Advertisment

Tamil News : நீட் விலக்கு - இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Tamil Nadu Omicron Latest News 04 February 2022-தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை ஏலம் விடுவதை தடுக்கக் கோரி மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

Tamil Nadu News Today LIVE: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 92-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamilnadu News Update: சீனா பெய்ஜீங் நகரில் 24வது குளிர்கால ஒலிம்பிக் தொடர் இன்று தொடங்குகிறது. இதில்’ இந்தியா சார்பில் இருந்து ஆரிஃப் கான் என்ற ஒரே ஒரு போட்டியாளர் மட்டுமே பங்கேற்கிறார். மனித உரிமை மீறல் புகார் காரணமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் புறக்கணிப்பு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (பிப்.4) மாலையுடன் நிறைவடைகிறது. வரும் 7ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

Tamil Nadu News LIVE Updates

Corona Update: உலக நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்;

  • பிரேசில் – 2.86 லட்சம்
  • பிரான்ஸ் – 2.74 லட்சம்
  • ஜெர்மனி – 2.40 லட்சம்
  • அமெரிக்கா – 2.20 லட்சம்
  • இந்தியா – 1.47 லட்சம்
  • இத்தாலி – 1.12 லட்சம்

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:39 (IST) 04 Feb 2022
    மக்களவையில் ஐ.யூ.எம்.எல். உறுப்பினர் நவாஸ் கனி பேச்சு

    நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம், ஆளுநர் 8 கோடி தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளார் என மக்களவையில் ஐ.யூ.எம்.எல். உறுப்பினர் நவாஸ் கனி பேசியுள்ளார்.


  • 22:04 (IST) 04 Feb 2022
    அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது - அண்ணாமலை

    சென்னை, தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.


  • 22:03 (IST) 04 Feb 2022
    நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

    பிப்ரவரி 7 முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்றும், உணவகம், நூலகம் திறக்க அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


  • 22:01 (IST) 04 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : முதல்வர் ஸ்டாலின் பிரச்சார அறிவிப்பு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிப்.6 முதல்17ஆம் தேதி வரை காணொளி வாயிலாக பிரசாரம் மேற்கொள்கிறார்


  • 21:59 (IST) 04 Feb 2022
    நடிகர் விஜயின் வீட்டில புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்திப்பு

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜயின் வீட்டில புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நிகழ்ந்துள்ளது.


  • 21:06 (IST) 04 Feb 2022
    ரயில்வே துறையில் கடந்த 5 ஆண்டுகளில் பணி நியமன விபரம்

    ரயில்வே துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 1,89,790 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்


  • 21:04 (IST) 04 Feb 2022
    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு தேர்தல் பணி பார்வையாளர்கள் நியமனம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு தேர்தல் பணி பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


  • 21:03 (IST) 04 Feb 2022
    தேர்தல் அலுவலர்களுக்கான 2வது பயிற்சி அறிவிப்பு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2வது பயிற்சி வரும் 10ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


  • 20:02 (IST) 04 Feb 2022
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்

    மது அருந்தும் கூடங்களை மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது தமிழகத்தில் படிப்படியாக முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.


  • 20:00 (IST) 04 Feb 2022
    சென்னையில் மேலும் 1.475 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் மேலும் 9,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்றைய பாதிப்பு 11,993 ஆக இருந்த நிலையில் 9,916 ஆக குறைந்துள்ளது.

    சென்னையில் மேலும் 1.475 பேருக்கு கொரோனா தொற்று - 9 பேர் உயிரிழப்பு கோவையில் மேலும் 1,224 பேருக்கு கொரோனா தொற்று - 4 பேர் உயிரிழப்பு செங்கல்பட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா தொற்று - ஒருவர் உயிரிழப்பு


  • 20:00 (IST) 04 Feb 2022
    சென்னையில் மேலும் 1.475 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் மேலும் 9,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்றைய பாதிப்பு 11,993 ஆக இருந்த நிலையில் 9,916 ஆக குறைந்துள்ளது.

