பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணையம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் மாற்றம் இல்லாத பெட்ரோல் விலை இன்று (ஆகஸ்ட் 2) ரூ100.75, டீசல் விலை ரூ92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவு
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 316-ஆக அதிகரித்துள்ள நிலையில், 3500-க்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வில், உயிரிழந்தவர்களில் 27 பேர் பள்ளி மாணவர்கள் என்றும், 23 மாணவர்களை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: பி.வி.சிந்து வெளியேற்றம்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில், சீன வீராங்கனை ஹீ பிங் ஜியாவுடன் மோதிய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து 19-21,14-21 என்ற நேர் செட் கணக்கில்
-
Aug 02, 2024 21:47 ISTவயநாடு நிலச்சரிவு: நிவாரணப் பணிகளுக்கு சென்றுள்ள தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ஸ்டாலின் உரையாடல்
வநயாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட தமிழ்நாட்டில் இருந்து கேரளா சென்றுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கூறும்படி முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
-
Aug 02, 2024 21:16 ISTசென்னை பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஸ்டாலின் ஆய்வு
சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு பேரிடர் மையத்தில் அழைப்புகள், பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். நீலகிரி, கோவை, மாவட்டங்களில் பெய்து வரும் மழை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
-
Aug 02, 2024 20:47 ISTவிஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு - இ.பி.எஸ் குற்றசாட்டு
தி.மு.க அமைச்சர் சிறையில் இருப்பதை மறைக்க திட்டமிட்டே எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்துக்கும் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கும் சம்பந்தம் இல்லை என்று கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை சந்தித்தபின் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
Aug 02, 2024 20:16 ISTவிண்வெளிக்கு செல்லும் இந்தியர்கள்
அமெரிக்காவின் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவைச் சேர்ந்த குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் மற்றும் விங் கமாண்டர் சுபஹான்சு சுக்லா ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கின்றனர்.
-
Aug 02, 2024 20:06 ISTபாரிஸ் ஒலிம்பிக்; வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. அங்கிதா பஹத், தீரஜ் பொம்மதேவரா இணை, ஸ்பெயினின் பாப்லோ - எலியா இணையை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது
-
Aug 02, 2024 19:24 ISTசெப்டம்பர் 1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் - அமைச்சர் சக்கரபாணி
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்
-
Aug 02, 2024 18:54 ISTபாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்தியா
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: ஹாக்கி லீக் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 3-2 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் 52 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
-
Aug 02, 2024 18:39 ISTஆடிபெருக்கு - நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்
தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக உள்ளதால் நாளை (ஆக.03) ஆடிபெருக்கு நாளில் பவானி, நொய்யல், ஆழியாறு உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்” - கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தல்
-
Aug 02, 2024 18:39 ISTகேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கிய நடிகர் மோகன்லால்
வயநாடு பெரும் நிலச்சரிவு - கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கிய நடிகர் மோகன்லால்.
-
Aug 02, 2024 18:09 ISTதமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு
திண்டுக்கல், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை மழை நாட்களில் கண்காணித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவு; குறிப்பாக மழை நேரத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தல்
-
Aug 02, 2024 18:09 ISTவயநாடு எதிரொலி, தமிழ்நாடு அரசு உத்தரவு
வயநாடு பெரும் நிலச்சரிவு எதிரொலி தமிழ்நாட்டின் மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களை கண்காணிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.
-
Aug 02, 2024 17:38 IST2வது நாளாக களத்தில் ராகுல், பிரியாங்கா
வயநாடு பெரும் நிலச்சரிவு: புஞ்சிரி மட்டம், முண்டக்கை பகுதிகளில் மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்.பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆய்வு.
-
Aug 02, 2024 17:38 ISTவயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 338ஆக உயர்வு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 338ஆக உயர்வு முண்டகையில் 2000க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
-
Aug 02, 2024 16:54 ISTரயில்கள் ரத்து
நாளை முதல் ஆக.14 வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.
-
Aug 02, 2024 16:53 ISTமின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவத்தால் பரபரப்பு
சென்னை புறநகர் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவத்தால் பரபரப்பு கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் ரயிலில் இருந்த 2 பயணிகள் காயம் - மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை
-
Aug 02, 2024 16:50 ISTகேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் வழங்கிய நயன்தாரா
கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் வழங்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நாம் ஒன்றுபட்டு நிற்போம் - நயன்தாரா
-
Aug 02, 2024 16:46 ISTஆடிப்பெருக்கு : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தது கல்வித்துறை
-
Aug 02, 2024 16:34 IST14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Aug 02, 2024 16:33 ISTநீட் ஆள்மாறாட்டம் - 4 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு.
2019-ம் ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சென்னையை சேர்ந்த மாணவர்கள் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த விவகாரம் வழக்கில் மாணவர்கள், பெற்றோர்கள் ஆள்மாறாட்டம் செய்ய உதவிய புரோக்கர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மீது வழக்குப்பதிவு நீட் ஆள்மாறாட்டம் - 4 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு.
-
Aug 02, 2024 15:52 ISTவயநாடு நிலச்சரிவு - கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
வயநாடு நிலச்சரிவு விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி, வயநாடு ஆகிய ஆட்சியர்கள் மீட்பு பணி மற்றும் சேத விவரங்கள் பற்றி அறிக்கை தர உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், தமிழ்நாட்டில் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் இருக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அறிக்கை தரவும், நிலச்சரிவு பகுதிகளில் உள்ள சுரங்கம், குவாரி, சாலை, கட்டுமான திட்டங்கள் பற்றிய விவரங்களை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவை பாடமாக எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டில் எடுத்த முன்னெச்சரிக்கை பற்றி அரசு அறிக்கை தரவும் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
-
Aug 02, 2024 15:22 ISTகாலிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கிதா பகத் ஆகியோர் இந்தோனேசியா அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்
-
Aug 02, 2024 15:20 ISTஆட்டு இறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். அசைவ உணவு சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Aug 02, 2024 14:39 ISTசிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் வலியுறுத்தல்
"சிறுபான்மை மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நாகை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் நாகூர் ஏ.எச். நஜிமுதீன் வலியுறுத்தியுள்ளார்.
-
Aug 02, 2024 14:38 ISTஇன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
கேரளக் கடற்கரையிலிருந்து தெற்கு குஜராத் கடற்கரை வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் மேற்கு வங்க, ஜார்க்கண்ட் மாநிலங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாலும் கேரளாவில் இன்றும், நாளையும் (ஆக.03) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Aug 02, 2024 14:24 IST10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Aug 02, 2024 13:57 ISTமதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது? ஜெ.பி நட்டா பதில்
மதுரை எய்ம்ஸ் தொடர்பான ஆ.ராசாவின் கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா, “மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். தொழில்நுட்ப காரணங்களால் கட்டுமானப் பணிகள் தாமதமாகி உள்ளன” என்றார்.
-
Aug 02, 2024 13:35 ISTராமருக்கு வரலாறோ, ஆதாரமோ இல்லை; அமைச்சர் சிவ சங்கர்
ராஜேந்திர சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடும் நிகழ்வில் அமைச்சர் சிவ சங்கர், “ராமருக்கு வரலாறோ, ஆதாரமோ கிடையாது.
ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளன” என்றார். -
Aug 02, 2024 13:12 ISTதங்கலான் பாடல் இன்று வெளியீடு
தங்கலான் படத்தின் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.
-
Aug 02, 2024 12:48 ISTவெளிநாடு கல்வி; முதல் பயண செலவு ஏற்பு: மு.க ஸ்டாலின்
“வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் ‘முதல் பயண' செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்கள் பாராட்டு விழாவில் இதனை ஸ்டாலின் அறிவித்தார். -
Aug 02, 2024 12:09 ISTகுட்கா வழக்கு; சி. விஜய பாஸ்கருக்கு சம்மன்
குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜய பாஸ்கர், பி. வி ரமணா ஆகியோருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
-
Aug 02, 2024 11:31 ISTநீட்தேர்வை ரத்து செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் வினாத்தாள் கசிவு, பாட்னா மற்றும் ஹாரிப்பாக் பகுதியில் உள்ள மையங்களில் மட்டுமே நடந்துள்ளதால் மொத்த தேர்வையும் ரத்து செய்வது சரியல்ல. தேர்வு முறையில் உள்ள குறைகளை நிபுணர்குழு அமைத்து சரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீட்தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
-
Aug 02, 2024 11:27 ISTகோட் படத்தில் 3வது பாடலுக்கான ப்ரமோ இன்று வெளியீடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் நடிக்கும் தி கோட் (The GOAT) படத்தின் 3வது பாடலின் ப்ரொமோ இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் பாடல் நாளை மாலை 7.30 மணிக்கு வெளியாகிறது.
-
Aug 02, 2024 10:57 ISTபுதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்வு
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் 6500-ல் இருந்து 8000 ஆக மாற்றி அரசு அறிவித்துள்ளது. மழைக்கால நிவாரணம் 3 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக உயர்வு. பொதுத்தேர்வில் முதல் இடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ20,000, 2-வது இடம்பெறும் மாணவருக்கு ரூ15,000, 3-வது இடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர் ரங்கசாமி.
-
Aug 02, 2024 10:51 IST12-ம் வகுப்பில் இருமுறை தோல்வி: நீட் தேர்வில் 98% மதிப்பெண் பெற்றது எப்படி? டாக்டர் ராமதாஸ் கேள்வி
குஜராத் மாநில கல்வி வாரியம் கடந்த மார்ச் மாதம் நடத்திய 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் 31 மதிப்பெண்களும், இயற்பியல் பாடத்தில் 21 மதிப்பெண்களும் பெற்று தோல்வியடைந்த ஒரு மாணவி, 12-ஆம் வகுப்புத் தேர்வை இருமுறை எழுதியும் வெல்லமுடியாத நிலையில் நீட் தேர்வில் 98% மதிப்பெண் பெற்றது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ள டாக்டர் ராமதாஸ், நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
12-ஆம் வகுப்புத் தேர்வை இருமுறை எழுதியும் வெல்லமுடியாத மாணவி நீட் தேர்வில் 98% மதிப்பெண் பெற்றது எப்படி?
— Dr S RAMADOSS (@drramadoss) August 2, 2024
நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் , மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 720-க்கு 705 (98%) மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற… -
Aug 02, 2024 10:26 ISTதங்கம் மற்றும் வெள்ளி விலை நிவவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ240 உயர்ந்து, ரூ51680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி கிராமுக்கு ரூ30 உயர்ந்து, 6,460-க்கு விற்பனையாகிறது.
-
Aug 02, 2024 10:24 ISTபுதுவை பட்ஜெட் தாக்கல்: முதல்வர் ரங்கசாமி புதிய அறிவிப்பு
புதுவை சட்டசபையில் இன்று, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், புதுச்சேரியில் மானிய விலையில், சர்க்கரை, பருப்பு, கோதுமை எண்ணெய் வழங்கப்படும் என்றும், காரைக்காலில் பழமையான அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
Aug 02, 2024 10:06 ISTமண்சரிவை சீரமைக்கும் பணி தாமதம்: நீலகிரி மலை ரயில் சேவை ரத்து
கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அதனை சீரமைக்கும் பணிகள் தாமதமாகி வருவதால் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
Aug 02, 2024 10:04 ISTகோவை மத்திய சிறையில் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை!
கரூர் மாவட்டம் தவுட்டுபாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (48) என்பவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் உள்ள 3வது பிளாக்கில் அடைக்கப்பட்ட சிவக்குமார் அங்கிருந்த ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Aug 02, 2024 10:02 ISTபாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி விபத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
-
Aug 02, 2024 09:26 ISTசேலத்தில் பாதாளத்தில் ஏலியனுக்கு சிலை அமைத்து வழிபாடு
சேலத்தில் பாதாளஅறையில் ஏலியனுக்கு சிலை அமைத்து வினோத வழிபாடு நடத்தி வருகின்றனர். ஏலியன் தெய்வத்திடம் பேசி அனுமதி பெற்று கோவில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், ஆத்ம ரூபத்தில் ஏலியன்கள் வருவார்கள் என்று சித்தர் பாக்கியா என்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
-
Aug 02, 2024 09:18 ISTகுறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய ஜார்க்கண்ட் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Aug 02, 2024 09:18 ISTபெருங்களத்தூர் மேம்பாலம்: பயணிகள் வரவேற்பு
பெருங்களத்தூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் தாம்பரம் - செங்கல்பட்டு பாலப்பகுதி மற்றும் நீள் வட்ட சுற்றுப்பாதை திறக்கப்பட்டதற்கு பயணிகள் வரவேற்பு அளித்து வருகின்றனர். செங்கல்பட்டு - தாம்பரம் பாலப்பகுதி, ரயில்வே கேட் பகுதி ஏற்கனவே மக்கள் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Aug 02, 2024 09:15 ISTவயநாட்டில் சாரல் மழை.. 4வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்!
வயநாடு நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதைந்துள்ள உடல்களை மீட்க ராணுவம், இஸ்ரோ, வனத்துறை, காவல்துறை என பலரும் கைக்கோர்த்து போராடி வருகின்றனர். தற்போது அங்கே சாரல் மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Aug 02, 2024 08:36 ISTபெண் காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பு காரணமாக மரணம்
சென்னை செம்பியம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜெயசித்ரா என்பவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி வாந்தி எடுத்த ஜெயசித்ராவை உறவினர்கள் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே மரணமடைந்துள்ளார்.
-
Aug 02, 2024 08:33 ISTகலைஞரின் 6வது ஆண்டு நினைவு: தி.மு.க அமைதி பேரணி
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 6வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஆகஸ்ட் 7ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. காலை 7 மணிக்கு ஓமந்தூரார் வளாகத்தில் பேரணி தொடங்கி கலைஞர் நினைவிடத்தில் முடிவடைகிறது.
-
Aug 02, 2024 08:11 ISTவயநாடு நிலச்சரிவு: மீட்பு பணிகளில் களமிறங்கிய இஸ்ரோ
வயநாடு பகுதியில் ராணுவத்துடன் இணைந்து இஸ்ரோ மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மண்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதியை RISAT SAR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படமாக எடுத்து அதன் முழு தகவல்களை இஸ்ரோ வழங்கி உள்ளது. இஸ்ரோ அளித்த தகவலின்படி, மண் சரிவு ஆரம்பப் புள்ளியில் இருந்து 8 கிலோ மீட்டர் பயணித்து முடிந்திருக்கிறது என்றும் ஒட்டுமொத்தமாக 86,000 சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்களை வழங்கி உள்ளது.
-
Aug 02, 2024 07:43 ISTவயநாடு நிலச்சரிவு: தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணி தீவிரம்
வயநாடு நிலச்சரிவால் மண்ணில் புதைந்தவர்களை தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் தெர்மல் ஸ்கேனர் காட்டிக் கொடுக்கும்.
-
Aug 02, 2024 07:43 ISTவயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 316-ஆக உயர்வு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 316-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. முண்டக்கை, சூரல் மலை, மேப்பட்டி ஆகிய இடங்களில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
Aug 02, 2024 07:39 ISTகாவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு: கொள்ளிடம் ஆற்றில் மின்கோபுரங்கள் சரிந்தன
காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் இருந்த 2 உயரழுத்த மின் கோபுரங்கள் சரிந்து விழுந்துள்ன. நேற்று நள்ளிரவு ஆற்றின் நடுவே இருந்த ஒரு மின் கோபுரம் விழுந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு மற்றொரு மின் கோபுரமும் ஆற்றில் மூழ்கியது.
-
Aug 02, 2024 07:37 ISTஉதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
சீர்காழி அருகே திருவெண்காட்டில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன்(58) என்பவர் வீட்டில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீச்சு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.