வெளிநாடு சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டிருந்த நிலையில், சென்னையில் மிதிவண்டி பாதை எங்கே என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக தொழில்முனைவோர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் சிக்காகோ சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு நாளும் புதிதாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு வருகிறார். முதல்ல ஓட்டுனர் இல்லாத தானியங்கி காரில் பயணித்தது தொடர்பான வீடியோ பதிவை வெளியிட்டிருந்த அவர் இன்று, மிதிவண்டி ஓட்டுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், சென்னையில் நாம் எப்போது சைக்கிள் ஓட்டுவோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேட்டிருந்தார். ஓய்வு நேரத்தில் சென்னைக்கு வாருங்கள் என்றுஞ உடனடியாக முதல்வர் ஸ்டாலினும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
சிக்காகோவில் முதல்வர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சென்னையில் மிதிவண்டி பாதைகள் எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினா, சென்னையில் மாநில அரசுத் திட்டங்களின்படியும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மிதிவண்டி பாதைகளையும் காணவில்லை; வாடகைக்கு விடுவதற்கான ஸ்மார்ட் மிதிவண்டிகளையும் காணவில்லை. அவை எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்? என்று முதல்வரை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது அதிக கவனம் ஈர்த்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“