/indian-express-tamil/media/media_files/2025/04/17/JuB1y59ZHLo4dRcvuG0a.jpg)
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வரை 29 மாவட்ட செயலாளர் 9 மாவட்ட தலைவர்களை மாற்றி உள்ளார். இதனால் புதிய நிர்வாகிகள் டாக்டர் ராம்தாசை பார்ப்பதற்காக தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்
பாட்டாளி மக்கள் கட்சியில் சரியாக பணி செய்யாத மாவட்டத் தலைவர்களையும் மாவட்ட செயலாளர்களின் மாற்றுவேன் என சித்திரை நிலவு மாநாட்டில் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். அதே போன்று பாட்டாளி மக்கள் கட்சியில் சரியாக செயல்படாத மாவட்டத் தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் என தினந்தோறும் மாற்றிக் கொண்டிருக்கிறார். அதன்படி இன்று வரை 29 மாவட்ட செயலாளர்களையும் ஒன்பது மாவட்டத் தலைவர்களையும் மாற்றி உள்ளார் .
இன்று நெல்லை தெற்கு மாவட்ட தலைவராக முத்துராமலிங்கத்தை நியமிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் மகாராஜன் ஆகியோர்களை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆக செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இன்னும் பத்து மாவட்ட செயலாளர்கள் இன்று இரவுக்குள் மாற்றப்படுவார்கள் என தெரிகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியச் சங்க நிர்வாகிகள் நீக்கம் புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு நீடித்து வருகிறது. அடுத்ததாக கூட்டுகின்ற பொதுக்குழுவின் போது தான் வெற்றி பெறுவருடன் தனது தனிய பெரும்பான்மை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கையில் ராமதாஸ் தீவரம் காட்டி வருகிறார்.
அதிலும் குறிப்பாக அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களை குறி வைத்து அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் நேற்று உச்சகட்ட ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து புதிய மாவட்ட செயலாளர்கள் இதுவரை காலியாக இருந்த மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு வெளியாகி வருகிறது. இதனால் புதிய நிர்வாகிகள் டாக்டர் ராம்தாசை பார்ப்பதற்காக தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்
இன்று நெல்லை தெற்கு மாவட்ட தலைவராக முத்துராமலிங்கத்தை நியமிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் மகாராஜன் ஆகியோர்களை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆக செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இன்னும் பத்து மாவட்ட செயலாளர்கள் இன்று இரவுக்குள் மாற்றப்படுவார்கள் என தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.