    சென்னையில் மேலும் 1.475 பேருக்கு கொரோனா தொற்று - 9 பேர் உயிரிழப்பு கோவையில் மேலும் 1,224 பேருக்கு கொரோனா தொற்று - 4 பேர் உயிரிழப்பு செங்கல்பட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா தொற்று - ஒருவர் உயிரிழப்பு


  • 19:57 (IST) 04 Feb 2022
    மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

    கொரோனா தடுப்பூசிகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பரப்பிய வதந்திகளைப் புறக்கணித்த மக்களுக்கு நன்றி என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


  • 19:09 (IST) 04 Feb 2022
    வி.கே.சசிகலா ஆளுநருக்கு வேண்டுகோள்

    நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது துரதிருஷ்டவசமானது. தமிழ்நாடு ஆளுநர், முடிவை மறுபரிசீலனை செய்ய வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்


  • 18:11 (IST) 04 Feb 2022
    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2026 அக்டோபரில் நிறைவடையும் - மத்திய அமைச்சர் தகவல்

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் 2026 அக்டோபரில் நிறைவடையும் என்று மக்களவையில் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தகவல் தெரிவித்துள்ளார்.


  • 18:08 (IST) 04 Feb 2022
    நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது துரதிருஷ்டவசமானது - வி.கே.சசிகலா

    நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது துரதிருஷ்டவசமானது என்றும் தமிழ்நடு ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  • 17:52 (IST) 04 Feb 2022
    விக்கிரவாண்டி பேரூராட்சியில் 7வது வார்டில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - விக்கிரவாண்டி பேரூராட்சியில் 7வது வார்டில் திமுக வேட்பாளர் ஆனந்தி தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வாகிறார்.


  • 17:29 (IST) 04 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு; நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். பிப்ரவரி 7ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி தேதி நாள்.


  • 17:00 (IST) 04 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நிறைவு

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விறுவிறுப்பாக நடைபெற்று பெற்ற இறுதிகட்ட வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.


  • 16:50 (IST) 04 Feb 2022
    கொடைக்கானலில் செல்ஃபி எடுக்க முயன்றபோது மாயமான இளைஞர் - தொடரும் தேடுதல் பணி

    மதுரையில் இருந்து 7 நபர்கள் கொண்ட இளைஞர் குழுவினர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது, வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட ரெட்ராக் பகுதியில் இளைஞர் ஒருவர் பாறையின் நுனி பகுதியில் செல்ஃபி எடுக்க முயன்ற போது பள்ளத்தாக்கு பகுதியில் தவறி விழுந்தார். அவரை தேடும் பணிகள் 3ஆவது நாளாக தொடர்கிறது.


  • 16:45 (IST) 04 Feb 2022
    சிதம்பரத்தில் திமுகவினர்-காவல் துறை இடையே வாக்குவாதம்

    சிதம்பரம் நகராட்சியில் விதிமுறைகளை மீறி ஏராளமான திமுக கூட்டணி கட்சியினர் ஒரே நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்ததால் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


  • 16:44 (IST) 04 Feb 2022
    சிதம்பரத்தில் திமுகவினர்-காவல் துறை இடையே வாக்குவாதம்

    சிதம்பரம் நகராட்சியில் விதிமுறைகளை மீறி ஏராளமான திமுக கூட்டணி கட்சியினர் ஒரே நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்ததால் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


  • 16:41 (IST) 04 Feb 2022
    ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு தேதி அறிவிப்பு

    ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் ஐஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 7ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்தல் முடிவுகளை http://cisce.org என்ற இணைய முகவரியில் அறிந்து கொள்ளலாம்.


  • 16:37 (IST) 04 Feb 2022
    கச்சத்தீவில் திருவிழா: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

    கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் கோவில் திருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.


  • 16:25 (IST) 04 Feb 2022
    நகைக் கடன் தள்ளுபடி: துணை பதிவாளர் தலைமையில் குழு

    நகைக்கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக தகுதி மற்றும் தகுதியற்ற நபர்களை அடையாளம் கண்டு பட்டியலை தயார் செய்ய துணை பதிவாளர் தலைமையில் குழுவை அமைக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குழு தயாரித்த பட்டியல் அடிப்படையில் பயனாளர்கள் விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும்.


