பாஜகவில் எம்எல்ஏ சீட் பெற்றுத் தருவதாக ரூ50 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்குப் பதிவு

Tamil News : தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி ரூ 50 லட்சம் ஏமாற்றயதாக பாஜக பிரமுகர் புகார் அளித்துள்ளார்.

Tamilnadu News Update : சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எம்எல்ஏ சீட்டு வாங்கி தருவதாக கூறி 50 லட்சம் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாஜக நகர தலைவராக இருப்பவர் புவனேஷ்குபுமார். இவர் சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட சீட்டு வாங்கி தருவதாக கூறி தன்னிடம் 50 லட்சம் ஏமாற்றியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

இந்த புகாரில், கடந்த சட்டமன்ற தேர்தலில போட்டியிட சீட் கேட்டு விஜயராமன் என்பரை அணுகியதாகவும், அவர் தன்னை நரோத்தமன் என்பரிடம் அறிமுகம் செய்து வைத்ததாகவும், குறிப்பிட்டுள்ளார். இதில் தன்னை மத்திய அமைச்சர் ஒருவரின் உதவியாளராக இருப்பதாக கூறி, அறிமுகப்படுத்திக்கொண்ட நரோத்தமன், சீட்டுக்கு 1 கோடி பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் 50 லட்சம் செலுத்திய அவர், அடுத்து வெளியான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாத நிலையில், தனது பணத்தை திருப்ப கேட்டுள்ளார்.

ஆனால் பணம் வாங்கியவர்கள்  பணத்தை திரும்ப தர மறுத்ததால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் நாரோத்தமன், அவரது தந்தை சிட்டி பாபு (ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்) பெரம்பூரை சேர்ந்த விஜயராமன் மற்றும் அவரது மகன் சிவா பாலாஜி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu news update arani bjp executive complaint against cheating

Next Story
சீமன் vs செம்மண்: திசை திரும்பிய பாலியல் வழக்கு; திருத்தி எழுதிய ஐகோர்ட்Tamil Nadu crime news in tamil: Typographical error leads to rape accused escape
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express