/indian-express-tamil/media/media_files/2025/04/21/WAx47krY1a0tA0QXZSWh.jpg)
10 ஆயிரத்தை கடனாக பெற்று பத்து வருடங்கள் ஏமாற்றிய வாலிபரை மடக்கி பிடித்து பத்தே நிமிடத்தில் பணத்தை வாங்கி கொடுத்த நெய்வேலி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் பாராட்டு குவிந்து வருகிறது.
நெய்வேலி நகர காவல் நிலைய சரகம் சிலோன் குவார்ட்ஸ் பகுதியில் வசிப்பவர் லோகநாயகி (70). இவர் தனக்கு பழக்கமான ஒருவருக்கு ரூ10,000 கடனாக கொடுத்ததாகவும், பணம் வாங்கியவர், 10 வருடங்களாக பணம் கொடுக்காமல் அலைகழிக்கபட்ட மூதாட்டி தகாத வார்த்தை பேசியதாகவும் தெரிய வருகிறது. ஒன்றுமே செய்ய முடியாத அந்த வயதான லோகநாயகி நெய்வேலி நகரப் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் வசம் புகார் கூறியுள்ளார்.
உதவி ஆய்வாளர் சம்பந்தப்பட்டவரை காவல் நிலையத்திற்கு அழைத்து அடுத்த நிமிடத்தில் ரூபாய் 10 ஆயிரத்தை வாங்கி லோக நாயகியிடம் கொடுத்துள்ளார். நேரடியாக விசாரணை மேற்கொண்டு 70 வயதுடைய மூதாட்டிக்கு ரூபாய் 10,000 பணத்தை வாங்கி கொடுத்தார். உதவி ஆய்வாளருக்கு மூதாட்டி கண்ணீர் மல்க நன்றி கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.