சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிமுடிந்துவிட்டதற்கு யாராலும் புத்துயிர் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததில் இருந்து அதிமுகவில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் நான் தான் என்று சசிகலாவும். அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே இல்லை என்று ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் கூறி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனி்டையே அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சசிகலாவை சந்திப்பது அடுத்த நிமிடம் அவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக இபிஎஸ் ஒபிஎஸ் கூட்டறிக்கை விடுவதும் தொடர்ந்து வருகிறது. இது இது ஒருபுறம் இருக்க ஜெயலலிதாக மரண வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜரான ஒபிஎஸ் வழக்கத்திற்கு மாறாக சசிகலா குறித்து புகழ்ந்து பேசினார். இதனால் சசிகலா விரைவில், அதிமுகவில் இணைவார் என்று பேசப்பட்டது.
இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும், தலைமை கழகமும் இதற்கு தீர்மானமே நிறைவேற்றியுள்ளது. நானும் அண்ணன் ஒபிஎஸ் அவரும் இணைந்து இதை நிறைவேற்றியுள்ளோம்.
இது தொடர்பாக அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளது. தீர்மானம் நிறைவேற்றபட்டதற்கு யாராலும் புத்துயிர் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றது குறித்து பேசியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, நான் வெளிநாடு சென்றபோது அனைவரும் பயணித்த ணரு விமானத்தில் தான் பயணித்தேன். ஆனால் முதல்வர் ஸ்டானின் தனி விமானம் எடுத்து அதில் தனது குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். அவர் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க செல்லவில்லை குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்றுள்ளார் என்றும். இவர்கள் தங்களது தொழில் வர்த்தகத்தை பெருக்குவதற்காகவே துபாய் சென்றுள்ளதாக மக்கள் கூறி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil