Advertisment

959 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்; காவல்துறை அதிரடி

959 கஞ்சா வியாபாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்; காவல்துறை அதிரடி நடவடிக்கை

author-image
WebDesk
New Update
959 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்; காவல்துறை அதிரடி

Tamilnadu Police freeze 912 Ganja sellers bank accounts: தமிழகத்தில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையாக கஞ்சா வியாபாரிகள் மற்றும் வியாபாரத்தில் சம்பந்தப்பட்ட அவர்களின் உறவினர்களின் வங்கிகளை தமிழக காவல்துறை முடக்கியுள்ளது.

Advertisment

கஞ்சா கடத்தல், பதுக்கல், விற்பனை போன்றவற்றை தடுக்க சிறப்பு தனிப்படை அமைத்து தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் கஞ்சா கடத்தல், விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை புதிய வழிமுறைகளை கையில் எடுத்துள்ளது. கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது மட்டுமின்றி, அவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருகிறது. மேலும் கஞ்சா வியாபாரத்தில் சேர்க்கப்பட்ட அவர்களது உறவினர்களின் சொத்துக்களையும் காவல்துறை முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 494 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் 959 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 182 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: வரலாற்றில் முதல்முறை… திருச்சி மாநகராட்சி ஆபீஸில் மக்கள் குறை கேட்ட முதல்வர்!

இதில் மதுரையில் 114 வழக்குகளில் 191 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் முதற்கட்டமாக 110 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுடன் தொடர்புடைய நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இதுவரை 81 வழக்குகளில் கைது செய்யப்பட்ட 92 பேரின் 99 வங்கிக் கணக்குகள், கஞ்சா விற்பனைக்கு உதவியாக இருந்த அவர்களது உறவினர்கள் 47 பேரின் வங்கிக் கணக்குகள் என மொத்தம் 146 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் 76 கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 119 வங்கி கணக்குகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 114 வழக்குகளும் தொடர்புடைய 191 வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இனிவரும் காலங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களின் வங்கிக் கணக்குகளும், அவர்களுக்கு உதவி செய்யும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும் என தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment