பாயிண்டுக்கு பாயிண்ட் பேசுறாப்ல இதுவரை பாயிண்டுக்கு வரல; பார்த்து படிக்கும்போதே மண்ணரிப்பா, மீனரிப்பானு தெரியல: விஜய் மீது சீமான் தாக்கு

பள்ளிகளில் காலை உணவாக 5 நாட்களுகம் உப்மா போடுகிறார்கள். இதனால் தான் நான் அதை உப்மா கம்பெனி என்று சொன்னேன்.

பள்ளிகளில் காலை உணவாக 5 நாட்களுகம் உப்மா போடுகிறார்கள். இதனால் தான் நான் அதை உப்மா கம்பெனி என்று சொன்னேன்.

author-image
WebDesk
New Update
seeman

விஜய் வேடிக்கை காட்ட வரும் சிங்கம் - பரமக்குடியில் சீமான் பேட்டி

தமிழகத்தில் கட்சி தொடங்கியதில் இருந்து விஜய் குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது விஜய்க்கு குறித்து பேச்சுக்கு கூறியுள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகராக அறியப்பட்ட சீமான், நாம் தமிழர் கட்சி என்ற அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தனது கட்சியின் மூலம் தேர்தலை சந்தித்து வருகிறார். சமீபத்தில் நடந்த தேர்தலில், அதிகபட்ச வாக்குகளை பெற்று, தேர்தல் ஆணையத்தின் அங்கீகரத்தை பெற்ற நாம் தமிழர் கட்சி அடுத்து வரும் தமிழக சட்டசபை தேர்தலுக்காக தயாராகி வரும் நிலையில், சீமான் தனது மேடை பேச்சுகளில் மற்ற அரசியல் கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கிய விஜய், 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளார். இதற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், நாளை தனது 3-வது கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். விஜய் அரசியல் கட்சி தொடங்கியபோது அவருக்கு ஆதரவாக பேசிய சீமான், கடந்த சில மாதங்களாக விஜய் மற்றும் அவரது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தொண்டர்களை அணில்கள் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு த.வெ.க தொண்டர்களும் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக விஜய் தொடர்பான கேள்விகளுக்கு சீமான் வாழ்த்துவது போல் பதில் அளித்து வருகிறார். அந்த வகையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான், , பள்ளிகளில் காலை உணவாக 5 நாட்களுகம் உப்மா போடுகிறார்கள். இதனால் தான் நான் அதை உப்மா கம்பெனி என்று சொன்னேன்.

Advertisment
Advertisements

மாணவர்கள் வீட்டில் காலை உணவு சாப்பிட முடியாத அளவுக்கு அப்பா அம்மாவை வறுமையில் வைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் சோறு ரூ1000 காசு என பஞ்சப்படி போன்று கொடுக்கிறார்கள். பரப்புரை பரப்புரை என்று சொல்கிறார்கள். இதில் என்ன பரப்புரை இருக்கிறது? சொன்னார்களே செய்தார்களா? ஐயா ஸ்டாலின் துணை முதல்வராக இருந்து இப்போது முதல்வர் ஆகிவிட்டார்.அவருக்கு தரவுகள் எடுத்துக்கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள். 

அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து முதல்வர் ஆகிவிட்டார். அவருக்கும் கூடவே ஆட்கள் இருக்கிறார்கள். 4 -5 நிமிடங்கள் தான் நீங்கள் பேசுகிறீர்கள். அதை நினைவில் வைத்துக்கொண்டு பேச முடியாதா? பார்த்து படிப்பதையே மண்ணரிப்பா, மீனரிப்பா என்று தெரியவில்லை. அப்போது இவ்வளவு காலமாக மக்களுக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது என்பது கூட தெரியாமல் ஆட்சி செய்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.மானம்கெட்ட இந்த இனக்கூட்டத்தில் பிறந்ததற்கு நான் வெட்கப்படுகிறேன். 

ஆட்சி மாற்றத்திற்கு அல்ல, ஆட்சி முறையை மாற்றுவதற்காக வந்திருக்கிறேன். தி.மு.கவை விமர்சித்தால் ஆர்.எஸ்.எஸ். என்று சொன்னார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ். தி.மு.க. தான். தி.மு.கவில் 2 இட்லி, அதிமுகவில் 2 தோசை எடுத்து ஒன்றாக சேர்த்து உப்மா கிண்டியிருக்கிறார். இதில் என்ன மாற்றம் கொண்டு வந்துவிட போகிறார்.. இரண்டு சனியையும் சேர்த்து ஒரு சட்டை தைத்து சனிக்கிழமை கிளம்பிவிட்டார் இதுவரை அவர் ஒரு பாயிண்ட்டுக்கும் வரவில்லை என்று விஜய் குறித்து மீண்டும் விமர்சித்துள்ளார். 

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: