போதை மாத்திரை போதை ஊசி விற்பனை செய்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை இன்று கடலூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து 2500 போதை மாத்திரை கைப்பற்றப்பட்டுள்ளன
இதுகுறித்து கடலூர் எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், என்னுடைய தலைமையில் உள்ள தனிப்படை எஸ்.ஐ தவச்செல்வன் தலைமையிலான போலீசார் கடந்த 31.01.2025 அன்று போதை பொருள் குற்ற தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, கடலூர் திருப்பாதிரிபுலியூர் பேருந்து நிலையம் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் 3 நபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்களிடம் மாத்திரைகள் மற்றும் சிரஞ்சி இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை செய்தனர் அப்போது அவர்கள் போதைக்காக ஈரோடு நபர் மூலம் மாத்திரைகளை வாங்கி சிரஞ்சி மூலம் உடலில் ஏற்றி பேதையில் இருந்து வருவதாக கூறியுள்ளனர். அவர்களின் பைகளை சோதனை செய்த போது அதில், 139 போதை மாத்திரைகள் மற்றும் 3 சிரஞ்சிகளை கைப்பற்றினோம் இதனையடுத்து அவர்களின் மீது கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு குற்ற எண்:45/2025 U/S 8(c) r/w 20(b) (1) (A) NARCOTIC DURGS & PSYCHOTROPIC SUBSTANCES ACT and 123 BNS - ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் சபரிநாதன், 20, த/பெ முருகவேல், ராமமுதலியார் தெரு, புதுவண்டிபாளையம், கடலூர், லட்சுமிபதி, 20 த/பெ கோதண்டராமன், ராமமுதலியார் தெரு. புதுவண்டிபாளையம், கடலூர், சதீஷ், 20 த/பெ தட்சணாமூர்த்தி, திருவந்திபுரம் ரோடு, புதுவண்டிபாளையம், கடலூர் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா மேற்பார்வையில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் பாலாஜி, உதவி ஆய்வாளர் தவச்செல்வன் தலைமையிலான தனிப்படையினர் ஈரோடு சென்று விசாரணை நடத்தினர்.
இதில், போதை மாத்திரைகள் ஈரோடு, கருங்கல்பாளையம் KL ஸ்டோர்
உரிமையாளர் மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் கண்ணன், 39 த/பெ சின்னையன் No. 4, தாஸ் நாயக்கன் பாளையம், கவுண்டச்சி பாளையம் P.O, ஈரோடு, சல்மான்கான் வயது 29, த/பெ. இஸ்மாயில் செரிப் No.10/2 கிருஷ்ணமூர்த்தி தோட்டம், கருங்கப்பாளையம் ஈரோடு, வினோத்குமார், 30, த/பெ. சீனிவாசன், No. 149. குன்னத்தூர் ரோடு, பெருந்துறை ஈரோடு, கலைவாணி, 42, க/பெ. வரதராஜன், No.4/21. சின்னமாரியம்மன் கோவில் தெரு கருங்கல்பாளையம் ஈரோடு ஆகியோர்களை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் 2500, ரூபாய் 50,000, லேப்டாப்-1, செல்போன் 3, ஹீரோ மோட்டார் சைக்கிள் 1, தின்னர் பாட்டில்கள் 2 கைப்பற்றப்பட்டது அவரிடம் விசாரணை செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.