Tamilnadu Srirangam Temple Issue : ஸ்ரீரங்கம் கோவிலில் பிரதமர் மோடியின் உரையை ஒளிபரப்பு செய்தாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து எதிர்கட்சிகள் பலரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரதமர் மோடி கடந்த 5-ந்தேதி கேதர்நாத் கோவில், ஆதிசங்கரர் சிலை மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசிய உரை தமிழகத்தின் பிரபலமான கோவில்களில் ஒன்றாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், எல்.இ.டி ஸ்கிரீன் வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது கட்சி நிர்வாகிகளுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்துள்ளார்.
தமிழக பாஜக தலைவரின் இந்த செயல் குறித்து ஸ்ரீரங்கத்தை சேர்த்த வைணவ செயல்பாட்டாளர் நரசிம்மன் ரங்கராஜன் என்பவர் புகார் அளித்ததுள்ளார். மேலும் இந்த புகாரின் காரணமாக தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக எதிர்கட்சியினர் பலரும் தங்கள விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
In Srirangam Temple, Trichy with our @BJP4TamilNadu members when our Hon PM Shri @narendramodi ji is in Kedarnath temple to unveil the statute of Pooja Adi Shankaracharya in his Samadhi.
— K.Annamalai (@annamalai_k) November 5, 2021
Adi Shankaracharya visited Srirangam around 9th century & gave us Sri Ranganathar Astagam! pic.twitter.com/orcHj7UHVB
இது தொடர்பாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி, கோவில் மண்டபம் அல்லது வளாகத்திற்குள் இப்படி குறிப்பிட்ட கட்சியினர் பயன்படுத்த அனுமதி உண்டா?இதற்கு அனுமதி அளித்தது யார், என்று பல கேள்விகளை எழுப்பியதை தொடர்ந்து கோவில்கள் ஆர்.எஸ்.எஸ் பரப்புரை தளங்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. இது குறித்து கவனிப்பது முக்கியம் என்று கூறியுள்ளார்.
மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பானர் சீமான், எச்.ஆர் மற்றும் சி.இ இயங்கும் கோவில்கள் சம்பந்தப்பட்ட துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை என்பதை அறிய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “அது நடந்தவுடன் காங்கிரஸ் எதிர்த்தது. .தை பயன்படுத்தி அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
எதிர்கட்சிகள் பலரும் தங்களது எதிர்ப்பை பலமாக பதிவிட்டுள்ள நிலையில், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அமைச்சர் பி.கே.சேகர் பாபு இந்த விவகாரம் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil