Advertisment

Tamilnadu political events today live : ஜூன் 1ஆம் தேதி காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம்

political events today : பதவியேற்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu political events today live :  ஜூன் 1ஆம் தேதி காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம்

Admk mlas Swearing  Ceremony : தமிழகத்தில் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக 13 இடங்களையும், அதிமுக 9 இடங்களையும் கைப்பற்றின. அதிமுக 9 இடங்களில் வெற்றிபெற்றதன் மூலம் சட்டபேரவையில் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்தது. இந்நிலையில், அதிமுக உறுப்பினர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் இன்று பதவிப்பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்.

Advertisment

இன்றைய வானிலை மையம் குறித்த செய்தியை படிக்க.

Live Blog

political events today live :9 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பதவி ஏற்கின்றனர்.



























Highlights

    20:55 (IST)29 May 2019

    ஜூன் 1ஆம் தேதி காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம்

    ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது 

    ராஜினாமா முடிவில் காங். தலைவர் ராகுல் காந்தி உறுதியாக உள்ள நிலையில் கூட்டம் நடக்க உள்ளது

    20:19 (IST)29 May 2019

    அருண் ஜெட்லியை சந்திக்கிறார் பிரதமர் மோடி

    அருண் ஜெட்லியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார் பிரதமர் மோடி

    மத்திய அமைச்சரவையில் தமக்கு இடம் தர வேண்டாம் என அருண்ஜெட்லி தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் மோடி நேரில் சந்திக்கிறார்.

    19:52 (IST)29 May 2019

    ஆந்திர எதிர்க்கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்வு

    ஆந்திர சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தே்ர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆந்திராவின் புதிய முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி 30ம் தேதி பதவியேற்க உள்ளார்.

    19:21 (IST)29 May 2019

    காங்கிரஸ் பேரணியில் தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

    ராகுல் காந்தி பதவி விலகக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அவர் பதவி விலகக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் சென்னை தேனாம்பேட்டையில் பேரணியில் ஈடுபட்டனர். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உட்பட மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    19:07 (IST)29 May 2019

    முதல்வர் பழனிச்சாமியுடன் வைத்திலிங்கம் சந்திப்பு

    சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அதிமுக எம்பி வைத்திலிங்கம் சந்திப்பு

    மத்திய அமைச்சரவையில் வைத்திலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படும் நிலையில் முதல்வருடன் சந்திப்பு

    18:44 (IST)29 May 2019

    மோடி பதவியேற்பு விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்பு

    டில்லியில் நாளை (30ம் தேதி)  நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி , ராகுல் காந்தி மற்றும் குலாம்நபி ஆசாத் பங்கேற்க உள்ளனர்.

    17:56 (IST)29 May 2019

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலி : சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானதாக, சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவிப்பு 

    நாங்குநேரி தொகுதி காலியானதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. 

    நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்த நிலையில் சட்டப்பேரவை செயலர் அறிவிப்பு

    16:55 (IST)29 May 2019

    தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

    16:07 (IST)29 May 2019

    கே.எஸ்.அழகிரியுடன் தி.மு.க எம்.பிக்கள் சந்திப்பு

    தமிழக காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியுடன் தி.மு.க எம்.பிக்கள் சந்திப்பு

    14:10 (IST)29 May 2019

    ராஜினாமாவை ஏற்றார் சபாநாயகர்!

    நாங்குநேரி தொகுதி காங். எம்எல் எச்.வசந்தகுமாரின் ராஜினாமாவை ஏற்றார் சபாநாயகர் . கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வென்றதை அடுத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார். 

    12:20 (IST)29 May 2019

    முக்கிய ஆலோசனை கூட்டம்!

    தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் , அரசு அதிகாரிகளுடன்  முக்கிய ஆலோசனை கூட்டம் நடைப்பெற்று வருகிறது. 

    11:59 (IST)29 May 2019

    சபாநாயகர் தனபாலிடன் ராஜினாமா கடிதம்!

    தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர்  தனபாலிடம் வசந்தகுமார் வழங்கினார். 

    11:57 (IST)29 May 2019

    ராஜினாமா செய்தார் வசந்தகுமார்!

    கன்னியாகுமரி தொகுதியில்  மக்களவை உறுப்பினராக  வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து வசந்தகுமார் இன்று தனது சட்டமன்ற உறுப்ப்பினர் பதவியை  வசந்தகுமார் இன்று ராஜினமா செய்தார். 

    11:30 (IST)29 May 2019

    ஒரே பெண் எம்.எல்.ஏ!

    இன்று இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவில் ஒரே பெண் எம்.எல்.ஏவாக நிலக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்ற ஜி. தேன்மொழி பதவியேற்றுக் கொண்டார். 

    10:47 (IST)29 May 2019

    அதிமுக பலம்!

    சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் உட்பட அதிமுக உறுப்பினர்கள் பலம் 114 ஆக இருந்தது. இந்நிலையில் இப்போது 123 எம்.எல்.ஏக்கள் அதிமுக வசம உள்ளன. 

    10:38 (IST)29 May 2019

    அரூர், மானாமதுரை எம்எல்ஏக்கள்!

    அரூர் எம்எல்ஏவாக வி சம்பத் குமார், மானாமதுரை எம்எல்ஏவாக நாகராஜன் பதவியேற்றுக் கொண்டனர்.

    10:36 (IST)29 May 2019

    விளாத்திகுளம் சின்னப்பன்!

    விளாத்திகுளம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னப்பன் எம். எல்.ஏவாக பதவியேற்றார்.

    10:35 (IST)29 May 2019

    நிலக்கோட்டை மற்றும் பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏக்கள்!

    நிலக்கோட்டை எம்எல்ஏவாக ஜி. தேன்மொழி, பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏவாக கோவிந்தசாமி பதவியேற்றுக் கொண்டனர்.

    10:32 (IST)29 May 2019

    சோளிங்கர், சூலூர் ஏம்.எல்.ஏக்கள்!

    சோளிங்கர் எம்எல்ஏவாக ஜி. சம்பத், சூலூர் எம்எல்ஏவாக கந்தசாமி பதவியேற்றுக் கொண்டனர்.

    10:29 (IST)29 May 2019

    சாத்தூர் எம்எல்ஏ!

    சாத்தூர் எம்எல்ஏவாக ராஜவர்மன் பதவியேற்பு. சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம்  செய்து வைத்தார். 

    10:29 (IST)29 May 2019

    பரமக்குடி எம்எல்ஏ!

    பரமக்குடி எம்எல்ஏவாக சதன் பிரபாகர் பதவியேற்றுக் கொண்டார். 

    10:22 (IST)29 May 2019

    Admk mlas Swearing  Ceremony live : அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

    அதிமுக எம் எல் ஏக்கள் பதவியேற்பு விழா லைவ்வாக

    10:18 (IST)29 May 2019

    தனபால் பதவி பிரமாணம்!

    சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வென்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் பதவியேற்பு- சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

    10:06 (IST)29 May 2019

    பதவியேற்பு விழா!

    பதவியேற்பு நிகழ்வு தமிழ்நாடு சட்டமன்றத்திலுள்ள சபாநாயகர் அறையில் நடைபெறவுள்ளது.

    Tamilnadu political events today: இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் தனபால் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மோடி பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, கமலுக்கும் அழைப்பு இல்லை

    தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி தேர்தலும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து எஞ்சிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 9 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு சட்டசபையில் சபாநாயகர் தனபால் முறைப்படி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்

    Tamilnadu Dmk Aiadmk
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment