scorecardresearch

ஐசரி கணேஷ் மீதும் வழக்குப் பதிவு: விஜயபாஸ்கர் மீதான புகார் என்ன?

குட்கா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விஜயபாஸ்கர், தற்போது இந்த மருத்துவக்கல்லூரி விவகாரம் அதிமுக வட்டாராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஐசரி கணேஷ் மீதும் வழக்குப் பதிவு: விஜயபாஸ்கர் மீதான புகார் என்ன?

வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விதிமுறைக்கு மாறாக சான்றிதழ் அளித்துள்ளதாக ஐசரி கணேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முன்னாள் மருத்துவத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருக்கு சொந்தமாக சென்னை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வேலன் நகரில் செயல்பட்டு வரும் வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றுவதற்காக விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்கடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே குட்கா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விஜயபாஸ்கர், தற்போது இந்த மருத்துவக்கல்லூரி விவகாரம் அதிமுக வட்டாராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu police filed case against former minister vijayabaskar and isari ganesan

Best of Express