கூட்டணி தர்மத்தை மீறியதால் பாமக தோல்வி – டாக்டர் ராமதாஸ் பேச்சு

Tamilnadu News Update : “நாம் 23 இடங்களிலும் அல்லது 20 இடங்களிலோ அல்லது குறைந்தபட்சம் 15 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

Tamilnadu News Update : கூட்டணி கட்சிகள் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்காததால், பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்ததாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 2 முறை ஆட்சியில் இருந்த அதிமுக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக 5 மற்றும் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்று (டிச.12) செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி (பிஎம்கே) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட்டணிக் கட்சிகள் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை, இதனால்தான் பாமக தோல்வியை சந்தித்தது. “நாம் 23 இடங்களிலும் அல்லது 20 இடங்களிலோ அல்லது குறைந்தபட்சம் 15 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் கூட்டணிக் கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறியதால் பாமக 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது,”

வன்னியர் சமூகத்தில் உள்ள இரண்டு கோடி மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் சிலரின் ஆலோசனையை பின்பற்றி கூட்டணி அமைத்தது, தற்போது அரசியல் கூட்டணி என்பது முதுகில் குத்துவது என்று பொருள்படும். பா.ம.க.வினர் தங்கள் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தாலும், மற்ற கூட்டணி கட்சியினர் பாமக வெற்றிக்காக உழைக்கவில்லை என்று அவர் சுட்டிகாட்டினார்.

மேலும் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக வெற்றிபெற கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் மற்ற கட்சிகளிடம் சீட் கேட்கும் நிலைக்கு தள்ளப்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது. கட்சி தொண்டர்கள் இதைக் கண்டு கோபப்பட்டு பாமகவை மாநிலத்தில் ஆளும் கட்சியாகவும், அன்புமணி ராமதாஸை முதல்வராகவும் மாற்ற பாடுபட வேண்டும். மற்ற கட்சிகளில் உள்ள வன்னியர்களும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்  அரசு வேலை மற்றும் கல்வியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (எம்பிசி) 20 சதவீத இடஒதுக்கீட்டிற்குள், முறையாக வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

ஆனால் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி, இடஒதுக்கீடு குறித்த மாநில அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த  மாதம் ரத்து செய்தது. இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், வன்னியர் சமூகத்தினர் வேலை வாய்ப்பு மற்றும் சேர்க்கையில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அனுபவிப்பார்கள் என்றும், மீதமுள்ள இட ஒதுக்கீட்டை மற்ற சாதியினர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu pmk ramadoss say about allies in tamilnadui assembly election

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com