வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் வட மாநில தொழிலாளர் சிறுத்தை தாக்கி படுகாயம் அமைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வால்பாறை சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் 35″வது தோட்டப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த வட மாநில தொழிலாளரான அணில் ஓரான் (26) என்பரை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை தாக்கியது.

இதனால் படுகாயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். இந்த தாக்குதலில் காலில் பலத்த காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டதால் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவரை கோவை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் வனத்துறையினருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil