Advertisment

நாகப்பாவை கடத்தியவருக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா? சீமான் சர்ச்சை பேச்சு

திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நயன்தாரா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

author-image
WebDesk
New Update
Trichy: Naam Tamilar Katchi Seeman press meet Tamil News

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

நாகப்பாவை கடத்திய வீரப்பனுக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா? அவர் தமிழர் மாண்பு தவறாமல் வாழ்ந்து காட்டினார். அவர் இருந்திருந்தால் காவிரி பிரச்சனையெல்லாம் இப்போது வந்திருக்குமா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

Advertisment

காவிரி நீர் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையத்தின் உத்தரவ மதிக்காத கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக இரு மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்று தர நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை தொடர்ந்து விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் இது தொடர்பான சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினார். அதனைத் தொடர்ந்து தான் செல்லும் இடமெல்லாம் மத்திய மாநில அரசுகள் குறித்து விமர்சனங்களை கொடுத்து வரும் சீமான் இன்று திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சந்தனமரம் தான் இந்த மாவட்டத்தின் பெரும் வருவாயாக இருந்தது. மீண்டும் காட்டு இலாக்கா அமைச்சகம், சந்தன மரங்களை நட்டு வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். எங்க ஆளு வீரப்பன் இருக்கும் வரை மரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருந்தது. அவரை அநியாயமாக சந்தன மரங்களை வெட்டி கடத்தினார், யானைகளை கொன்று தந்தங்களை கடத்தினார் போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பானார்கள்.

அவர் காட்டில் இருந்தவரை ஒருபய காட்டுப்பக்கம் போனது இல்லை. அவர் இருக்கும்போது காவிரி பிரச்சனை வந்திருக்குமா? அவர் மீது அநியாயமாக பழிபோட்டு மாயாவி திருடன் என்று சொல்கிறார்கள். அவர் சந்தன மரங்களை வெட்டி கடத்தினார். யானை தந்தங்களை கடத்தினார் என்று சொல்கிறார்கள். அதனைத்தையும் ஒப்புக்கொள்கிறேன். சரி விற்றவர் இங்கே இருக்கிறார் அதனை வாங்கியர் எங்கே என்று கேட்டால் பதில் இல்லை..

சரி அதை எல்லாம் விற்கு காட்டுக்குள் என்ன பங்களாவா கட்டினார்? ஏதாவது சேர்த்து வைத்துள்ளாரா? காட்டுக்குள் இருந்தவர் சாராயம் காய்ச்சி விற்றாரா? பீடி சிகரெட்டி குடித்தாரா? கட்டிய மனைவியை தவிர வேறு ஒரு பெண்ணை தூக்கி சென்றாரா? நாகப்பாவை தூக்கிக்கொண்டு போன அவருக்கு நயன்தாராவை தூக்க தெரியாதா? தமிழர் மரபு தவறாமல் வாழ்ந்தவர். அவர் வெளியே வந்து பேசிவிட்டால் நாம் சிக்கிவிடுவோம் என்பதால் அவர் மீது பழியை போட்டு கொன்றுவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், நயன்தாரா 2005-ம் ஆண்டு தான் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment