/indian-express-tamil/media/media_files/2024/11/22/kusiBj5o4UP2xSE2QfFa.jpg)
கொங்கு மண்டலத்தில் நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை - நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன் கூறியுள்ளார்.
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன்,வடக்கு தொகுதி தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை பாபு, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அபிராமி, வணிக பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள் கூறுகையில், ஒட்டு மொத்தமாக சீமான் மீது அதிருப்தியாக இருக்கிறோம். 20 பொறுப்பாளர்கள் ஒட்டு மொத்தமாக வெளியேறிகிறோம். மக்கள் அண்ணியமாக பார்க்கிறார்கள்.சீமானின் பேச்சு முன்னுக்கு பின்னாக இருக்கின்றது. இனி எந்த கட்சியில் இணைய போகிறோம் என இன்னும் முடிவு செய்யவில்லை.கட்சியை விட்டு வெளியேறுவது சீமானுக்கு தெரியாது. அவரிடம் தெரிவிக்கவில்லை.
சீமான் அவர்களை நாங்கள் தவறாக ஏதும் சொல்லவில்லை. கட்சியை கடந்து நண்பர்களாக பயணிக்க ஆசை படுகிறோம். கொங்கு மண்டலத்தில் நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை. நாம் தமிழர் இரண்டாவது கட்சியாக பிரிய வாய்ப்பு இல்லை. திமுக வலிமையான கட்டமைப்பு இருக்கிறார்கள், அதிமுக , திமுக கட்சி கட்டமைப்பு நன்றாக உள்ளது..
தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் அதிருப்தியில் தான் உள்ளார்கள்.கொள்கைக்கு நடைமுறைக்கு வித்தியாசம் உள்ளது.அதில் உடன்பாடு இல்லை.அடுத்தகட்ட தலைவர்கள் யாரும் இல்லை. எதையும் செய்ய முடியவில்லை. சீமான் ஹிட்லர் போன்று செயல்படவில்லை. திமுகவில் இணைய இன்னும் முடிவு ஏற்கவில்லை. சமூகங்களை பேசுவதில் உடன்பாடு இல்லை.அதில் சங்கடம் ஏற்பட்டுள்ளது.
வெற்றியை நோக்கிய பயணம் இல்லை. சீமான் உடைய பெரிய ஆளுமை விஜய் கிடையாது. தவெக கட்சியில் நாங்கள் இணைய வாய்ப்பு இல்லை. சீமான் எடுக்கும் முடிவில் உடன்பாடு இல்லை தங்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்தனர்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.