காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.,
நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஐஜி லலிதா லட்சுமி, கமெண்ட்ண்ட் ராஜசேகரன், துணை காவல் ஆய்வாளர் ராயப்பன் ஆகிய 3 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மெச்சத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தையோட்டி, வீர, தீர செயல்கள் உள்ளிட்டவற்றுக்காக சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் , தீயணைப்பு உள்ளிட்ட படைகளை சேர்த்து மொத்தம் 1, 132 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“