கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள நொய்யலாறு பாதையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.
கோவை ஆத்துபாலம் பகுதி வழியாக செல்லும் நொய்யல் ஆறு நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு பிளாஸ்டிக் கழிவுகளை போட்டுள்ளனர். அந்த பிளாஸ்டிக் கழிவுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ அருகே இருந்த காய்ந்த மரங்கள், செடிகளில் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையில் இருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தெற்கு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பற்றி எரியும் தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் அருகே குடியிருப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர். அங்கு யாராவது தீ பற்ற வைத்தார்களா? என்ன காரணம் என்பது குறித்து கரும்புக்கடை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“