புகார் மனு தொடர்பான தகவலுக்காக வந்த அரசியல் கட்சியினர் தன்னை தாக்கிவிட்டதாக பொய் புகார் கூறிய பெண் காவல் உதவி ஆய்வாளர் பணியிடடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிகழ்வு சிவங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: பெண் எஸ்.ஐ மீது தாக்குதல்: உண்மையில் நடந்து என்ன? சிவகங்கை போலீஸ் விளக்கம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் (Sub Inspector) பணிபுரிந்து வருபவர் பிரணிதா. கடந்த 5-ம் தேதி இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, புகார் மனு தொடர்பான தகவலுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி உட்பட சிலர் அங்கு வந்தனர்.
அப்போது அவர்களுக்கும், பிரணிதாவுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தன்னை அவர்கள் தாக்கியதாக பிரணிதா புகார் கூறினார். இதையடுத்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், பிரணிதா கூறிய குற்றச்சாட்டுகள் தவறானது என்று சிவகங்கை மாவட்ட காவல்துறை விளக்கமளித்தது. காவல் நிலையத்திலிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்தியதில், பிரணிதா கூறியது பொய் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்: பெண் எஸ்.ஐ மீது தாக்குதல்: உண்மையில் நடந்து என்ன? சிவகங்கை போலீஸ் விளக்கம்
இந்நிலையில், சப் இன்ஸ்பெக்டர் பிரணிதாவை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமார் உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: சக்தி சரவணன் - சிவகங்கை.