‘தி.மு.க அட்டூழியத்தைக் கண்டித்த திருமா…’ நன்றி தெரிவித்த சீமான்

Tamilnadu News Update : அட்டூழியத்தைக் கண்டித்து நியாயத்தின் பக்கம் நிற்கும் விசிக தலைவர், அண்ணன் முனைவர்  திருமாவளவன்  அவர்களுக்கு எனது அன்பும், நன்றியும்!

Tamilnadu NTK Seeman Thanks To VCK Thirumavalavan : நாம் தமிழர் பொதுக்கூட்ட மேடையில ஏறி தகராறில் ஈடுபட்ட திக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைபபாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முஸ்லீம் மற்றும் ராஜூகாந்தி கெலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய கோரி மத்திய மாநில அரசுக்கு எதிரான நாம் தமிழர் கட்சி சார்பில் தர்மபுரி மொரப்பூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் இளைஞர்கள் பலரும் திமுக மற்றும் பாஜகவை கடுமையான வார்த்தைகளால் விமர்சிததுள்ளனர்.

இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் சிலர் பொதுக்கூட்ட மேடையில் ஏறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திமுகவினரை அப்புறப்படுத்திவிட்டு அனைவரையும் சமானதானபபடுத்தினர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும்பரபப்பை ஏற்படுத்திய நிலையில், சின்ன பசங்க என்பதால் தாக்கியுளளனர் ஒருவேளை நான் நின்றிருந்தால் செருப்பை கழற்றி அடித்திருப்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அரசியல் கட்சிகள் மாறுபட்ட கருத்தை முன்மொழிந்தால் கருத்தை கருத்தாகத்தான் அணுக வேண்டும் அதை விடுத்து தகராறில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. தகராறில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். திருமாவளவனின் இந்த கருத்து திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இநநிலையில், திருமாவளவன் கருத்துக்கு நன்றி தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பதிவில்,  நாம் தமிழர் கட்சியின் மேடையில் அத்துமீறி ஏறி, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றிய திமுக வன்முறைக்கும்பலின் அட்டூழியத்தைக் கண்டித்து நியாயத்தின் பக்கம் நிற்கும் விசிக தலைவர், அண்ணன் முனைவர்  திருமாவளவன்  அவர்களுக்கு எனது அன்பும், நன்றியும்! என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால் திருமாவளவனின் கருத்து திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுகவினர் பலரும் சமூகவலைதளங்களில் திருமாவளவனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகினறனர். இதில் தொண்டர்களை சமாதானப்படுத்த திருமாவளவன் சொல்லாததை ஊடகங்கள் புனைவதாக திமுக ஐ.டி துறை கூறி வந்தாலும், சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் சென்னை போரூர் பெரியார் திடலில் நடைபெற்ற விருது வங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக்கொண்ட முதல்வவர் பேசுகையில் திருமாவளவன் பேச்சுக்கு கட்டுப்பட்டவன. இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை என்று கூறி திருமாவளவன் மீதான் திமுகவினரின்  கோபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu ntk seeman thanks to vck thirumavalavan for against dmk

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express