New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/02/shankar-jiwal-and-ak-viswanathan.jpg)
சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ் மற்றும் ஏ.கே.விஸ்வநாதன் ஐ.பி.எஸ்
ஜூன் இறுதியில் ஓய்வு பெறும் சைலேந்திரபாபு; அடுத்த தமிழக டி.ஜி.பி.,யாக சங்கர் ஜிவால் அல்லது ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய இருவரில் ஒருவர் வர அதிக வாய்ப்பு
சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ் மற்றும் ஏ.கே.விஸ்வநாதன் ஐ.பி.எஸ்
தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு வருகின்ற ஜூன் மாதத்தோடு ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த டி.ஜி.பி.,யாக வர சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரிகளிடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி தமிழகத்தின் டி.ஜி.பி ஆக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் பொறுப்பேற்றார். இந்தநிலையில், வருகின்ற ஜூன் மாதத்தோடு அவர் ஓய்வு பெறுகிறார்.
இதையும் படியுங்கள்: மதுரை வரிச்சூர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்டேனா? திருச்சி சூர்யா விளக்கம்
இதனையடுத்து, புதிய டி.ஜி.பி யார் என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. சைலேந்திர பாபு ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், அடுத்த டி.ஜி.பி யார் என்பது குறித்து 3 பேர் அடங்கிய பட்டியலை தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கும். இதில் ஒருவரை டி.ஜி.பி ஆக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்.
இந்தநிலையில் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் சீனியாரிட்டி பட்டியலில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குனரும், முன்னாள் சென்னை காவல் ஆணையருமான ஏ.கே.விஸ்வநாதன், ஊர்க்காவல்ப்படை தலைவர் பி.கே. ரவி, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் ஆகிய 5 பேர் உள்ளனர்.
இதில் வேறு மாநிலப் பணிக்கு சென்றதால் டெல்லி காவல் ஆணையராக உள்ள சஞ்சய் அரோரா தமிழக டி.ஜி.பி ஆக நியமிக்க முடியாது. அதேநேரம் பாலியல் வழக்கு நிலுவையில் உள்ள ராஜேஷ் தாஸ் பெயரும் பரிந்துரையில் இடம்பெறாது.
மேலும், பி.கே ரவி தீயணைப்புத்துறை டி.ஜி.பி.,யாக இருந்தப்போது கட்டிட அனுமதிகளில் விதிமீறல் இருந்ததாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, தற்போது ஊர்க்காவல் படை தலைவராக உள்ளார். எனவே அவரை டி.ஜி.பி.,யாக நியமிக்க தமிழக அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே கடைசியாக சங்கர் ஜிவால் அல்லது ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய இருவரில் ஒருவரே டி.ஜி.பி.,யாக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதிலும், சென்னை காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவாலுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவரது நேர்மை, துணிவு, சிறப்பான செயல்பாடு காரணமாகவும், முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமாக உள்ளதாலும் அவர் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அதேநேரம், அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தக்காராக இருந்தாலும், பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஏ.கே.விஸ்வநாதனை டி.ஜி.பி.,யாக நியமிக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதலவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், இறுதியில் சங்கர் ஜிவால் அல்லது ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய இருவரில் ஒருவரே தமிழக டி.ஜி.பி.,யாக வர உள்ளது உறுதியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.