தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்
நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். கேரள கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான ரவி, இந்திய உளவுத்துறையான ஐ.பி சிறப்பு இயக்குநராக இருந்தவர். தமிழகத்தில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தில் நிரந்தர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு செயல் திட்டம்
உலகை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த பிரிக்ஸ் நாடுகள் உறுதியேற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அடுத்த 15 ஆண்டுகளுக்கு பிரிக்ஸ் அமைப்பு ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும் எனவும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அக்.31 வரை அரசியல் மத நிகழ்ச்சிகளுக்கு தடை- முதலமைச்சர்
கொரோனா 3ஆவது அலை எச்சரிக்கை உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திருவிழாக்கள், அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடையை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வருமான வரி தாக்கல்- அவகாசம் நீட்டிப்பு
2021-22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழகத்தில் இன்று மேலும் 1631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,30,592 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு இன்று 25 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35,119 ஆகஉ யர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் சமூக ஆர்வலரான விவேக கடந்த ஏப்ரல் மாதம் மரணமடைந்தது தொடர்பாக சுகாதாரத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய கொரோனா சூழல், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பாபனிப்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் மேற்கு வங்க முதல்வர் செய்தார் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
செப்டம்பர் 22ஆம் தேதி பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார். செப்டம்பர் 23 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார்.
தமிழகத்தில் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கோயில்களில் வைக்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. சிலைகளை சேகரிக்க கோயில்களில் பொறுப்பு அலுவலரை நியமிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் 3 மாதத்தில் காவலர்களுக்கு ஆணையம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. காவல்துறையின் குறைகளை நிவர்த்தி செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரும் காலங்களில் காவலர்களுக்கு 8 மணி நேர வேலை முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் காவலர்கள் 3 ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையே இன்று நடைபெறவுள்ள கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் செப்டெம்பர் 11-ம் தேதி 'மகாகவி' நாளாக கொண்டாடப்படும் என்றும் பாரதியார் உருவ சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்கள் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து – இந்தியா இடையிலான கடைசி ஒரு நாள் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற இருந்த நிலையில், இந்திய அணி உடற்பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதல் நாள் ஆட்டம் ரத்தாகியுள்ளது.
சென்னை, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வருகின்ற 14ம் தேதி அன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
இந்தியா 70 ஆண்டுகளாக சேர்த்த சொத்தை பிரதமர் மோடி விற்பனை செய்வது வேதனை அளிக்கிறது கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்துகிறார் தனியார் மயமாக்கும் பாஜக அரசின் எந்த ஒரு நடவடிக்கையும் கடும் கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி வருகிறது அண்ணாத்த திரைப்படம். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் முதல் பார்வை (firts look) இன்று வெளியானது. இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் சண்முகராஜ் என்பவர் உயிரிழந்தார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.35,608 ஆக உயர்ந்துள்ளது.
வாகனங்களில் வெளிப்புறம் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்களை 60 நாட்களில் நீக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வாகனங்களில் கட்சி கொடிகள், கட்சி தலைவர்கள் படங்களை தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 37,681 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ.98.96க்கும், டீசல் ரூ.93.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.