாக 13 மளிகைப் பொருள்களை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. ஜூன் 3 ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது ‘டோஸ்’ இடைவெளி 16 வாரங்களாக நீட்டிப்பு

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும், இரண்டாவது டோசுக்கும் இடையேயான இடைவெளியை 16 வாரங்களாக நீட்டித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது வரை கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திய பின்னர் 6 முதல் 8 வார இடைவெளியில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"


  • 21:09 (IST) 14 May 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 15,31,377 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 288 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 17,056 ஆக உயர்ந்துள்ளது.


  • 20:07 (IST) 14 May 2021
    தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்

    கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில் தற்போது நேரம் குறைக்கப்பட்டுள்ளது.


  • 20:05 (IST) 14 May 2021
    இ-பதிவு முறை கட்டாயம் என அறிவிப்பு

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்கள் இடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 17ஆம் தேதி காலை 6 மணி முதல் இ-பதிவு முறை நடைமுறைக்கு வருகிறது


  • 17:30 (IST) 14 May 2021
    கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய வழிகாட்டு முறைகள் வெளியீடு

    கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை

    அடக்கம் செய்வதற்கான வழிகாட்டு முறைகள்

    வெளியிட்டு, வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


  • 16:43 (IST) 14 May 2021
    தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் நிர்ணயம் - தமிழக அரசு உத்தரவு

    சதாரண ஆம்புலன்ஸுக்கு 10 கி.மீ.க்கு ரூ.1,500, ஆக்ஸிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸுக்கு ரூ.2,000 வெண்டிலேட்டர் வசதியுள்ள ஆம்புலன்ஸுக்கு ரூ.4,000 கட்டணமாக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


  • 16:35 (IST) 14 May 2021
    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று முதல் 5 நாட்களுக்கு திறப்பு; பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    வைகாசி மாத தொடக்கம், மாதாந்திர பூஜைகளுக்காக 5 நாட்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு; கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


  • 16:20 (IST) 14 May 2021
    17 அரசு வழக்கறிஞர்களை நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு

    உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராவதற்கு 17 அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


  • 16:14 (IST) 14 May 2021
    இந்தியாவில் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்

    இந்தியாவில் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை டாக்டர் ரெட்டி ஆய்வகத்தின் தலைமை நிர்வாகி தீபக் சப்ரா போட்டுக்கொண்டார். ஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரத்தில் சந்தைக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


  • 15:41 (IST) 14 May 2021
    இந்தியாவில் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!

    இந்தியாவில் முதல் நபருக்கு ரஷ்ய நிறுவனத்தின் 'ஸ்புட்னிக் வி' கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்தில் தீபக் சப்ரா என்பவருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தப்பட்டது


  • 15:12 (IST) 14 May 2021
    நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு...!

    வரும் 18ம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.


  • 14:35 (IST) 14 May 2021
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்...!

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் இடைக்கால அறிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்


  • 14:16 (IST) 14 May 2021
    தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்...!

    தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச்செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ளார்.


  • 14:01 (IST) 14 May 2021
    தனியார் ஆம்புலன்ஸுக்கு கட்டணம் நிர்ணயம்

    தனியார் ஆம்புலன்ஸுக்கு தமிழக சுகாதாரத்துறை கட்டணம் நிர்ணயம் அறிவித்திருக்கிறது. 10 கிலோமீட்டருக்கு ரூ.1500 கட்டணமும், அடிப்படை வசதியுடனான ஆம்புலன்ஸுக்கு 10 கிலோமீட்டருக்கு ரூ.2000 கட்டணமும் வசூலிக்கப்படும். அதிநவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸுக்கு 10 கிலோமீட்டருக்கு ரூ.4000 கட்டணம் வசூலிக்கப்படும்.


  • 13:35 (IST) 14 May 2021
    தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    புதிய புயல் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்பட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் சூறைகாற்றுடன் அதி கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.


  • 13:31 (IST) 14 May 2021
    கமல்ஹாசன் ரமலான் வாழ்த்து!

    பரஸ்பர நலமும் நன்மையும் விரும்பி ரமலான் பெருநாளைக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்று கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.


  • 13:07 (IST) 14 May 2021
    9.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.19,000 கோடி வழங்கினார் பிரதமர் மோடி

    8-வது தவணை நிதியாக, 9.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.19,000 கோடி தொகையை வழங்கினார் மோடி. இந்தத் தொகை, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் வாங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.


  • 13:03 (IST) 14 May 2021
    பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு

    12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.


  • 12:47 (IST) 14 May 2021
    சனி, ஞாயிறு நண்பகல் 12 மணி வரை கடைகள் செயல்படும்

    வார நாட்களில் செயல்படுவதைப் போலவே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நண்பகல் 12 மணிவரை கடைகள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


  • 11:23 (IST) 14 May 2021
    கொரேனா சிகிச்சைக்கு அரசு பள்ளிகள்

    கொரோனா சிகிச்சை அளிக்க அரசு பள்ளிகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்து அறிவுறுத்தியுள்ளது.


  • 11:19 (IST) 14 May 2021
    சவுந்தர்யா ரஜினிகாந்த் ரூ.1 கோடி நிதியுதவி

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்


  • 11:08 (IST) 14 May 2021
    திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் நிதி

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஒரு மாத ஊதியத்தை அளிப்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


  • 11:05 (IST) 14 May 2021
    நடிகர் அஜித் ரூ.25 லட்சம் கொரோனா நிதி

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். கொரோனா பேரிடரை எதிர்கொள்ள நிதியுதவி அளிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் நிதியுதவி வழங்கியுள்ளார்.


  • 11:05 (IST) 14 May 2021
    நடிகர் அஜித் ரூ.25 லட்சம் கோடி கொரோனா நிதி

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். கொரோனா பேரிடரை எதிர்கொள்ள நிதியுதவி அளிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் நிதியுதவி வழங்கியுள்ளார்.


  • 10:35 (IST) 14 May 2021
    நடிகர் அஜித் ரூ.25 லட்சம் கொரோனா நிதி

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். கொரோனா பேரிடரை எதிர்கொள்ள நிதியுதவி அளிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் நிதியுதவி வழங்கியுள்ளார்.


  • 10:05 (IST) 14 May 2021
    ஒரே நாளில் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா

    நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,43,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 4000 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்த 37, 04,893 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  • 08:51 (IST) 14 May 2021
    விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிப்பு

    சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி இருச்சக்கர வாகனத்தில் வெளியே சுற்றுவோர், மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.


Tamil News Live Update Tamilnadu Latest News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment