TN HSC 12th result 2018 தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு 2018 முடிவுகள் : வெற்றி சதவிகிதம் புள்ளி விவரம்

TN HSC 12th result 2018 Live தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு 2018 முடிவுகள் இன்று வெளியாகின்றன. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில்...

TN HSC 12th result 2018 Live Update: தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு 2018 முடிவுகள் இன்று வெளியாகின்றன. 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தங்கள் எதிர்பார்ப்புகளை வைத்திருக்கும் தேர்வு இது.

TN HSC 12th result 2018 Live Update:   தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு 2018 முடிவுகள் மே 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பாகவே தேர்வு தேதிகள், முடிவுகள் வெளியாகும் தேதிகள் ஆகியவற்றை கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பட்டியலாக வெளியிட்டார். அதன் அடிப்படையில் இன்று (மே16) காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

TN HSC 12th result 2018 Live Update: தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு 2018 முடிவுகள் LIVE UPDATES இங்கே காணலாம்.

பிற்பகல் 2.00 : பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறுகையில், ‘வடமாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைவது குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும்’ என்றார்.

பகல் 1.30 : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே முத்துசெல்வி என்ற மாணவி +2 தேர்வில் தோல்வியடைந்ததால் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பகல் 1.15 : விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே நல்லாப்பூர் கிராமத்தில் பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவி இளமதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கிறார்.

தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக கவுன்சலிங் ஹெல்ப் லைன் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்த பிறகும் தற்கொலை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பகல் 12.30 : கோவையில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் பிரியா என்ற மாணவி, 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பகல் 11.30 : தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், ‘மாணவப் பருவத்தின் முதற்கட்டத்தை முடித்து +2 பொதுத் தேர்வினை எழுதி வெற்றி பெற்று, கல்வியில் அடுத்த கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கும் எனது அன்புக்குரிய மாணவ, மாணவிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.’ என குறிப்பிட்டார்.

பகல் 11.00 : பாஜக தமிழ்நாடு தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விடுத்த ட்விட்டர் செய்தியில், ‘வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். தோற்றவர்கள் கவலைப்பட வேண்டாம். இதைவிட சிறந்த வாய்ப்புகள் உங்களுக்கு காத்திருக்கின்றன. தோல்விகளே எதிர்கால வெற்றிக்கு படிக்கட்டுகள்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

காலை 10.45 : மோடிவேஷன் மீம்ஸ்..

காலை 10.30 : பிளஸ் 2 தேர்வு முடிவுகளையொட்டி சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் தூள் கிளப்புகின்றன. அவற்றில் ஒன்று…

காலை 10.15 : திமுக எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட நம்பிக்கை மெசேஜ்..

காலை 10.15 : மொத்தம் 71,368 மாணவ, மாணவிகள் 1001 முதல் 1100 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 1,07,266 மாணவ, மாணவிகள் 901-1000 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 1,65,425 மாணவ,மாணவிகள் 701 முதல் 800 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 700 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்று 8,60,434 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காலை 10.05:
பாட வாரியாக தேர்ச்சி விகிதம் : இயற்பியல்- 96.4%, வேதியியல்- 95.0%, கணிதம்- 96.1%, உயிரியியல்- 96.34, விலங்கியல்- 91.9%, தாவரவியல்- 93.9%, வணிகவியல்- 90.30%, கணக்குபதிவியல்- 91%, கணினி அறிவியல்- 96.1%

காலை 10.00 : +2 தேர்வு மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

காலை 9.50 : பிளஸ் 2 மறு தேர்வு ஜூன் 25-ம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

காலை 9.45 : +2 மாணவர்களின் மதிப்பெண்களை கொண்டு விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்

காலை 9. 40: பிளஸ் 2 பொதுத்தேர்வில் 238 அரசுப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி

காலை 9.35:  பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 1,907

காலை 9.30: பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற  மாணவிகள்  – 94.1%,

                                                                                                     மாணவர்கள் 87.7%

காலை 9.15 : தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 91.1 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

காலை 8.15 : தேர்வில் தோல்வி அடைகிறவர்கள் மனம் உடைந்து தற்கொலை செய்யும் நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன. அவற்றை தவிர்க்கும் வித இந்த முறை சில நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்திருக்கிறது.

முதல் முறையாக மாநில, மாவட்ட அளவில் ‘ரேங்க்’ அறிவிப்பதை அரசு தடை செய்திருக்கிறது. தோல்வி அடைகிறவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க 11417 என்கிற எண்ணில் ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்வில் தோல்வி அடைந்தாலும் ஜூன் மாதம் மீண்டும் தேர்வு எழுதி, அதே பழைய மாணவர்களுடன் கல்வியை தொடரும் வாய்ப்பு இருப்பதாக செங்கோட்டையன் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டார்.

காலை 8.00 : அமைச்சர் செங்கோட்டையன் தனது மற்றொரு ட்விட்டர் பதிவில், ‘இன்று +2 தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி இருக்கும் 8,98,763 மாணவ,மாணவியருக்கு பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக வாழ்த்துக்கள். தேர்வு முடிவுகளை  //tnresults.nic.in,  //dge1.tn.nic.in ஆகிய தளங்களில் அறியலாம்.’ என கூறியிருக்கிறார். வீடியோ பதிவு மூலமாகவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

காலை 7.45 : தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்த செல்போனுக்கு 2 வினாடிகளில் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பிவிடுவோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். இதன் மூலமாக மாணவ, மாணவிகள் அவரவர் தேர்வு முடிவை வீட்டில் இருந்தபடியே பார்த்துக் கொள்ளலாம்.

காலை 7.40 : அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காலை 7.30 : தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 1–ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர்.

அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. இன்று (புதன் கிழமை) பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.

 

×Close
×Close