போலீஸ் ஆர்டர்லி விவகாரம் : விசாரணை ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அவகாசம்

போலீஸ் ஆர்டர்லி குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பதற்கு தமிழக அரசுக்கு கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tamilnadu Police, Orderly System, Inquiry Comission
Tamilnadu Police, Orderly System, Inquiry Comission

போலீஸ் ஆர்டர்லி குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பதற்கு தமிழக அரசுக்கு கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலீஸ் துறையில் ஆர்டர்லி முக்கிய விவகாரமாக உருவெடுத்திருக்கிறது. இது உள்ளிட்ட காவலர்களின் குறைகளை தீர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மனநல மருத்துத்துவர்கள், பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் காவலர்கள் தற்கொலை அதிகரித்து வருவதால் 2012 ஆம் ஆண்டின் உத்தரவை நடைமுறை படுத்த கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது காவல்துறை உதவி ஐஜி மகேஸ்வரன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டாது. அதில், ‘தமிழகத்தில் ஆர்டர்லி என்ற முறையே இல்லை. அது முற்றிலுமாக ஒழிக்கபட்டு விட்டது. ஏற்கனவே இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை உறுதியுடன் பின்பற்றபட்டு வருகின்றோம். இருப்பினும் ஆன் – டூட்டி அடிப்படையில் உயர் அதிகாரிகள் வீடுகளில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தபடுவதாகவும் அவர்கள் பணியை தவிர மற்ற வேலைகளில் ஈடுபடுத்துவது இல்லை.

ஆர்டர்லியாக யாரும் பணியமர்த்தபடுவதில்லை.கடந்த 10 ஆண்டுகளில் காவல்துறையில் இருந்து 8158 பேர் ராஜினாமா செய்துள்ளனர். முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக 520 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் காவல்துறையில் 296 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சாலைவிபத்து, நோய்வாய்ப்பட்ட நிலையில் மரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளில் 3032 காவலர்கள் மரணம் அடைந்துள்ளனர்’ என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த அறிக்கை ஏற்க மறுத்த நீதிபதி அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் நீதிபதி கிருபாகரன், முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உதவி ஐஜி மகேஸ்வரன் நேரில் ஆஜராகியிருந்தார். நீதிபதி காவல் துறையினர் பிரச்சனைகளை தீர்க்க நிபுணர் குழு அமைக்க ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டும் இன்னும் ஏன் அமைக்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் குழு அமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை அரசு எடுத்து வருவதாகவும் மேலும் கூடுதல் கால அவகாசம் தேவை என வாதிட்டார்.

அப்போது நீதிபதி, போராட்டங்கள் நடத்த நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுவிட்டு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடப்பதாக கண்டனம் தெரிவித்தார். மேலும், காவல்துறையினர் தாக்கினால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள், குற்றவாளிகள் மூலம் காவலர்கள் தாக்கப்படும் போது குரல் கொடுக்காது ஏன் என கேள்வி எழுப்பினார். மனித உரிமை என்பது அனைவருக்கும் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தமிழக காவல் துறையில் தற்போது 18 ஆயிரம் காவலர்கள் பணியிடம் காலியாக இருக்கும் நிலையில் தற்போது கூட 10 ஆயிரம் காவலர்கள் ஆர்டர்லியாக பணியில் இருப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும், ஓய்வு பெற்ற காவல் உயர் அதிகாரிகள் எத்தனை பேர் ஆர்டர்லி பயன்படுத்துகின்றனர் என கேள்வி எழுப்பிய நீதிபதி, அவ்வாறு இருப்பவர்களை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்.

கேரளாவில் உள்ளது போல காவல்துறையினருக்கு, பணி நேரம் நியமிப்பது ஏற்படுத்துவதை பரிசீலிக்க வேண்டும் என்றார். ஆணையம் அமைக்கும் விசயத்தில் தொடர்ந்து அரசு காலம் தாழ்த்தி வந்தால் உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.

இதன்பிறகு உத்தரவிட்ட நீதிபதி தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எவ்வளவு காவலர்கள் பணியில் உள்ளார்கள் என்பது தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். காவலர்களின் பிரச்சனையை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பது குறித்து பதில் அளிக்க 5 வாரம் கால அவகாசம் அளிப்பதாக உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 13 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu police orderly system inquiry comission

Next Story
மருத்துவ படிப்பு சேர்க்கை: தமிழக மாணவர்களுக்கு மாநில அரசு அநீதி – உயர்நீதிமன்றம் வேதனை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com