scorecardresearch

திடீரென சரிந்து விழுந்த மேடை.. தாவி குதித்த அன்புமணி… சேலத்தில் பரபரப்பு

விழாவில் பங்கேற்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Anbumani
அன்புமணி ராமதாஸ்

சேலம் மாவட்டத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்ற பாமாக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசும்போது திடீரென மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பாமக கட்சிக் கொடி ஏற்று விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகளை சந்தித்த அன்புமணி ராமதாஸ்,மேடையில் ஏறி பேச சென்ற போது கட்சி தொண்டர்களும் அவருடன் மேடைக்கு சென்றுள்ளனர்

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மேடை சரிந்து விழுந்தது. இதனால் மேடையில் இருந்த அனைவரும் கீழே விழுந்தனர். எனினும் கீழே விழுந்தவர்கள் அனைவருக்கும் எந்த காயமும் இன்றி தப்பினர். அதிர்ஷ்டவசமாக அன்புமணி ராமதாஸ் காயங்கள் ஏதுமின்றி தப்பினார். .இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பாராம் தாங்காமல் மேடை சரிந்துவிழுந்து விட்டதாகவும், சற்று சுதாரித்தக்கொண்ட தலைவர் அன்புமணி மேடையில் இருந்து தாவி குதித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu pmk head anbumani ramadoss in selam function update