தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாடத்திற்கான விதிமுறைகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டை வரவேற்க உலகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. புத்தாண்டை பலரும் பலவிதமாக கொண்டாடி மகிழ்வர். இந்தநிலையில் புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாட தமிழக காவல்துறை அறிவுரைகளை வழங்கியுள்ளது.
இதையும் படியுங்கள்: ரபேல் வாட்ச் சர்ச்சை இல்லை.. காங்கிரஸில் கமல்ஹாசன்.. கார்த்தி சிதம்பரம்
பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் கொண்டாடுவது சிறந்தது.
பாதுகாப்பு பணியில் 90000 காவலர்கள் மற்றும் 10000 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுவர். எனவே நள்ளிரவில் மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடத்திற்கு அனுமதி இல்லை.
கடற்கரைகளில் பொதுமக்கள் கடலில் இறங்கி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது.
மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது. மீறினால் கைது செய்யப்படுவீர். வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வழிபாட்டு தலங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேளிக்கை விடுதிகளில் காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கடைபிடிக்க வேண்டும்.
பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு காவல்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil