Petrol-Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 18வது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ₨110.85க்கும், டீசல் ₨100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil Nadu News Updates: சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.
India update: புதுச்சேரியில் பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
பிரெஞ்சு குடியுரிமை பெற்ற 4,500க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவுள்ளனர்.
Sports news update: ஆசிய சாம்பியன்ஷிப்பில் 3 தங்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் இந்திய வீரர் ரவி தஹியா.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு வேகமாக வந்த ரயில், கடுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி விபத்துகுள்ளானது. இந்த சம்பவத்தின்போது பதிவான சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியீடு….#trainaccident#beachstation@SouTJ @irctc @RailwaySeva @trainaccident @RailMinIndia pic.twitter.com/BMXegqL07t
— Surendhar (@Surendhar_Twitz) April 24, 2022
நாகையில் கஞ்சா கடத்தல் கும்பலோடு காவலர் சீருடையில் பிரியாணி சாப்பிட்ட ஆய்வாளர் பெரியசாமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், “மதம், சமயம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பத்துக்குரியவை. தமிழினத்தை சாதி, மதங்களால் பிரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். தமிழினத்தை பிரிக்கும் சதிகளை தெரிந்து கொண்டு விழிப்பாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில் விபத்து குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது: அதில் “சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளான புறநகர் ரயிலில் இருந்து ஓட்டுநர் கீழே குதித்து தப்பினார். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் 1வது நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளான ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. விபத்துக்குள்ளான ரயில் மோதியதில் 1வது நடைமேடை சேதமுற்றாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. புறநகர் மின்சார ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகளின் உயர்நிலை குழு ஆய்வு செய்து விசாரணை நடைபெறும். விபத்துக்குள்ளான ரயிலின் சேதமுற்ற 2 பெட்டிகள் தவிர இதர பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
சென்னை, திருவான்மியூரில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
சென்னை, கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த ரயில் நடைமேடையில் உள்ள கடைகளில் மோதி விபத்துக்குள்ளானது
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்லி விழுந்த உணவை சாப்பிட்டவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், ஒவ்வொரு மாணவரும் 10ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக படிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
கோவை சூலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே விழுந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் லாரியின் ஓட்டுநர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
புதுச்சேரி, கம்பன் கலையரங்கில் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், புதுச்சேரி காவல்துறையில் தேர்வு செய்யப்பட்டோருக்கு பணிநியமன ஆணையையும் அமித் ஷா வழங்கினார்
பஞ்சாயத்து ராஜ் தினமான இன்று ஜம்மு காஷ்மீரில், பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது ஜம்மு மற்றும் காஷ்மீரில் மத்திய அரசின் திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, ஜம்முவில் இருந்து நாடு முழுவதும் கிராம சபைகளில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ஜம்மு & காஷ்மீரில் வளர்ச்சியின் புதிய கதை எழுதப்பட்டு வருகிறது. பல தனியார் முதலீட்டாளர்கள் ஜம்மு காஷ்மீருக்கு வர ஆர்வமாக உள்ளனர்” என்றார்.
யூனியன் பிரதேசத்திற்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி, அங்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உயர்மட்ட வணிகத் தலைவர்களுடன் செல்கிறார், பிஜேபி அரசாங்கம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 க்கு பிந்தைய புதிய கட்டத்தை உருவாக்க முற்படுகையில், ஒரு முன்னணி இஸ்லாமிய பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆதரவை கோடிட்டுக் காட்டுகிறார்.
விவசாயிகளின் ஒப்புதல் பெறாமல் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என விவசாயிகள், சேலத்தில் நடைபெற்ற விவசாயிகள் சங்க கூட்டு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
அதிமுக சார்பில் வரும் 27ம் தேதி இஃப்தார் விருந்து அறிவிப்பு. சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஈபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு. தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் ரூ20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. 500 கிலோ வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டம் தொடக்கம். டெல்லி – அமிர்தசரஸ் – கத்ரா விரைவுசாலைத் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
தென் மாவட்டங்களில் குற்றச் செயல்கள் கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளது. கடந்த ஆண்டைவிட 80 கொலைகள் குறைவாக நடந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிறுத்தப்பட்ட மினி பேருந்துகள் இயக்கம் படிப்படியாக அதிகரிக்கப்படும். அரசு பேருந்துகளுக்கு இன்சூரன்ஸ் செய்வது தொடர்பாக துறைரீதியான ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பேருந்து விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்க அரசு நிதி ஒதுக்கிவருகிறது என அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையால் கடைக்கோடி மக்களும் பலனடைந்துள்ளனர். தினசரி ரூ20 ஆயிரம் கோடிக்கு டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை நடைபெறுவதாக பிரதமர் மோடி பெருமிதம்.
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று. இதுவரை 2,015 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 60 பேருக்கு பாதிப்பு உறுதி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லியில் ஏப்ரல் 28, 29 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி தலைமையில் முதல்வர்கள், தலைமை நீதிபதிகள் மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் நீதித்துறை தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்
அரசியலில் உறவும் தேவையில்லை. எதிரியும் தேவையில்லை. நல்லது நடக்கும்போது பாராட்டுவதும், நடக்காதபோது விமர்சிப்பதும் எங்கள் நோக்கம் என கிராம சபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேச்சு
நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல்
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காட்டில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பஙேகற்பு. ஊராட்சிகளின் செயல்பாடு, வளர்ச்சிப் பணிகள், ஊரகப் பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை செய்யவுள்ளார்.
நெல்லையில் தாக்கப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் நேரில் நலம் விசாரித்தார் டிஜிபி சைலேந்திரபாபு.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீடு முன்பாக ரத்தக் கறையுடன் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டும், மலர் வளையம் வைத்தும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
நடிகர் மனோபாலா மற்றும் நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம்.
ஜம்மு காஷ்மீரின் லாலியன் கிராமத்தில் விவசாய நிலத்தில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.