scorecardresearch

இது போன்ற தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை: சவுக்கு சங்கர் பகிர்வுக்கு தமிழக போலீஸ் எச்சரிக்கை

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் உள்துறை செயலாளர், விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் மீது ஆளுநரிடம் புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது போன்ற தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை: சவுக்கு சங்கர் பகிர்வுக்கு தமிழக போலீஸ் எச்சரிக்கை

இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். என சவுக்கு சங்கர் ட்விட்டர் பதிவுக்கு தமிழ்நாடு போலீஸ் தனது ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரபல அரசியல் விமர்சகரும் பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர் அவ்வப்போது அரசின் நடவடிக்கைகளை தனது ட்விட்டர் பதிவிலும், யூடியூப் சேனல்களில் அளிக்கும் பேட்டியிலும் கடுமையான விமர்சித்து வருகிறார். அதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் உள்துறை செயலாளர், விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் மீது ஆளுநரிடம் புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே இன்று சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது போன்ற தவறான பதிவுகளை வெளியிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தனது ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சவுக்கு சங்கர் தனது பதிவில்,

ஜல்லிக்கட்டு, கம்பாலா போன்ற அனைத்து விலங்கு விளையாட்டுகளுக்கும் தடை விதித்து ஏடிஜிபி எல்&ஓ சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்தச் சுற்றறிக்கையில் அனுமதி கோரிய அனைத்தும் நிராகரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ரேஞ்ச் டி.ஐ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்களுடன் கலந்துரையாடி, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏடிஜிபி எல்&ஓவின் இந்த உத்தரவு மார்ச் இறுதி வரை அமலில் இருக்கும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஓசூரில் நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

காவல்துறை எச்சரிக்கை பதில்

சவுக்கு சங்கரின் ட்விட்டர் பதிவை சேர்ந்து காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில், இது முற்றிலும் தவறான தகவல். அத்தகைய சுற்றறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவல்துறைக்கு சவுக்கு சங்கரின் பதில்

காவல்துறையின் எச்சரிக்கைக்கு பதில் அளித்துள்ள சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பதிவில்,  இப்படி ஒரு சுற்றறிக்கை இருப்பதை அரை டசனுக்கும் மேற்பட்ட டிஐஜிக்கள் எனக்கு உறுதிப்படுத்துகிறார்கள். எச்.ஒ.பி.எஃப் (HoPF) மற்றும் அவரது ஏ.டி.ஜி. எல்&ஓ (ADG L&O) இடையே ஏன் தெளிவின்மை உள்ளது? ஆதரவைக் காட்டுவதில் தெளிவும் அக்கறையும் இந்த பிரச்சினையில் காணவில்லை என்று ரெட் ஜெயண்ட் மற்றும் தமிழக முதல்வரை டேக் செய்துள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu police warning to savuku shankar twitter post