பி.ரஹ்மான் கோவை
ஆன்லைன் ரம்மிக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் மேஜிக் மேன். செய்தியாளர் சந்திப்பில் மேஜிக் ஷோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பல்வேறு தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. அதேபோல இளைஞர்கள் பலவிதமான போதை பொருட்களுக்கு அடிமை ஆகியும் தங்கள் நலனை கெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை சேர்ந்த மேஜிக் மேன் தயாநிதி ஆன்லைன் ரம்மிக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் வரும் 23″ஆம் தேதி முதல் 25″ஆம் தேதி வரை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் விழிப்புணர்வு மேஜிக் ஷோ நடத்துகிறார். இந்த நிகழ்வுக்கு பொதுமக்களை வரவழைக்கும் வகையில் இன்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஆன்லைன் ரம்மி மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடத்தப்பட உள்ள இந்த மேஜிக் ஷோ குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அங்கேயே டெமோ மேஜிக் ஷோ ஒன்று நடத்தி காட்டினார். அந்த ஷோ மூலம் கண்ணுக்கு தெரியாத ஆன்லைன் ரம்மி என்ற டிஜிட்டல் விளையாட்டின் ஆபத்தை வெளிப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி கூறுகையில்,
என்டர்டைன்மென்ட் மூலமாக நடைபெற உள்ள நிகழ்வில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளேன். மேலும் ஆன்லைன் ரம்மியில் ஏற்கனவே செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராமுடன் விளையாடுகிறீர்கள். நான் மேஜிக் செய்த போது கண்களுக்கு முன்பாகவே நொடிப்பொழுதில் மாற்றி காண்பித்த போது கண்களுக்கு தெரியாத இடத்தில் டிஜிட்டலில் ஏமாற்ற முடியும்.
இது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்த டிஜிட்டல் ட்ரிக்ஸ்களை பயன்படுத்தி மேஜிக் ஷோ நடத்துகிறேன். ஆன்லைன் ரம்மியில் எவ்வளவு லாபமாக பணம் கிடைத்தாலும் நம்பாதீர்கள் தற்கொலை வரை கொண்டு செல்லும். நான் மெர்சல் படத்தில் விஜய்க்கு மேஜிக் ட்ரைனிங் கொடுத்தேன். அதேபோல பைரவா படத்திலும் செய்துள்ளேன் என மேஜிக் மேன் தயாநிதி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“