Advertisment

கோவை பஸ் ஸ்டாண்ட் இட மாற்றம் பின்னணியில் ரியல் எஸ்டேட் பிசினஸ்: இ.பி.எஸ் புகார்

இந்த அரசாங்கம் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருக்கிறது. அதனை நாங்கள் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறோம்

author-image
WebDesk
New Update
கோவை பஸ் ஸ்டாண்ட் இட மாற்றம் பின்னணியில் ரியல் எஸ்டேட் பிசினஸ்: இ.பி.எஸ் புகார்

கோவை மாவட்ட அதிமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயனின் இல்ல விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார். இதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு அவரது தொண்டர்கள் சுமார் 1000"க்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்,

Advertisment

அம்மாவின் ஆட்சி இருக்கும் பொழுது கோவை மாவட்டத்திற்கு மாநகராட்சிக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றியுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதும் ரத்து செய்வதுமாக உள்ளது. கோவை மாநகராட்சியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சுமார் 150 கோடி மதிப்பில் 500க்கும் மேற்பட்ட பணிகளை ரத்து செய்துள்ளது.

திமுக ஆட்சியில் 133பணிகளுக்காக 18 சதவிகிதம் கமிஷன் கேட்டதால் எந்த ஒப்பந்ததாரரும் பணியை எடுப்பதற்கு முன்வரவில்லை. வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பொருத்தவரை 50 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனையும் இந்த அரசு கைவிட இருக்கிறது. தமிழக முதல்வருக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் எல் அண்ட் டி சாலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதால் வெள்ளலூர் பேருந்து நிலையத்தை அங்கு மாற்றினால் அங்குள்ள நிலங்கள் அனைத்தும் அதிக விலை போகும் என்பதால் தான் பேருந்து நிலையத்தை மாற்றுவதற்கு காரணம்.

இதனால் மக்களுடைய வரி பணம் வீணடிக்கப்படுகிறது. வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்ற முற்பட்டால் மாநகராட்சியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். மெட்ரோ ரயில் திட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என பல திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளனர். அத்திக்கடவு அவிநாசி திட்டம் நான்கு மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் இந்த அரசின் மெத்தன போக்கினால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.

மேலும் எந்த திட்டத்தையும் இவர்கள் முழுமையாக நிறைவேற்றவில்லை. மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேற்கு புறவழிச் சாலைக்காக நிலம் எடுக்கும் பணிகள் அதிமுக ஆட்சியில் வேகமாக செயல்பட்டு வந்தது. ஆனால் ஆட்சி மாற்றம் வந்தவுடன் அதுவும் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

மேலும் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கும் போதுமான நிதி ஒதுக்காத காரணத்தினால் அதுவும் முடங்கி இருக்கிறது. ஆனைமலை நல்லாறு திட்டமும் கேரளா அரசு உடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படாத அரசாங்கமாக இந்த அரசாங்கம் உள்ளது. மின்கட்டண உயர்வு கைவிடப்பட வேண்டும்.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்கும் பொழுது கூறிய பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் முதியோர் ஓய்வூதிய உயர்வு இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் திட்டம், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளது. திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் குழு அமைக்கப்படுகிறது. அப்படி இதுவரை 38 குழுக்கள் அமைத்து சரித்திரத்தை படைத்துள்ளனர்.

ஒருவேளை இந்த 38 குழுக்களையும் கண்காணிப்பதற்கும் ஒரு குழு அமைக்கப்படலாம். தற்பொழுது சட்ட ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. எங்க பார்த்தாலும் போதைப் பொருள் தாராளமாக கிடைக்கிறது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ரத்து செய்யாமல் உள்ள நிலையில், சூதாட்டத்திற்கு கருத்து கேட்பு கூட்டம் நடக்கும் அரசாக இந்த அரசு உள்ளது.  இதற்கான தக்க பாடத்தை அடுத்த தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள்

இந்த அரசாங்கம் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருக்கிறது. அதனை நாங்கள் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறோம் என்று கூறிய அவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி திமுகவில் இணைந்தது குறித்து கேட்ட கேள்விக்கு, அவரை நம்பி அதிமுக கட்சி இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பித்தான் அதிமுக செயல்பட்டுக் காண்டிருக்கிறது. டிடிவி தினகரன் அமலாக்கத்துறையில் இருந்து முதலில் அவரை காப்பாற்றட்டும்

மேலும் தொண்டர் சாதாரண மக்கள் உட்பட அனைவரும் என்னை வந்து சந்திக்கலாம் என தெரிவித்த அவர் ஸ்டாலின் யாரை சந்திக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ள அவர்,  ஆறுகுட்டி அதிமுகவில் இருந்தார் தற்பொழுது ஆளும் கட்சியாக திமுக இருந்து வருவதால் வேடந்தாங்கல் பறவை போல் அவர் தாவி உள்ளார் என தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Eps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment