பெரியாரின் கொள்கைகளை அகற்றுவதற்காகவே பாஜக தமிழகம் வந்துள்ளது என்று கூறிய பாஜக எம்பி-யின் பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை தொடங்குகிறது. இதனால் தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில, நாளை வாக்குப்பதிவு தொடர்பான பணிகளில், தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறனர். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான தேஜஸ்வி சூர்யா பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், பெரியாரின் கொள்கைகளை ஒழிப்பதற்காகவே பாஜக தமிழகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. தமிழகத்தில் இருந்து பெரியாரின் கொள்கைகளை அகற்றுவோம் என்று கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சிவகங்கை தொகுதியில் எம்பி கார்த்திக் சிதம்பரம் இது தொடாபாக கூறுகையில், பெரியாரின் கொள்கைகளை தமிழகத்தில் இருந்து அகற்றுவோம் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார். அதற்கு இபிஎஸ், ஓபிஎஸ் நிலைபாடு என்ன? பாஜகவின் இந்தி, இந்துத்துவா கொள்கைகள் தமிழக மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றன. பாஜக தலைவர்களின் பிரச்சாரங்களைத் தமிழக மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். அதிகக் குற்றங்கள் நடக்கும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். அவர் வந்தவுடனே கோவையில் கலவரம் நடக்கிறது. அதை எப்படித் தமிழக மக்கள் ஏற்பார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் ‘பெரியாரிசம்’ (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே பாஜக இங்கு வந்திருக்கிறது என்று பாஜக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்
— P. Chidambaram (@PChidambaram_IN) April 5, 2021
‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார்
தொடர்ந்து தேஜஸ்வி சூர்யாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் ‘பெரியாரிசம்’ (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே பாஜக இங்கு வந்திருக்கிறது என்று பாஜக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் ‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார்.
தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அஇஅதிமுக பாஜக தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை?
— P. Chidambaram (@PChidambaram_IN) April 5, 2021
தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக EPS-OPS கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?
தமிழ் நாகரிகத்தையும் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணா. தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அஇஅதிமுக பாஜக தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை? தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக EPS-OPS கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா? என பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil