ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல்துறை உதவியுடன் பெண் ஒருவருக்கு ரயில் நிலையத்தில் குழந்தை பிறந்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று (திங்கள்கிழமை) மதியம் 29 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரின் உதவியுடன் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,
29-வயதான நிறைமாத கர்ப்பிணி சாந்தினி என்ற பெண் மங்களூரில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பத்தூரில் ஏறி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த பயணத்தின்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடனடியாக பயண டிக்கெட் பரிசோதகரிடம் (டிடிஇ) தகவல் தெரிவித்தனர். அவர் அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தபோது ரயில் அரண்கோணம் ரயில்வே ஸ்டேஷன் வந்தவுடன் அதிகாரிகள் அந்த பெண்ணை பயணிகள் காத்திருப்பு அறைக்கு அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து மருத்துவருக்கு தகவல் தெரிவித்த நிலையில், மருத்துவர் வருவதற்குள், பெண் தலைமைக் காவலர் பரமேஸ்வரியின் உதவியுடன் சாந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அந்த பெண் மதியம் 2.20 மணியளவில் ரயில் நிலையம் வந்து சேர்ந்த நிலையில் 10 நிமிடங்களில் குழந்தை பிறந்தது என்று எஸ் விஜயலட்சுமி, இன்ஸ்பெக்டர், ரயில்வே போலீஸ் (அரக்கோணம்), இந்தியன் எக்ஸ்பிரஸிடம் (indianexpress.com) தெரிவித்துள்ளார். இதில் “எல்லாப் புகழும் எங்கள் தலைமைக் காவலர் பரமேஸ்வரிக்கு தான்.
அதனைத் தொடர்ந்து பிரசவித்த பெண் (சாந்தினி) பெரம்பூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார். அரக்கோணம் ஸ்டேஷனில், வலியை அனுபவித்த அவர், விரைவில் பயணிகள் காத்திருக்கும் அறைக்கு அழைத்து வரப்பட்டார். ரயில்வே மருத்துவரிடம் தெரிவித்தோம், ஆம்புலன்ஸ் தயார் செய்யப்பட்டது. ஆனால் ஆவருக்கு அதிக வலி இருந்ததால் எங்கள் கான்ஸ்டபிள், பிளாட்பார்ம் பணியில் இருந்தவர், பயணிகள் அறையில் குழந்தையை பிரசவிக்க உதவினார். அதற்குள் டாக்டர் வந்து மற்ற நடைமுறைகளை மேற்கொண்டார். இது அவளுக்கு இரண்டாவது குழந்தை. தாய் மற்றும் சேய் இருவரும் நலமாக உள்ளனர்” என்று இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“