  • 16:10 (IST) 04 Feb 2022
    உ.பி.யில் 1.70 கோடி போலி குடும்ப அட்டைகள்: மத்திய அரசு தகவல்

    இந்தியாவில் அதிக அளவில் போலி குடும்ப அட்டைகள் வைத்திருந்த மாநிலங்கள் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடம் - அந்த மாநிலத்தில் 1.70 கோடி போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்


  • 16:00 (IST) 04 Feb 2022
    மாணவி தற்கொலை வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை!

    அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணைக்கு பிப்ரவரி 16 வரை தடை விதித்தும், காவல்துறை பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 15:59 (IST) 04 Feb 2022
    ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் தடை - அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு!

    பிளாஸ்டிக் தடை கண்டிப்புடன் அமலில் உள்ளதா என ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்ய சோதனைச்சாவடிகளில் முன்னாள் ராணுவத்தினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது என திண்டுக்கல், கோவை மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.


  • 15:54 (IST) 04 Feb 2022
    ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் டெல்லி பயணம்!

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி விரைகிறார். ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி அவர் டெல்லி பயணம் செய்கிறார்.


  • 15:41 (IST) 04 Feb 2022
    நடிகர் சூரி அளித்த பணமோசடி வழக்கு: சிபிஐ-க்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

    நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மீது நடிகர் சூரி அளித்த பணமோசடி வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 15:32 (IST) 04 Feb 2022
    மின்சக்தி வேலி: கலந்து பேசி தீர்வு காண்க!

    ரயில்கள் மோதி யானைகள் பலியான சம்பவங்கள் தொடர்பான வழக்கில், "ரயில்வே தண்டவாளங்கள் அருகில் சூரிய மின்சக்தி வேலிகளை அமைப்பது குறித்து ரயில்வே துறையும், வனத்துறையும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும்." என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 15:22 (IST) 04 Feb 2022
    கொள்கை விவகாரத்தில் தலையிட முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்!

    கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் கால இடைவெளியை குறைக்க கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம், "பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை மருத்துவ நிபுணர்கள் நிர்ணயித்துள்ளனர். எனவே இந்த கொள்கை விவகாரத்தில் தலையிட முடியாது என குறிப்பிட்டுள்ளது.


  • 15:07 (IST) 04 Feb 2022
    வனக்குற்றங்கள் - சிறப்பு புலனாய்வு பிரிவு அமைப்பு!

    தமிழகத்தில் வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு பிரிவில் இடம்பெறக்கூடிய அதிகாரிகளின் பெயர்களை தெரிவிக்க இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 15:05 (IST) 04 Feb 2022
    சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நேற்றுவரை 1,434 பேர் வேட்புமனு தாக்கல்!

    சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்றுவரை 1,434 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


  • 15:02 (IST) 04 Feb 2022
    உ.பி. தேர்தல் தனித்துவமானது - பிரதமர் மோடி!

    "உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகள் கட்டுக்குள் வருவார்கள் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இங்கு பல தேர்தல்கள் நடந்திருந்தாலும், இந்தத் தேர்தல் தனித்துவமானது." என்று உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரை நிகழ்த்தியுள்ளார்.


  • 15:00 (IST) 04 Feb 2022
    தமிழசையை குடியரசுத் தலைவராக ஏற்க முடியாது!

    புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பணியாற்றி வரும் தமிழசை சௌந்தராஜன் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ஆதரிக்க முடியாது என டெல்லியில் விசிக எம்.பி. ரவிக்குமார் பேட்டி அளித்துள்ளார்.


  • 14:57 (IST) 04 Feb 2022
    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச பாகிஸ்தான் வீரருக்கு தடை!

    பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் தவறான முறையில் பந்துவீசியதாக கண்டறியப்பட்டுள்ளதால் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரித்துள்ளது


  • 14:54 (IST) 04 Feb 2022
    நாராயணசாமியின் வீட்டில் வெடிகுண்டு - புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு!

    புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் கடந்த 2014ஆம் ஆண்டு பைப் வெடிகுண்டு கண்டறியப்பட்டது. இந்த பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைதான 6 பேரும் குற்றவாளிகளே என புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இதன்படி தமிழர் படையைச் சேர்ந்த திருசெல்வம், தங்க ராசு, தமிழரசன், காளிலிங்கம், ஜான்மார்ட்டின், கார்த்திக் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என புதுச்சேரி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


  • 14:47 (IST) 04 Feb 2022
    மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது - துணைநிலை ஆளுநர் தமிழிசை!

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை ஆளுநர் ஆர்.என் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், "மாநில அரசின் மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. மக்களுக்கு நல்லது இல்லை என்றாலும், ஒரு மசோதாவை திருப்பி ஆளுநர் திருப்பி அனுப்பலாம். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக தமிழக ஆளுநர் நடந்தார் என்பது சரியாகாது." என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.


  • 14:37 (IST) 04 Feb 2022
    பப்ஜி மதன் விவகாரம் - உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம்!

    பப்ஜி மதன் தொடர்பான ஆடியோ விவகாரத்தில் உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பப்ஜி மதனுக்கு புழல் சிறையில் சகல வசதிகளை வழங்க ரூ. 3 லட்சம் லஞ்சம் கேட்ட பரபரப்பு ஆடியோ வெளியான நிலையில் சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.


  • 14:36 (IST) 04 Feb 2022
    நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு பாதிக்கப்படவில்லை - அண்ணாமலை!

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, "நீட் விவகாரத்தில் பாஜக மீது எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அதிமுக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை நிராகரித்தார் குடியரசு தலைவர். ஆளுநர் மசோதாவை நிராகரித்த காரணங்களை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை.

    மருத்துவ படிப்பில் தமிழ்நாட்டிற்கான சீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு பாதிக்கப்படவில்லை. எதன் அடிப்படையில் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என சொல்லப்படுகிறது?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.


  • 14:32 (IST) 04 Feb 2022
    கல்வி மாநில பட்டியல் - திமுக எம்.பி. கோரிக்கை! மாநிலங்களவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்த திமுக எம்.பி. வில்சன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்கிற கோரிக்கையை விடுத்துள்ளார்.

    மாநிலங்களவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்த திமுக எம்.பி. வில்சன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்கிற கோரிக்கையை விடுத்துள்ளார்.


  • 13:10 (IST) 04 Feb 2022
    கோரக்பூர் தொகுதியில் போட்டியிட யோகி ஆதித்யநாத் வேட்புமனு தாக்கல்

    உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட முதல்வர் யோகி ஆதித்யநாத் வேட்புமனு தாக்கல் செய்தார்.


  • 13:05 (IST) 04 Feb 2022
    மாநிலங்களவையில் இருந்து தமிழக எம்.பி.க்கள் வெளிநடப்பு

    தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திருப்பி அனுப்பிய நிலையில், இன்று மாநிலங்களவையிலும் தமிழக எம்பிக்கள் கண்டன முழக்கம் எழுப்பினர். “தமிழக எம்பிக்களின் கோரிக்கை குறித்து தற்போது விவாதிக்க அனுமதிக்க முடியாது என மாநிலங்களவை தலைவர் தெரிவித்த நிலையில் அவையில் இருந்து தமிழக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.


  • 12:56 (IST) 04 Feb 2022
    தமிழக ஆளுநரின் அறிக்கை உண்மைக்கு புறம்பாக உள்ளது

    நீட் தேர்வு கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிரானது என்பதை ஏ.கே. ராஜன் குழு அறிக்கை தெளிவாக விளக்கியுள்ளது. நீட் விலக்கு மசோதா தொடர்பான ஆளுநரின் அறிக்கை உண்மைக்கு புறம்பாக உள்ளது என்று நீட் ஆய்வுக் குழுவின் உறுப்பினர் ரவீந்திரநாத் பேட்டி அளித்து வருகிறார்.


  • 12:54 (IST) 04 Feb 2022
    குளிர்கால ஒலிம்பிக் - இந்திய புறக்கணிப்பை பாராட்டிய அமெரிக்க செனட் வெளியுறவுக்குழு

    சீனாவின் குளிர்கால ஒலிம்பிக்கில் ராஜதந்திர புறக்கணிப்பில் இணைந்த இந்தியாவை பாராட்டுகிறோம் என்றும், மனித உரிமை மீறல்களை நிராகரிக்கும் அனைத்து நாடுகளுடன் துணை நிற்கிறோம் என்றும் அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு ட்வீட் வெளியிட்டுள்ளது.


  • 12:29 (IST) 04 Feb 2022
    காலி செய்வதாக உத்தரவாதம் தந்தால் தான் மாற்று இடம்

    மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை காலி செய்வதாக உத்தரவாதம் தந்தால் மட்டுமே மாற்று இடம் வழங்கப்படும் என்றும் மாற்று இடம் வழங்குவது பற்றி அவர்களின் உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.


  • 12:13 (IST) 04 Feb 2022
    சென்னை, மாம்பலம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை அகற்றும் செலவை வசூலிக்க வேண்டும்

    சென்னை, மாம்பலம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை அகற்றும் செலவை ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்க வேண்டும் என்று தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 12:09 (IST) 04 Feb 2022
    காத்துவாக்குல இரண்டு காதல் - நியூ அப்டேட்

    காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 11 அன்று வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


  • 12:08 (IST) 04 Feb 2022
    தமிழக ஆளுநர் 4 எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் கட்சித் தலைவரா - முன்னாள் நீதிபதி சந்துரு விளாசல்

    தமிழக ஆளுநர் 234 உறுப்பினர்கள் கொண்ட அவையை அவமதிப்பவரா? 4 எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் கட்சித் தலைவரா என்று கேள்வி கேட்டு நீட் மசோதாவை திருப்பி அனுப்பியதற்காக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.


  • 11:32 (IST) 04 Feb 2022
    குடியரசு தலைவர் தேர்தல்: தமிழரை நிறுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்!

    ஜூலை மாதம் குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்துவதற்கு முன்முயற்சி எடுக்க வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார், முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


  • 11:24 (IST) 04 Feb 2022
    குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும்!

    தமிழ்நாட்டில் குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும். குரூப் 4 தேர்வு அடுத்த மார்ச் மாதம் அறிவிக்கப்படும். அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


  • 11:22 (IST) 04 Feb 2022
    பப்ஜி மதனுக்கு சிறையில் வசதிகளை செய்து கொடுக்க லஞ்சம்! ஆடியோ வெளியானது!

    யூடியூப் கேம் வீடியோவில் ஆபாசமாக பேசிய வழக்கில், கைதாகி சிறையில் இருக்கும், பப்ஜி மதனுக்கு சிறையில் வசதிகளை செய்து கொடுக்க, அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது. இதுகுறித்து சிறைத்துறை டிஜிபி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


  • 11:02 (IST) 04 Feb 2022
    நீட் விலக்கு.. மாநிலங்களவையில் திமுக எம்பி.க்கள் அமளி!

    நீட் விலக்கு மசோதா குறித்து, மாநிலங்களவையில் விவாதம் நடத்தக் கோரி திருச்சி சிவா கொடுத்த நோட்டீஸ்க்கு சபா நாயகர் வெங்கய்யா நாயுடு அனுமதி மறுத்த நிலையில், அமளியில் ஈடுபட்ட, திமுக எம்பி.க்கள்' நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


  • 11:02 (IST) 04 Feb 2022
    நீட் விலக்கு.. மாநிலங்களவையில் திமுக எம்பி.க்கள் அமளி!

    நீட் விலக்கு மசோதா குறித்து, மாநிலங்களவையில் விவாதம் நடத்தக் கோரி திருச்சி சிவா கொடுத்த நோட்டீஸ்க்கு சபா நாயகர் வெங்கய்யா நாயுடு அனுமதி மறுத்த நிலையில், அமளியில் ஈடுபட்ட, திமுக எம்பி.க்கள்

    நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.


  • 10:58 (IST) 04 Feb 2022
    முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு!

