சென்னையில் பிரபல உணவகத்தில் உணவு பாதுகாப்புதறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், சாம்பாரில் பிளாஸ்டிக் பேப்பரும், ப்ரீசரில் 10 கிலோ கெட்டுப்போன இறைச்சியும் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த உணவகத்திற்கு சீல் வைத்து உத்தரவிட்டனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், தி.நகரில் உள்ள பிரபலமான செட்டிநாடு உணவகத்தில் விதி மீறல் இருப்பதாகவும், உணவில் விஷம் கலந்ததாக 6 பேர் புகார் அளித்ததை அடுத்து, உள்ளூர் போலீஸார் உதவியுடன், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (FSSAI) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது உணவகத்தில் இருந்த சாம்பார் பாத்திரத்தில் பிளாஸ்டிக் கவர் கிடந்துள்ளது.
மேலும் ப்ரீசரில் கெட்போன இறைச்சி 10 கிலோ இருந்த நிலையில், அந்த ப்ரீசரை சுற்றி கரப்பான் பூச்சி உள்ளிட்ட பல பூச்சிகள் சுற்றிக்கொண்டிருந்தன. மேலும் உணவு இருக்கும் இடத்தில் அதிகமாக ஈக்கள் இருந்தது. இதனால் உணவகத்தின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்வகளுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகரிகள் உணவகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை (FSSAI) அதிகாரிகள் கூறுகையில், மதியம் 1.30 மணியளவில் இந்த உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்ட 6 பேருக்கு கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக நகர காவல்துறையினரிடம் இருந்து எங்களுக்கு தகவல் வந்த்து. இது குறித்து போலீசார் அளித்த தகவலின் பேரில் டாக்டர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மாலையில் உணவகத்தில் ஆய்வு செய்தனர்.
இது குறித்து இந்தியன் எக்பிரஸிடம் (Indianexpress.com) பேசிய அதிகாரி, ஒருவர், ஒரு குளிர்சாதன பெட்டியில் 10 கிலோ கெட்டுப்போன இறைச்சி இருந்த்தாகவும், சமையலறை பகுதி முழுவதும் ஈக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் இருந்த்தாகவும் கூறியுள்ளார். மேலும் நாங்கள் இந்த உணவகத்தின் மூலப்பொருட்களின் மாதிரிகளை எடுத்துள்ளோம். இதை ஆய்வு செய்து அதன் முடிவுகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்குவோம். மோசமான சுகாதாரத் தரம் குறித்து உணவகத்தின் உரிமையாளரிடம் எழுப்பட்ட கேள்விக்கு பதில் இல்லைஇதனால் உணவகத்திற்கு சீல் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
During the inspection, officials discovered a plastic cover inside a sambar vessel and also 10 kg of stale meat inside a freezer box. The authorities have cancelled the restaurant's license, and a stop-sale notice has also been issued. (2/2) #Chennai #Foodsafety pic.twitter.com/MAj1AMCDix
— Janardhan Koushik (@koushiktweets) July 31, 2023
மேலும் இந்த உணவகத்தில் உள்ள மூலப்பொருட்கள் அழிக்கப்பட வேண்டும். நிர்வாகம் இப்பகுதியை முழுமையாக சீரமைக்க வேண்டும். நிர்வாகம் அனைத்து ஆதாரங்களையும் அளித்து, உணவு பாதுகாப்புத்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி அந்தப் பகுதி இயக்குவதாகக் கூறி ஆவணங்களைச் சமரபித்தால் உணவகத்தை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த உணவகத்தை நாங்கள் கண்காணித்து வருகிறேன்,” என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.