scorecardresearch

கொடநாடு வழக்கு : சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் போலீஸ் விசாரணை

Tamilnadu News Update : கொடநாடு வழக்கு தொடர்பாக ஏற்கனவே 81 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது விவேக் ஜெயராமனிடம் விசாரனை நடத்தப்பட்டுள்ளது.

கொடநாடு வழக்கு : சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் போலீஸ் விசாரணை

Tamilnadu News Update For Kodanadu Issue : கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமனிடம் நீலகிரி போலீசார் காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாணை மேற்கொண்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் பங்களா மற்றும் எஸ்டெட் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில், 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியை கொலை செய்துவிட்டு பங்களாவில் சில மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சையான் என்பவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், இதில் சையன் மற்றும் மனோஷ் என்பரிடமும், கொலை செய்யப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் தம்பியிடமும் விசாரணை நடைபெற்றது. அந்த வகையில் தற்போது ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அண்ணன் மகன் மற்றும் ஜெயா டிவியின் சிஇஒ விவேக் ஜெயராமனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.   

கோவை மாவட்டத்தில் காவல்துறை பயிற்சி பள்ளியில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில், கொடநாடு எஸ்டேட்க்கு அடிக்கடி வந்து சென்றவர், சம்பவம் அரங்கேறுவதற்கு முன்பு அங்கு என்னென்ன பொருட்கள் இருந்தது பணியில் இருந்தவர்கள் யார் யார் என்பது தொடர்பான விபரங்கள் குறித்து கேளவி எழுப்பப்படடதாக காவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 81 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கொடுத்த பதிலின் அடிப்படையில விவேக் ஜெயராமனிடம் கேள்விககள் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது விவேக் கொடுத்துள்ள விளக்கத்தில் யாருடைய பெயரேனும் குறிப்பிட்ட்டிருந்தால் அடுத்தக்கட்டமாக அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் தனிப்படை அமை்கப்பட்டு விசாரணை  மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu nilgris police inquiry with vivek jayaraman for kodanadu case