தமிழகத்தில் வடமாநில தொழிலார்கள் தாக்கப்படுவதாக அவதூறு பரப்பியதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இந்தியில் பேசிய சிலரை தூக்கிலிட்டதாக கூறி வீடியோ பதிவுகளளும் வைரலாகி வந்தது. இந்த விவாகரம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில, தமிழகத்தில் அப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்று தமிழக அரசும் காவல்துறையும் விளக்கம் அளித்திருந்தது.
ஆனாலும் இந்த விவாகரம் தொடர்பான பீகார் அதிகாரிகள் தமிழகத்தில் விசாரணை மேற்கொண்ட நிலையில், வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்பிய சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும் தாங்கள் தமிழகத்தில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனாலும் இந்த விவகாரம் தற்போதுவரை பரபரப்பின் உச்சமாக உள்ளது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பிரஷாந்த் கிஷோர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இந்தி பேசும் வடமாநில தொழிலாளர்கள் மீது வெளிப்படையாக வன்முறை தூண்டப்படுகிறது. இப்படிப்பட்ட வன்முறையை தூண்டும் சீமான் போன்றவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பதிவிட்டிருந்தார்.
பிரஷாந்த் கிஷோரின் இந்த பதிவு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“