New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/21/SzwFKtBFAJH2AXhLTIz6.jpg)
2026-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், கட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்த் திடீரென சந்தித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி நடிகராக சில படங்களில் நடித்திருக்கும் சீமான், நாம் தமிழர் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்கில் 3-வது இடத்தை பிடித்து மற்ற கட்சிகளுக்கு பெரிய போட்டியான கட்சியாக உருவெடுத்தது.
இதனிடையே வரும் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், கட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயம் அதிகமான இளைஞர்கள் உள்ள கட்சியாக பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி தற்போது விஜய் புதிய கட்சி தொடங்கியுள்ளதால், சற்று சரிவை சந்தித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதேபோல், சமீப காலமாக சீமான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சிக்குள் பிரச்சனைகள் எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியது. விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பாக அவரை ஆதரித்து பேசிய சீமான் தற்போது அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த அண்ணன் சீமான் !#rajinikanth #seeman pic.twitter.com/XHipI3tvPg
— Duraimurugan (@Saattaidurai) November 21, 2024
இதனிடையே சீமான், இன்று திடீரென நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், அரசியல் குறித்து பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்தபோது அவரை கடுமையாக விமர்சித்த சீமான் தற்போது அவரை சந்தித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.