    மார்ச் 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு’ 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக’ மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


  • 10:57 (IST) 04 Feb 2022
    கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக மாறிவிட்டது- திருச்சி சிவா!

    நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பிறகு கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக மாறிவிட்டது. ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்த திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார்.


  • 10:55 (IST) 04 Feb 2022
    முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு!

    மார்ச் 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு’ 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக’ மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


  • 10:24 (IST) 04 Feb 2022
    நீட் விலக்கு.. மாநிலங்களவையில் திமுக எம்பி.க்கள் அமளி!

    நீட் விலக்கு மசோதா குறித்து, மாநிலங்களவையில் விவாதம் நடத்தக் கோரி திருச்சி சிவா கொடுத்த நோட்டீஸ்க்கு சபா நாயகர் வெங்கய்யா நாயுடு அனுமதி மறுத்த நிலையில், அமளியில் ஈடுபட்ட, திமுக எம்பி.க்கள்' நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


  • 10:20 (IST) 04 Feb 2022
    நீட் தேர்வு: இட ஒதுக்கீடு சதவீதத்தை 10%ஆக உயர்த்துவது பலன் தராது- மா. சுப்பிரமணியன்!

    ஆளுநர் நீட் தேர்வு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது தமிழக மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. நாளை நடைபெற உள்ள உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவரை சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்படும். நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சதவீதத்தை 10%ஆக உயர்த்துவது முழுமையான பயனைத் தராது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.


  • 10:16 (IST) 04 Feb 2022
    டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட’ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்கில் பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை. பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


  • 09:39 (IST) 04 Feb 2022
    இந்தியாவில் மேலும் 1,49,394 பேருக்கு கொரோனா பாதிப்பு!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்’ மேலும் 1,49,394 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு 1,072 பேர் உயிரிழந்தனர். அதேநேரம், 2,46,674 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.


  • 09:37 (IST) 04 Feb 2022
    கடலூரில்’ தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு!

    கடலூர் மாவட்டம் வடலூரில்’ 3.20 ஏக்கரில்’ தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


  • 09:37 (IST) 04 Feb 2022
    இந்தியாவில் மேலும் 1,49,394 பேருக்கு கொரோனா பாதிப்பு!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்’ மேலும் 1,49,394 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு 1,072 பேர் உயிரிழந்தனர். அதேநேரம், 2,46,674 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.


  • 09:10 (IST) 04 Feb 2022
    டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட’ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்கில் பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை. பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


  • 09:10 (IST) 04 Feb 2022
    3 ஆண்டுகளில் சுங்கச் சாவடிகள் மூலம் ரூ. 81 ஆயிரம் கோடி வருவாய்!

    மத்திய அரசுக்கு கடந்த 3 ஆண்டுகளில் சுங்கச் சாவடிகள் மூலம் ரூ. 81 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மக்களவையில் தெரிவித்தார்.


  • 08:38 (IST) 04 Feb 2022
    டிக்கெட் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி.. இண்டிகோ விமான நிறுவனம்!

    கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டிக்கெட் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக பிரபல இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.


  • 08:26 (IST) 04 Feb 2022
    வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு!

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (பிப்.4) மாலையுடன் நிறைவடைகிறது. வரும் 7ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.


  • 08:26 (IST) 04 Feb 2022
    நீட் மசோதா விவகாரம்.. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்!

    நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய, ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு அமைப்புகளும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. இதனால், ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


  • 08:25 (IST) 04 Feb 2022
    சென்னை16 வார்டுகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

    சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் 16 வார்டுகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 08:24 (IST) 04 Feb 2022
    உத்தரகாண்ட் தேர்தல்: பிரதமர் மோடி பிரச்சாரம் ரத்து!

    உத்தரகாண்ட் மாநிலம் சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று நடைபெறவிருந்த பிரதமர் மோடியின் காணொலி வாயிலான பிரச்சாரம், மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


  • 08:23 (IST) 04 Feb 2022
    புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இன்று மீண்டும் திறப்பு!

    புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 6 நாட்களும் முழுமையாக வகுப்புகள் நடைபெற உள்ளது. பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment