Tamil News Update SV Sekar Women Journalist Issue : நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் பெண் பத்திரிக்காயாளர்கள் குறித்து தரக்குறைவாக சமூகவலைதளங்களில் பதிவிட்டது தொடர்பான வழக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் தரக்குறைவான கருத்தை பகிர்ந்திருந்தார். இந்த பதிவு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தரக்குறைவான கருத்தை பதிவிட்ட எஸ்வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு எஸ்வி வைத்த கோரிக்கையை நீதி மன்றம் நிராகரித்தது. இதனால் இந்த வழக்கில் ஆஜராக விலக்கு, வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி எஸ்வி சேகர் மீண்டும் மனுதாக்கல் செயதார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கலிபோர்னியாவில் உள்ள திருமலை சடகோபன் என்பவர் பக்தி மற்றும் தேசப்பற்று தொடர்பாக அனுப்புபவர் என்பதால், அதைபோல நினைத்து அவர் (2018 ஏப்ரல் 19) எழுதியதை பார்வேர்ட் மட்டுமே செய்தார்.
அதன்பின் அந்த பதிவு பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு பற்றியது என தெரியவந்ததால், அடுத்த நாளே (ஏப்ரல் 20) நீக்கிவிட்டு, உடனடியாக தனது செயலுக்கு மன்னிப்பு கோரியதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் தனிமனித ஒழுக்கமும், பெண்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள அவர், தனது பதிவை நீக்கிவிட்டு மன்னிப்புகோரிய பிறகும் வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் இந்த விகாரம் தொடர்பாக அம்பத்தூர் நீதிமன்ற வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றமும், கரூர், திருநெல்வேலி வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் விசாரணைக்கு தடை விதித்துள்ள நிலையில், சிறப்பு நீதி மன்றமும் தடை விதிக்க வேண்டும் என்று கெட்டுக்கொண்டார். ஆனால் பெண்கள் குறித்து அவதூறான கருத்தை எஸ்.வி.சேகர் பார்வேர்டு செய்த்தும் குற்றம்தான் என்பதால், இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி, முகநூலில் வந்த தகவலை படிக்காமல் பார்வேர்ட் செய்துவிட்டேன் என கூறுவதற்கு எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா? சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என புரிந்துகொள்ள முடியாத இவர்கள் எப்படி முக்கிய பிரமுகர் என சொல்லிக் கொள்கிறார்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி, எஸ்.வி.சேகர் மீதான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய தடைவிதித்தும், வழக்கில் அவர் ஆஜராக விலக்கு அளித்தும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil