Advertisment

'சங்கி' என்பதை பெருமையாக ஏற்றுக்கொள்கிறேன்: ரஜினி உடனான சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்று சொன்னார். அதைத்தான் நான் அமைப்பு சரியில்லை என்று சொல்லி வருகிறேன்.

author-image
WebDesk
New Update
Seeman Nahs

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நேற்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், சங்கி என்றால் சக தோழன் என்று பொருள் என புது விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று கூறி அரசியல் கட்சி தொடங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு வருகிறார். வெற்றி பெறவில்லை என்றாலும், ஒவ்வொரு தேர்தலிலும் அவரது வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற சீமானின் சித்தாந்தம் மக்கள் மத்தியில் பரவத்தொடங்கியுள்ளது.

இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம்,புதிய அரசியல்கட்சி தொடங்கிய நடிகர் விஜய், சீமானுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் விஜய் தனது உடன்பிறவா தம்பி என்று சீமான் ஒவ்வொரு மேடைகளிலும் பேசி வந்தார். ஆனால் கடந்த மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்திய விஜய், திராவிடம் எனது இரு கண்களில் ஒன்று என்று கூறியிருந்தார்.

விஜயின் பேச்சால் அதிருப்தியான சீமான், விஜயை கடுமையாக விமர்சித்த நிலையில், கூட்டணி இல்லை தனித்து போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார். அதே சமயம் விஜய் கட்சியினால், சீமானுக்கு வரவேற்பு குறைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், நேற்று சீமான் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியானது.

இது குறித்து சீமான் புதிய தலைமுறை சேனலுக்கு அளித்த பேட்டியில், ரொம்ப நாளாக அவரும் நானும் சந்திக்க முயற்சித்தோம். அவருக்கு படப்பிடிப்பு இருந்தது. எனக்கு பயணங்கள் இருந்தது. அதனால் அப்போது முடியவில்லை. இப்போது நேரம் இருந்தது. அதனால் சந்தித்தோம். இது ஒரு அன்பின் நிமித்தமான சந்திப்பு. சிறப்பாக சொல்லும் அளவுக்கு இந்த சந்திப்பில் எதுவும் இல்லை. இங்கு தேர்தல் அரசியல் தான் நடக்கிறது. மக்கள் அரசியல் நடக்கவில்லை

சரியான ஆட்சி கொடுத்தால் தேர்தலுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதைத்தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்று சொன்னார். அதைத்தான் நான் அமைப்பு சரியில்லை என்று சொல்லி வருகிறேன். அரசியல் என்பது வாழ்வியல். அதன் மீது ரஜினிகாந்துக்கு ஆர்வம் உள்ளது. ஆனால் அவருக்கு அரசியல் சரிவராது என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்தை சங்கி என்று சொல்கிறார்கள். நீங்கள் பா.ஜ.க.வின் பி.டீம் என்று சொல்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது, விமர்சனத்தை தாங்கிக்கொள்ளாதவன் விரும்பியதை அடைய முடியாது. சங்கி என்றால் சக தோழன் நண்பன் என்று அர்த்தம். சங்பரிவாரில் இருந்து சங்கி சங்கி என்று சொல்கிறார்கள். எங்களை சங்கி என்று சொல்பவர்கள் தான் உண்மையான சங்கி.

காலையில் மகனும் மாலையில் அப்பாவும் திடீரென பிரதமரை சந்தித்துவிட்டு வருகிறார்கள். ஆனால் எதற்காக சந்திப்பு என்றால் அதற்கு பதில் இல்லை. நான் இப்போது ரஜினிகாந்தை சந்தித்து என்ன பேசினேன் என்பதை சொல்கிறேன். ஆனால் நீங்கள் ஏன் சொல்ல மாட்டேன்கிறீ்ங்க. பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்த சம்பந்திகள் மாதிரி போய் சந்தித்துவிட்டு வருகிறீர்கள். ஆனால் வெளியில் வந்து எங்களை சங்கி என்று சொல்கிறீர்கள்.

தி.மு.க.வை எதிர்த்தாலே சங்கி என்று சொன்னால் இது எப்படி இருக்கிறது? அப்போ பெருமையாக சங்கி என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளாத்தான் வேண்டும். சங்கி என்றால், நண்பன் என்று பொருள் அப்படியே எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Seeman Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment