Advertisment

காஞ்சிபுரம் அருகே என்கவுண்டர் : கொலை வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

தேமுதிக நிர்வாகியான சரவணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபாகரன், நேற்று ஜாமீனில் வெளியான நிலையில், பட்ட பகலில், ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Hyderabad rape and murder, telangana police encounter

காஞ்சிபுரம் அருகே என்கவுண்டர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகள் காஞ்சிபுரம் அருகே போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

காஞ்சிபுரம் அருகே பல்லர்மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். அந்த பகுதியில் பிரபல ரவுடியான இவர் மீது, கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது. மேலும் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட தேமுதிக நிர்வாகியான சரவணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபாகரன், நேற்று ஜாமீனில் வெளியான நிலையில், பட்ட பகலில், ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்த, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த பணியின் ஒரு பகுதியாக போலீசார் காஞ்சிபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கே வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது. காரில் இருந்த நபர்கள் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். இதனால் போலீசார் தங்களை காத்துக்கொள்ளும் வகையில், வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நிலையில், காரில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். காரில் இருந்த இருவருமே பிரபாகரன் கொலை செய்ததாக கூறப்படும் தேமுதிக நிர்வாகியான சரவணனின் சகோதரர் என்று விசாரனயில் தெரியவந்துள்ளது.

இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவருடன் பயணித்த பாட்ஷா என்பவரும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். இவர்கள் வீசிய வெடிகுண்டு காரணமாக காயமடைந்த போலீசார், காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kanchipuram Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment