scorecardresearch

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் : விசாரணைக்கு ஆஜரானார் சிறப்பு டிஜிபி

TamilNadu Update : பாலியல் புகார் மீதான விசாரணைக்கு தமிழ்நாடு சிறப்பு டிஜிபி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் : விசாரணைக்கு ஆஜரானார் சிறப்பு டிஜிபி

Sexual Harassment Case Against Special DGP : பெண் ஐபிஎஸ் அதிகாரி  கொடுத்த பாலியல் புகார் மீதான விசாரணைக்காக சிறப்பு டிஜிபி, சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட சென்னையில் இருந்து தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி, புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வரவேற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு அவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்பி புகார் அளித்தார். இந்த புகார் குறித்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சிறப்பு டிஜிபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.  

மேலும் இந்த புகாரை குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று, தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இதனையடுத்து  இந்த புகார் குறித்து விசாரணைக்காக சிறப்பு டிஜிபி, சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில்  இன்று ஆஜராகியுள்ளார்.  அவரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu news update sexual harassment case against special dgp